ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க. மா.செ.வும், கைத்தறி மற்றும் கதர்த்துறை அமைச்சருமான காந்தி. இந்த தொகுதியில் 6 முறை நின்று, நான்கு முறை வெற்றி பெற்றவர். முதல்முறையாக அமைச்சர் பொறுப்பு வகித்து வருகிறார். தொகுதியில் வன்னியர்கள் அதிகம், அதற்கடுத்து பட்டியல் சமூகத் தினர், இஸ்லாமியர்கள், முதலியார்கள், யாதவர்கள் என்கிற வரிசையில் பலமாக உள்ளனர். வெற்றியை தீர்மானிப்பது இஸ்லாமிய வாக்குகளே.
2021 தேர்தலின்போது, ராணிப்பேட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும், வேலம் கிராமத்தில் வரதராசனாருக்கு சிலை அமைக்கப்படும், வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும், சிப்காட்டிலுள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அரசு பாலிடெக்னிக் கொண்டுவரப்படும், மஞ்சள் விற்பனைச் சந்தை தொடங்கப்படும், ராணிப்பேட்டை, மேல்விசாரம், வாலாஜா பேட்டையில் பாதாளச்சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும், புதிய பேருந்து நிலைய முனையம் அமைக்கப்படும், புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் முஸ்லிம்களுக்கு
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க. மா.செ.வும், கைத்தறி மற்றும் கதர்த்துறை அமைச்சருமான காந்தி. இந்த தொகுதியில் 6 முறை நின்று, நான்கு முறை வெற்றி பெற்றவர். முதல்முறையாக அமைச்சர் பொறுப்பு வகித்து வருகிறார். தொகுதியில் வன்னியர்கள் அதிகம், அதற்கடுத்து பட்டியல் சமூகத் தினர், இஸ்லாமியர்கள், முதலியார்கள், யாதவர்கள் என்கிற வரிசையில் பலமாக உள்ளனர். வெற்றியை தீர்மானிப்பது இஸ்லாமிய வாக்குகளே.
2021 தேர்தலின்போது, ராணிப்பேட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும், வேலம் கிராமத்தில் வரதராசனாருக்கு சிலை அமைக்கப்படும், வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும், சிப்காட்டிலுள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அரசு பாலிடெக்னிக் கொண்டுவரப்படும், மஞ்சள் விற்பனைச் சந்தை தொடங்கப்படும், ராணிப்பேட்டை, மேல்விசாரம், வாலாஜா பேட்டையில் பாதாளச்சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும், புதிய பேருந்து நிலைய முனையம் அமைக்கப்படும், புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் முஸ்லிம்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன், தோல் தொழிற்சாலை கழிவுநீர் பாலாற்றில் கலப்பதை தடுப்பேன், கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும் என வாக்குறுதிகள் தந்திருந்தார்.
இதில், வரதராசனாருக்கு சிலை, பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு ஒன்றிய அரசு இன்னமும் அனுமதி வழங்கவில்லை. அதே நேரத்தில், தொகுதி முழுவதும் எதிர்க்கட்சியினரே பாராட்டும் வகையில் சாலை வசதிகளை பக்காவாக செய்து தந்துள்ளார்.
அவருடனே இருக்கும் கட்சி நிர்வாகிகள் நம்மிடம், "இலைமறை காயாக சாதி பார்த்தவர், 2021 தேர்தலின்போது சாதி பார்த்தார். தேர்தல் முடிந்து கோவில் திருவிழாவுக்கு நன்கொடை கேட்டு வன்னியர் சமுதாயத்தினர் அவரது வீட்டுக்கு சென்றபோது, "நீங்களெல்லாம் அ.தி.மு.க.வுக்குதானே ஓட்டு போட்டீங்க, அவங்கட்டயே போய் நன்கொடை வாங்கிக்கங்க' என விரட்டினார். வாலாஜா ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரராக சங்கர் என்பவர் இருக்கிறார். அவர்தான் அதிகளவு ஒப்பந்தங்கள் எடுத்துள்ளார். இவர் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க. மா.செ. சுகுமாருடன் இருப்பவர். அமைச்சர் எங்க சாதிக்காரர் எனச்சொல்லி வலம் வருகிறார். வாலாஜா ஒ.செ.வும், சேர்மனுமான சேஷா.வெங்கட் போன்றவர்களால் கட்சியினரிடம் பெயரை கெடுத்துக் கொண்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி களுடன் நெருக்கமில்லை என்கிறார்கள். இதெல்லாம் அவருக்கு பாதகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகளின் எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம், மக்களிடம் ஆதரவு பெறுவதில்தான் சுணக்கம் உள்ளது.
இந்தத் தொகுதியில் அமைச்சர் காந்தியே மீண்டும் களமிறக்கப்படவுள்ளார். அவருக்கு போட்டியென கட்சியில் யாருமில்லை என்பதால் யாரும் கேட்கப்போவதில்லை. அதே நேரத்தில், அவரது குடும்பத்தில் அவருக்கு போட்டியாளர் உருவாகியுள்ளார். அமைச்சர் காந்தியின் மகனும் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர்களில் ஒருவருமான வினோத் காந்தி இப்போதே தொகுதியில் தன்னை முன்னிலைப் படுத்தி பணியாற்றிவருகிறார். விநோத் காந்தியுடன் வலம் வருபவர்கள், அமைச்சருக்கு அடிக்கடி உடல்நிலை முடியாமல்போகிறது. அதனால் தனக்கு சீட் வாங்கித்தரச் சொல்லி அப்பாவிடம் சண்டை யிடுகிறார். அமைச்சர், தனக்கு சீட் வேண்டாமென முடிவெடுத்தால் விநோத் காந்திக்கு வாங்கித்தந்து போட்டியிடச்செய்வார்'' என்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் ராணிப்பேட்டை மேற்கு மா.செ.வாக சுகுமார் உள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டார். அவரே வரும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்தார்கள். அவரோ, எனக்கு இந்த தொகுதி வேண்டாம், பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதியை கொடுங்களென்று கேட்டுவருகிறார். ராணிப்பேட்டை தொகுதிக்குள் வரும் மேல்விஷாரம், ராணிப்பேட்டையிலுள்ள சுமார் 40 ஆயிரம் இஸ்லாமியர்களின் வாக்கில், 80 சதவீத வாக்குகளை கடந்த தேர்தலில் காந்தி பெற்றதால் சுகுமார் தோல்வியை சந்தித்தார். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால், சிறுபான்மையின வாக்குகள் சுத்தமாகக் கிடைக்காது. மீண்டும் இதே தொகுதியில் நின்றால் தோல்வியே கிடைக்குமென்பதால் வேறு தொகுதி கேட்கிறார். அதேபோல் முன்னாள் மா.செ.வும், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளருமான சுமைதாங்கி ஏழுமலை, சீட் கேட்பாளராக உள்ளார். இவர், 2016-ல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர். ஏழுமலைக்கு தந்து வெற்றி பெற்றுவிட்டால் தனது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமெனப் பயப்படும் சுகுமார், இந்த தொகுதியை பா.ஜ.க.வுக்கு தள்ளிவிட முயற்சிக்கிறார். பா.ஜ.க. நிர்வாகிகளிடம் "இந்த தொகுதியை கேளுங்கள், இந்துக்களின் வாக்குகள் மொத்தமாகக் கிடைக்கும்' எனச்சொல்லி தூபம் போட்டுவருகிறார், பா.ஜ.க.வின் வேலூர் இப்ராஹிமுக்கு கிடைக்க இவரே வழிசெய்து வருகிறார்.
அமைச்சர் காந்தி நிற்பது உறுதி. ஒருவேளை அவர் நிற்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் நாசே.ராமச்சந்திரன் தனது மகன் ராஜேஷ், தங்கபாலு தனது மகன் கார்த்திக்குக்காக கேட்டுவருகிறார்கள். எம்.பி. விஷ்ணுபிரசாத், மாவட்ட நிர்வாகி வாலாஜாபேட்டை கோட்டீஸ்வரனை முன்னிறுத்துகிறார். பா.ம.க.வில் அன்புமணி அணியை சேர்ந்த வழக்கறிஞர் ஜானகிராமன் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில் அமைச்சர் காந்தியை மீண்டும் களமிறக்கும் பட்சத்தில், தி.மு.க. வெற்றிபெறும் நிலையிலேயே நிலவரம் உள்ளது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us