Advertisment

யாருக்கு சீட்? -போளூர் தொகுதி நிலவரம்!

polur

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. அதில் போளூர் தொகுதியும் ஒன்று. தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. 

Advertisment

2021 தேர்தலின்போது, "களம்பூரில் 100 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்கா அமைத்துத்தரப்படும், களம்பூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்துதரப்படும், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றித்தரப்படும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து அலியாபாத் ஏரிக்கு நீர் கால்வாய் சீரமைத்துத் தரப்படும், களம்பூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைத்துத் தரப்படும், போளூரில் பெண்கள் அரசு கலைக்கல்லூரி உருவாக்கு வேன், திருமலையில் ஆயிரமாண்டு பழமை  யான ஜைனர் கோவிலை சுற்றுலாத் தலமாக்குவேன், முடையூரில் சிற்பக் கல்லூரி அமைப்பேன், பொண்ணையாறு -செய்யாறை இணைக்க முயற்சிசெய்வேன், போளூருக்கு தொழிற்பேட்டை கொண்டுவருவேன்'               என வாக்குறுதிகளை அடுக்கி

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. அதில் போளூர் தொகுதியும் ஒன்று. தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. 

Advertisment

2021 தேர்தலின்போது, "களம்பூரில் 100 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்கா அமைத்துத்தரப்படும், களம்பூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்துதரப்படும், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றித்தரப்படும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து அலியாபாத் ஏரிக்கு நீர் கால்வாய் சீரமைத்துத் தரப்படும், களம்பூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைத்துத் தரப்படும், போளூரில் பெண்கள் அரசு கலைக்கல்லூரி உருவாக்கு வேன், திருமலையில் ஆயிரமாண்டு பழமை  யான ஜைனர் கோவிலை சுற்றுலாத் தலமாக்குவேன், முடையூரில் சிற்பக் கல்லூரி அமைப்பேன், பொண்ணையாறு -செய்யாறை இணைக்க முயற்சிசெய்வேன், போளூருக்கு தொழிற்பேட்டை கொண்டுவருவேன்'               என வாக்குறுதிகளை அடுக்கியிருந்தார். வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போளூர் நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது, போளூர் பேருந்து நிலையம் சீரமைப்பு செய்தது ஆளும்கட்சியான தி.மு.க. இது தன்னால்தான் நடந்ததென ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுவருகிறார். 

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளாக போளூர் தொகுதியை மறந்துவிட்டார். கலசப்பாக்கம் தொகுதியைச் சுற்றிவருகிறார். "எனக்கு போளூர் தொகுதி வேண்டாம், கலசப்பாக்கம் தொகுதிதான் வேண்டும், எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கித் தாங்க' என தலைமையிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. "அவர் போளூர் தொகுதி எம்.எல்.ஏ.தானே அவரை அங்கேயே நிற்கச்சொல்லுங்க?' என மல்லுக்கு நிற்கிறார் கலசப்பாக்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம்.

அ.தி.மு.க. மத்திய மா.செ கட்டுப்பாட்டில் போளூர் தொகுதி வருகிறது. அத்தொகுதியின் மா.செ.வாக இருப்பவர் ஜெயசுதா. இவர் போளூர் தொகுதியின் முன்னாள் எம்.எல். ஏ.வும்கூட. போளூர் தொகுதியில்தான் அவர் குடியிருக்கிறார். அவரும் எனக்கு போளூர் தொகுதி வேண்டாம், ஆரணி தொகுதி தாங்க எனக் கேட்டுள்ளார். இருவருமே போளூர் தொகுதிக்கு விருப்பமனு தரவில்லை. 

இதன் பின்னால் அமைச்சர் வேலு இருக்கிறார் என இ.பி.எஸ்.ஸுக்கு மனுவைத் தட்டிவிட்டுள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், "தி.மு.க.வில் போளூர் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் உள்ளார். அவர் இங்கே போட்டியிட்டால் தங்களால் வெற்றிபெற முடியாது என நினைத்து ஒதுங்குகிறார்களா? இல்லை அமைச்சர் தரப்பிடம் செட்டிலாகி தாங்கள் போட்டியிடும் தொகுதியில் தி.மு.க. கடுமையாக வேலை செய்யவேண்டாம் என டீல் செய்துகொண்டார்களா எனத்தெரியவில்லை சிட்டிங் எம்.எல்.ஏ.வும், மா.செ.வும் இந்த தொகுதியே வேண்டாம் என ஓடுகிறார்கள். அம்மா (ஜெ.) இருந்திருந்தால் இப்படி சொல்வார்களா? இந்த தொகுதியில்தான் நிற்கவேண்டும், முடியாது என்பவர்களுக்கு தலைமை சீட்டே தரக்கூடாது'' எனக் கோபமாகப் பேசுகிறார்கள். 

முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்திடம், நீங்கள் போளூர் தொகுதியில் நில்லுங்கள் எனத் தலைமை வலியுறுத்துகிறது, அவரும் எனக்கு கலசப்பாக்கம் தாங்க என்கிறார். இவர்களோடு, அம்மா பேரவை மாவட்ட துணைச்செயலாளர் சுகுமார், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மா.செ. செந்தில்குமார், மா.செ. ஜெயசுதாவின் மகன் போளூர் ஒ.செ. விமல்ராஜ், சேத்பட் கிழக்கு ஒ.செ. ஸ்ரீதர் விருப்ப மனு தந்துவிட்டு காத்துக்கொண்டுள்ளனர். 

தி.மு.க.வில் யார் வேட்பாளர் என்கிற கேள்வி பெரிதாக எதிரொலிக்கிறது. தொகுதி தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் வேலுவின் மகன் கம்பனுக்கு சீட் தந்தால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கும் நிர்வாகிகள், அவர் இந்த தொகுதி யில் போட்டியிடவுள்ளார் என்கிறார்கள். அவருக்காக விருப்ப மனு செய்யவும் நிர்வாகிகள் தயாராகிவருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.வும் கடந்தமுறை நின்று தோல்வியைச் சந்தித்தவருமான கே.வி.சேகரன், மீண்டும் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கிறார். அவரது உடல்நிலையை காரணம்காட்டி வாய்ப்பில்லை என்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும், முன்னாள் சேர்மனுமான பாபு முயற்சித்துவருகிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.வி. ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார், சேத்பட் ந.செ.வும், பேரூராட்சி தலைவரின் கணவருமான முருகன் எதிர்பார்ப்பில் உள்ளார். அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தியோடு வலம்வந்த முன்னாள் சேர்மனின் மகனான பெரணம்பாக்கம் மணிகண்டன், தி.மு.க.வில் இணைந்து வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார். அவரும் சீட் பெறும் ஆசையில் தொகுதிப் பொறுப்பாளர் மருத்துவர் கம்பனை சுற்றிவருகிறார். 

பா.ஜ.க.வின் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஏழுமலை, தனக்காக அ.தி.மு.க.விட மிருந்து இந்த தொகுதியை வாங்கச்சொல்லி தலைமை யிடம் வலியுறுத்திவருகிறார். இல்லையெனில் அ.தி.மு.க.வில் போளூர் மத்திய மாவட்ட இளைஞர் இளம்பெண் அணியின் மாவட்டச் செய லாளராக உள்ள தனது மகன் செந்தில்குமார் அல்லது ஒ.செ.வாக உள்ள இன்னொரு மகன் ஸ்ரீதருக்கு கிடைக்கச் செய்யுங்கள் என அவர் பா.ஜ.க.வில் லாபி செய்கிறார்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn271225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe