ருபுறம் கூட்டணிகள் உறுதியாகிவரும் நிலையில், மறுபுறம் எந்தத் தொகுதியில் யாரை நிறுத்துவது என வேட்பாளர் தேர்விலும் கட்சிகள் மும்முரம் காட்டுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சியும் யாரை வேட்பாளர்களாகப் பரிசீலித்து வருகிறதெனப் பார்ப்போம்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்கும் இடையிலேதான் போட்டியாக இருந்துள்ளது. 

Advertisment

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருந்தாலும் கிருஷ்ணகிரியில் பர்கூர், ஓசூர் இரு சட்டமன்றத் தொகுதி களையே வெற்றிபெற்றிருந்தது. மற்ற 3 தொகுதி களில் 2-ல் அ.தி.மு.க.வும், ஒரு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இந்த சூழ்நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை தி.மு.க. கோட்டையாக மாற்ற அப்போது பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற மதியழகனை மாவட்ட செயலாளராக நியமித்து கட்சியை இம் மாவட்டத்தில் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டது தலைமை. 

அதன்படி தற்போது தி.மு.க. மா.செ.வான மதியழகன் கிருஷ்ணகிரி ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து கட்சியைப் பலப்படுத்தி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவுக்கு தி.மு.க.வையும் கூட் டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். கிருஷ்ண கிரியின் ஆறு சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் மையமாக இருப்பது கிருஷ்ணகிரி. இத்தொகுதியில் சென்றமுறை முன்னாள் மா.செ.வான செங்குட்டுவன் நின்று தோற்றுப்போனார், அ.தி.மு.க. வெற்றிபெற்றது. 

Advertisment

இந்த முறை மா.செ.வான மதியழகனுக்கே சீட் என பேசப் பட்டாலும், தி.மு.க. தலைமையோ சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை மீண்டும் அங்கே நிறுத்துவதாக இருக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. கோட்டையான பர்கூரில் மதி யழகனே நின்றால்தான் வெல்லமுடி யும் என்பதாலும் பர்கூரில் அவ ருக்கே வாய்ப்பு கிட்டும். ஆகையால் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியை ஏற்கனவே நின்று தோற்றுப்போன முன்னாள் மா.செ. செங்குட்டுவன் கேட்டுவருகிறார். அதேவேளையில் கிருஷ்ணகிரி மண்ணின் மைந்தனும் ஆசிரியரு மான, பி.டி.அன்பரசுவும் ரேஸில் உள்ளார்.

அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல். ஏ.வும், மா.செ.வுமான அசோக்குமாருக்கு மீண்டும் சீட் என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. இவர் கே.பி.யின் நம்பிக்கைக்குரியவராகவும் விசுவாசியாக வும் வலம்வருகிறார். தி.மு.க.வுக்கு டஃப் கொடுக்க, இவரை விட வேறு யாரும் இருக்கமுடியாது எனுமளவுக்கு களப்பணி இருக்கும். நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரியில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட வீரப்பன் மகள் வித்யா நிற்பதாக இருந்த நிலையில், தலைமையோ மேட்டூர் சட்டமன்றத் தொகுதியை முன்கூட்டியே அறிவித்த காரணத்தால், விண்வெளி ஆராய்ச்சி யாளரும் மாவட்டப் பொறுப்பாளரு மான தம்பிதுரைக்கு வாய்ப்பு என் கிறார்கள். த.வெ.க. கட்சியில் மாவட்டப் பொறுப்பாளர்களில் ஒருசிலருக்கே சீட் என்பதாகவும், பொறுப்பு இல்லாதவர் களுக்கு வாய்ப்பு வழங்குவதாக திட்டமிட்டுள்ளது. ஈரோடு முதல் கிருஷ்ணகிரிவரை செங்கோட்டையன் தேர்வுசெய்து தலைமைக்கு வேட்பாளர் பட்டியல் அனுப்பும்நிலையில், அ.தி.மு.க.விலிருந்து விலகி, த.வெ.க. வந்த எக்ஸ் சேர்மன் மதுவுக்கு வாய்ப்புள்ளதாம். மத்திய மாவட்ட பொறுப்பாளரான சுரேஷுக்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

krishnagiri1

ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஒய். பிரகாஷுக்கு மீண்டும் சீட்டு உறுதி யாகியுள்ளது. அதுமட்டுமில்லா மல் அப்பகுதி மக்களிடம் நற் பெயரையும் இளைஞர்களின் அன்பையும் சம்பாதித்து அப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அடுத்தபடியாக ஓசூர் மாநகராட்சி மேயராக இருந்துவரும் சத்யாவுக்கு வாய்ப் புள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் தற்போது கவுன்சில ராக இருக்கும் மாதேஷும் சீட் எதிர்பார்க்கிறார்.  இவர் தொகுதி மக்களிடத்தில் நன்கு அறிமுக மானவர். மேலும் கவுன்சிலர் பதவியில் நலத்திட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றி, நல்லபெயர் எடுத்துள்ளார். அ.தி.மு.க. முன் னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சீட் உறுதி. இருந்தா லும், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் இந்தத் தொகுதி தனக்கு வேண்டும் என முட்டி மோதிவருகிறது. அந்த வகையில் மாநிலப் பொறுப் பாளரான நாகராஜ் சீட் கேட்டுள்ளாராம். த.வெ.க. தொழிலதிபரான மஞ்சு நாத்துக்கு வாய்ப்பு என்கிறார்கள். மேலும் அ.தி.மு.க.விலிருந்து வந்த சம்பங்கிக்கும், மதுவுக்கும், வேப் பன ஹள்ளி கிருஷ்ணகிரி தொகுதி களில் வாய்புள்ளதால் நிச்சயம் மஞ்சுநாத்துக்கு ஓசூரில் வாய்ப் புண்டு என்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் சென்றமுறை நின்று தோற்றுப்போன கீதா லட்சுமிக்கே வாய்ப்பு என பேசப்படுகிறது. 

வேப்பனஹள்ளி சட்ட மன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கே.பி.முனுசாமிக்கு வாய்ப்பு கிட்டும். அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி இருக்கும் சூழ் நிலையில் வன்னியர் சமூக வாக்கு அதிகமாக உள்ள பகுதி என்ப தாலும், பா.ம.க.வுக்கு தர்மபுரியில் சீட்டு கொடுப்பதால் இங்கு அ.தி.மு.க.வுக்கே வாய்ப்பு என்பதாலும் கே.பி. மீண்டும் அங்கே நிற்கவே ஆசைப்படுகிறார். தலைமையும் அதற்கு செவிசாய்த்துள்ளதாம். தி.மு.க. சார்பில் இத்தொகுதியில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய மா.செ. மதியழகனுக்கு ஒதுக்கப்படும் நிலையில் முன்னாள் மா.செ. தனக்கு வேப்பனஹள்ளி கிடைத்தால் ஓ.கே. என சொல்லியுள்ளாராம். மேலும் ஏற்கனவே அதே தொகுதியில் நின்று தோற்றுப்போன முருகன் வன்னியர் சமூகம் என்பதால், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என காத்துக் கிடக்கிறார். இந்த சூழ்நிலையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு என்ற துணை முதல்வரின் கருத்தின் அடிப்படையில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சீனிவாசன் இத்தொகுதி வேண்டும் எனக் கேட்டுவருகிறார். உதயநிதியுடனே பயணிக்கும் அவருக்கும் சீட் கிடைக்க சாத்தியமிருக்கிறது.  இச்சூழ்நிலையில் யாருக்கு சீட்டு என்பதில் அவரவர் திறமைக்கேற்ப தலைமையிடம் முட்டிமோதுகிறார்கள். அ.தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்த சம் பங்கிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து தமிழகம் திரும்பும்போது அவர் வந்த கார் பல சிக்கல்களுக்கு உள்ளாகியது. அந்த கார் இந்த சம்பங்கியுடையதுதான். நாம் தமிழர் கட்சியில் சென்றாண்டு வாய்ப்பு கொடுக்கப்பட்ட சக்திவேலுக்கே இம்முறையும் வாய்ப்பு, 

பர்கூரில், தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மதியழகனுக்கு கிருஷ்ணகிரியை ஒதுக்கவுள்ளதால், தலைமையின் அடுத்தகட்ட பார்வை மாவட்ட சேர்மன் தட்ரள்ளி நாகராஜ் மீதுள்ளது. மாவட்ட சேர்மன் பதவி வகித்தவர், தற்போது அடுத்தகட்டமாக இந்த சீட்டிற்கு காய்நகர்த்தியுள்ளார். ஆனாலும் பலருக்கு இவரது நகர்வு பிடிக்கவில்லை. ஆகையால் ஊத்தங்கரை சேர்மனான குமரேசனுக்கு வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையின் மகள் லாஸ்யாவுக்கு பர்கூரில் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க. வந்த பரிதா நவாப்புக்கும் பர்கூர் மீது ஒரு கண்ணிருக்கிறது. மக்கள் செல்வாக்கு இருப்பதாலும் இவருக்கு வாய்ப்பு கிட்டும். த.வெ.க.வில் முரளிதரனுக்கு வாய்ப்புள்ளதாம். மா.செ. என்பதே இவரது பலம். 

தளி, தி.மு.க. கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கே என்பது எழுதப்படாத நியதியாக இருந்துவருகிறது. இந்தமுறையும் தளி ராமச்சந்திரனுக்கே இங்கு சீட். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு வழங்கவும் வாய்ப்பு. இதனால் பா.ஜ.க. நாகராஜுக்கு இங்கு சீட் கிட்டும். இல்லையெனில் பா.ம.க.வுக்கு வழங்கப்பட லாம். அ.தி.மு.க.விலிருந்து விலகி அ.ம.மு.க. சென்று தற்போது த.வெ.க. சென்றுள்ள அன்வர் பாஷாவுக்கு சீட் எனச் சொல்லப்படுகிறது. 

ஊத்தங்கரை தனித்தொகுதி சென்ற முறை தி.மு.க.வில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கொடுக் கப்பட்டது. 

அதேபோல கொடுத்தால் இந்த முறையும் ஆறுமுகத்திற்கே வாய்ப்பு. வி.சி.க.வுக்கு கொடுக்கப்படுமாயின் மா.செ.வான குபேந்திர னுக்கும், மண்டலப் பொறுப்பாளரான அசோகனுக்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படு கிறது. இந்த முறை தி.மு.க. வாய்ப்பு கொடுத்தே ஆகணும் என ஒற்றைக்காலில் நிற்கும் உடன்பிறப்புகளால் மாவட்ட துணைச் செயலாளரான ஆசிரியர் சந்திரனுக்கு சீட் கிடைக்கலாம். மருத்துவர் கந்தசாமி, மருத்துவர் மாலதி, லயோலா சேகர் இன்னும் சிலர் முட்டிமோதுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தமிழ்ச்செல்வனுக்கும், மருத்துவர் இளையராஜாவுக்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

-சே