ளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., ஆளும் கட்சியின் எதிரிக் கட்சியான அ.ம.மு.க. இந்த மூன்று கட்சிகளின் கரன்சிக் கவனிப்பால் இந்த மே மாதமே தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள். இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக பணம் போடும் அ.தி.மு.க. டெக்னிக்கை மே. 08-10 இதழில் எழுதியிருந்தோம்.

ddஇதைப் பார்த்த தி.மு.க.வினரும் அ.ம.மு.க.வினரும் அனைத்து வீடுகளின் ஜன்னலோரம் காவல் காக்க ஆரம்பித்ததும் அவர்களுடன் அ.தி.மு.க.வினர் சமரச உடன்படிக்கையை ஏற்படுத்தியதால் கரன்சி சப்ளை ஏரியாவை மூன்று கட்சியினரும் பார்டர் பிரித்துக் கொண்டனர்.

அ.தி.மு.க. வலுவாக இருக்கும் நிலையூர், கைத்தறி நகர், சௌராஷ்டிரா காலனி, முத்தரையர்கள் அதிகம் வசிக்கும் வலையங்குளம், எலியார்பத்தி, சோழங்குருணி, பாரைபத்தி, நல்லூர், வலையபட்டி பகுதிகளில் அதிக கவனமும் நேரமும் எடுத்து பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். கடந்த ஒரு வருடமாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தி வருவதால் டாக்டர் சரவணன் மீது இருக்கும் பாசத்தால் பாதிக்கும் மேற்பட்ட முத்தரையர் ஓட்டுக்கள் உதயசூரியனுக்கு விழும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பா.ஜ.க. ஆதரவு மனநிலை கொண்ட சௌராஷ்டிரா சமூக மக்கள் இரட்டை இலை பக்கமே நிற்கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டிக்காக முதல்வர் எடப்பாடி இரு நாட்கள் பிரச்சாரம் செய்துவிட்டுப் போன பின், அ.தி.மு.க. முகாமில் உற்சாகம் தெரிகிறது. அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியும் கள்ளர் சமூகத்தினரும் வலுவாக இருக்கும் கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, தோப்பூர், பிராக்குடி, பனையூர், புளியங்குளம், பெருங்குடி ஏரியாக்களில் இரட்டை இலைக்கு கடுமையான சேதாரத்தை ஏற்படுத்துகிறார் தினகரன். இதனால் உற்சாகமாக இருக்கிறார் அ.ம.மு.க.வின் மகேந்திரன்.

Advertisment

அதேசமயம் தொடியபட்டி, குதிரைகுத்தி, குசவன்குண்டு, பெரிய ஆலங்குளம், பெருமானேந்தல், விரகனூர் கிராமங்களில் தினம்தோறும் கறி விருந்து போட்டு மக்களை திக்குமுக்காட வைக்கிறார்கள் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும் உதயகுமாரும். "இரண்டு லட்சம் பேருக்கும் மேல சாப்பிட்டிருக்கிறார்கள், அவர்கள் ஓட்டுப் போட்டாலே ஜெயித்துவிடுவோம்' என்றார்கள் அ.தி.மு.க.வினர். ஆனால் 11-ஆம் தேதி எடப்பாடி அந்தப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, கூட்டம் கூடாததோடு, அழைத்து வரப்பட்டவர்களும் எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோதே கிளம்பியதைப் பார்த்து, செல்லூர் ராஜுவும் உதயகுமாரும் அதிர்ச்சியாகிவிட்டனர்.

புதிய வாக்காளர்களை ம.நீ.ம.வும் நாம் தமிழர் கட்சியும் பிரிப்பதாலும் இப்போதைய கள நிலவரப்படியும் முதல் இடத்தில் இருக்கிறது உதயசூரியன். இரண்டாம் இடத்தைப் பிடிக்க இரட்டை இலையும் பரிசுப் பெட்டியும் மல்லுக்கட்டுகின்றன.

-அண்ணல்

Advertisment