திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் திருவண்ணாமலை தொகுதி தான் நட்சத்திர தொகுதி. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு. இத்தொகுதியில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலின்போது, பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக, புதிய பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும், அண்ணா மலையார் கோவில் மாடவீதி, திருப்பதி போல் மாற்றப்படும், புதிய காய்கறி - பூ மார்க்கெட் அமைத்துத் தரப்படும், கோவிலுக்கு யானை வாங்கித் தரப்படும், மாநகராட்சியாக தரமுயர்த்தப்படும், சாலைகள் மேம்படுத்தப்படும் என வாக்குறுதிகளை தந்திருந் தார். சொன்னதில், 50 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டித் திறக்கப்பட் டுள்ளது. 30 கோடியில் மாடவீதி சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். 29.5 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட் கட்டித் தந்துள்ளார். டைட் டல் பார்க், மீன் அங்காடி
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் திருவண்ணாமலை தொகுதி தான் நட்சத்திர தொகுதி. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு. இத்தொகுதியில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலின்போது, பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக, புதிய பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும், அண்ணா மலையார் கோவில் மாடவீதி, திருப்பதி போல் மாற்றப்படும், புதிய காய்கறி - பூ மார்க்கெட் அமைத்துத் தரப்படும், கோவிலுக்கு யானை வாங்கித் தரப்படும், மாநகராட்சியாக தரமுயர்த்தப்படும், சாலைகள் மேம்படுத்தப்படும் என வாக்குறுதிகளை தந்திருந் தார். சொன்னதில், 50 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டித் திறக்கப்பட் டுள்ளது. 30 கோடியில் மாடவீதி சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். 29.5 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட் கட்டித் தந்துள்ளார். டைட் டல் பார்க், மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையில் குடிநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் 64 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப் பட்டுவருகின்றன. சிட்கோ தொழிற்பேட்டை, விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என முத லமைச்சர் அறிவிப்பு செய்துள் ளார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பதால் திருவண்ணாமலை நகரத் துக்கு வரும் 9 தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் பக்காவாக போடப்பட்டுள்ளன. கிராமப்புற சாலை களும் போடப்பட்டுள்ளன. அதேவேளை திருவண்ணாமலை மாநகரத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் மாநகரச் சாலைகள் கந்தல்கோலமாகவுள்ளன. மாநகரின் போக்குவரத்துப் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, இதை சீர்படுத்தாம லிருப்பது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கிராமப்புற பிரச்சனைகளில் அமைச்சர் சொல்வது நடப்பதில்லை என்கிறார்கள்.
தி.மு.க. நிர்வாகிகள் நம்மிடம், "தொகுதிக்கு சம்பந்தமில்லாத நிர்வாகி களை திருவண்ணாமலை ஒன்றிய பகுதிகளின் தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளார் அமைச்சர். அவர்களில் சிலருக்கு தேர்தல் அனுபவமே கிடையாது. இதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் தேர்தல் வேலை யில் என்ன குறைகண்டார்?'' என்கிறார்கள்.
இத்தொகுதியில் அமைச்சர் வேலு தான் மீண்டும் வேட்பாளர் என்பதால் தி.மு.க.வில் மற்றவர்கள் இங்கே போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், வரும் தேர்தலில் ஒரு லட்சமாக வித்தியாசத்தை உயர்த்தத் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார். அ.தி.மு.க.வில் 61 பேர் விருப்ப மனு தந்துள்ளனர். இவர்களில் 15 நிர்வாகிகள் தங்களுக்காக மனு தந்துள்ளனர். தங்களுக்கு கேட்பதை விட யாருக்கு தரக்கூடாது என ஒவ்வொரு கோஷ்டியும் சதுரங்க ஆட்டம் ஆடிவரு கின்றனர். அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் இருவரில் ஒருவரை திருவண்ணாமலையில் நிற்கச்சொன்னார் இ.பி.எஸ். அவர்கள் இருவருமே மறுத்ததோடு, தங்கள் சார்பில் ஆளுக்கு ஒருவரை முன்னிறுத்தியுள்ளனர். அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தனது ஆதரவாளரான, நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திருவண்ணாமலை ஒ.செ. கலியபெருமாளை முன் னிறுத்துகிறார். ராமச்சந்திரன் தன் சார்பாக மாநகரச் செயலாளர் செல்வத்தை முன்னிறுத்துகிறார். 2016-ல் திருவண்ணாமலை தொகுதியில் நின்று தோல்வியடைந்த பெருமாள்நகர்.ராஜனும் சீட் கேட்கிறார். இம்மூவரைத் தாண்டி, மாவட்ட இணைச்செயலாளர் சில்பி.சகானா, இளைஞர் பாசறை மா.செ. டிஸ்கோ.குணசேகரன் எனச் சிலர் முயற்சிக்கிறார்கள்.
சீட் வேண்டுமென்பவர்கள் 10 கோடி ரூபாயை தலைமையிடம் டெபாசிட் செய்ங்க என இ.பி.எஸ். சொல்வதால், "அமைச்சர் வேலு அளவுக்கு என்னால் செலவு செய்ய முடியாது, தலைமை செலவு செய்வதாக இருந்தால் நான் நிற்கிறேன்' என்கிறார் ராஜன். மாநகர செயலாளர் செல்வமோ, "எங்கிட்ட அவ்வளவு பணமில்லை' எனத் தப்பிக்கப் பார்க்கிறார். மற்ற நிர்வாகிகளோ, 10 கோடியா என மலைப்பாகப் பார்க்கின்றனர். அதே நேரத்தில், கலியபெருமாளுக்காக நான் பணம் கட்டுகிறேன் என முன்வரும் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியை பார்த்து பலருக்கும் ஆச்சர்யம்.
நம்மிடம் பேசிய நிர்வாகிகள், "நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தோல்வியடைந்து பணமில்லாமல் மூன்று ஆண்டுகளாக ஹோட்டல் கட்டுமானப் பணியை முடிக்கமுடியாமல் பாதியில் நிறுத்திவைத்துள்ளார் கலியபெருமாள். "அவருக்காக 10 கோடி ரூபாயை நான் கட்டுகிறேன்' என அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது'' என சந்தேகம் கிளப்புகிறார்கள்.
அ.தி.மு.க.வுடன் அன்புமணி பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. கீழ்பென்னாத்தூர் தொகுதியை கேட்கிறார் அன்புமணி. அதை ஒதுக்கும்பட்சத்தில் திருவண்ணாமலை வேட்பாளராக அ.தி.மு..க. கிழக்கு மா.செ. ராமசந்திரனை களமிறக்குவார் இ.பி.எஸ். என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில். பா.ஜ.க. தரப்பிலும் இந்த முறை சீட் வாங்க முயற்சிக்கிறார்கள்.
இத்தொகுதியில் வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினர், முதலியார்கள் வலிமையாக உள்ளார்கள். வெற்றியைத் தீர்மானிப்பதில் சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு முக்கிய பங்குள்ளது. திராவிட அரசியலில் முக்கியமான பகுதி திருவண்ணாமலை. இங்கு தி.மு.க. பலமாக உள்ளதால் இந்த நட்சத்திரத் தொகுதியில் உதயசூரியன் பிரகாசிக்கிறது.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us