ஓமலூர் சட்ட மன்றத் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், ஆதிதிராவிடர், கொங்கு வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தினர் கணிசமாகவும் இருக்கின்றனர். 1971 முதல் 2021 வரையிலான 12 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. ஒருமுறையும், அ.தி.மு.க. 8 முறையும் வெற்றிபெற்று, அ.தி.மு.க. ஆதிக்கம் செலுத்துகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் ஆர்வலர்களிடம் கேட்டபோது, "ஓமலூர் தொகுதி, எப்பவுமே அ.தி.மு.க. கோட்டை தான். ஆனாலும் இம்முறை தி.மு.க. நேரடியாகக் களமிறங்குமெனத் தெரிகிறது. அ.தி.மு.க.வில் "சிட்டிங்' எம்.எல்.ஏ. மணி, மாஜி எம்.எல்.ஏ. வெற்றிவேல், டெக்ஸ்டைல் அதிபர் "பஞ்சுகாளிப் பட்டி' முருகேசன் ஆகியோர் சீட் பெறும் முனைப்பில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் நிழலான இளங்கோவனுக்கு நெருக்கமாக இருப்பதோடு, பண பலம், வன்னியர் சாதி பலத்தோடுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. மணிக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
கவுண்டர் சமூகத்திற்கு வாய்ப்பென்றால், பஞ்சுகாளிப்பட்டி முருகே
ஓமலூர் சட்ட மன்றத் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், ஆதிதிராவிடர், கொங்கு வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தினர் கணிசமாகவும் இருக்கின்றனர். 1971 முதல் 2021 வரையிலான 12 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. ஒருமுறையும், அ.தி.மு.க. 8 முறையும் வெற்றிபெற்று, அ.தி.மு.க. ஆதிக்கம் செலுத்துகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் ஆர்வலர்களிடம் கேட்டபோது, "ஓமலூர் தொகுதி, எப்பவுமே அ.தி.மு.க. கோட்டை தான். ஆனாலும் இம்முறை தி.மு.க. நேரடியாகக் களமிறங்குமெனத் தெரிகிறது. அ.தி.மு.க.வில் "சிட்டிங்' எம்.எல்.ஏ. மணி, மாஜி எம்.எல்.ஏ. வெற்றிவேல், டெக்ஸ்டைல் அதிபர் "பஞ்சுகாளிப் பட்டி' முருகேசன் ஆகியோர் சீட் பெறும் முனைப்பில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் நிழலான இளங்கோவனுக்கு நெருக்கமாக இருப்பதோடு, பண பலம், வன்னியர் சாதி பலத்தோடுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. மணிக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
கவுண்டர் சமூகத்திற்கு வாய்ப்பென்றால், பஞ்சுகாளிப்பட்டி முருகேசன் அல்லது மாஜி எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஜாக்பாட் அடிக்கலாம். பஞ்சுகாளிப்பட்டி முருகேசனுக்கு ஓமலூரில் சீட் இல்லாதபட்சத்தில் சங்ககிரியில் தரப்படலாம். ஓமலூரில் கடும் போட்டி ஏற்படுமெனில், சீனியரான செம்மலையை இறக்கிவிடவும் வாய்ப்புள்ளது.
தி.மு.க. தரப்பில் சேலம் மத்திய மா.செ.வான அமைச்சர் ராஜேந்திரன் கைகாட்டும் நபருக்குத்தான் கட்சி மேலிடம் சீட் கொடுக்கும். அமைச்சரின் ஆதரவாளர்களான காடையாம்பட்டி ஒ.செ. அறிவழகன், தளபதி நற்பணி மன்றத் தலைவர் மகேந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில து.செ. செல்லதுரை ஆகியோர் சீட்டை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. தரப்பில் வன்னியருக்கு சீட்டென் றால், தி.மு.க. தரப்பிலும் அதே சமூகத்தைச் சேர்ந்த மகேந்திரன் நிறுத்தப்படலாம். 2001-ல் அமைச்சர் ராஜேந்திரன் ஓமலூரில் களமிறங்கியபோது, அவருக்காக தீயாக தேர்தல் வேலை செய்தவர் மகேந்திரன். தொகுதியில் 25க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டிக் கொடுத்தது, கொரோனா காலத்தில் 30 லட்சம் ரூபாய்க்குமேல் நல உதவிகள் வழங்கியது என மகேந்திரனுக்கு அனைத்து சமுதாய மக்களிடமும் நல்ல பெயர் இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில், கரன்சி பாசனத்திற்கும் பஞ்சமில்லை.
அ.தி.மு.க. தரப்பில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் களமிறங்கினால், தி.மு.க. தரப்பிலும் அதே சமூகத்தைச் சேர்ந்த செல்லதுரையை களமிறக்க வாய்ப்புள்ளது. இவர், அ.தி.மு.க.விலிருந்தபோது, கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தீவிரமாக தேர்தல் வேலை செய்தவர். கருப்பூர் பேரூராட்சியில் செல்லதுரைக்கு நல்ல செல்வாக்கிருப்பது கூடுதல் பலம். அமைச்சர் ராஜேந்திரனின் "குட்புக்'கிலும் இருக்கிறார்.
தி.மு.க. சார்பில், இளைஞருக்கு வாய்ப் பென்றால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா தான் ஒரே சாய்ஸ். மத்திய மா.செ.வுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்த மென்றாலும், உதயநிதி ஸ்டாலினின் 'குட்புக்'கில் இருப்பவர். ஓமலூரில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும் மாஜி எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரும் பரிசீலனையில் இருக்கிறது'' என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
இது ஒருபுறமிருக்க, என்ன தான் ஓமலூர் தொகுதி அ.தி.மு.க.வின் வலுவான கோட்டையாக இருந்தாலும், இந்த முறை எளிதாகக் கரையேறிவிட முடியாது என்ற குரலும் பலமாக ஒலிக்கிறது. கிட்டத்தட்ட தி.மு.க.வுக்கும் இதே இடியாப்பச் சிக்கல் இருக்கிறது என்கிறார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். "ஓமலூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் பல்பாக்கி கிருஷ்ணன் 1989, 1991, 2011 தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எனப் பெயரளவுக்கு ஒரு பதவி கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் இறுதியில் திடீரென்று த.வெ.க.வில் இணைந்தார். ஓமலூரில் த.வெ.க.வுக்கு பெரும் படையைத் திரட்டும் வேலைகளில் இறங்கியுள்ளார். ஓமலூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்துதான் அவர் த.வெ.க.வில் இணைந்தார். த.வெ.க.வின் இளைஞர் பட்டாளமும் இணையும்போது எப்படியும் 25 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறுவாரென்றும், அ.தி.மு.க.வுக்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்துவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வுக்கும் ஒரு "ஸ்பாய்லர்' இருக்கிறார். 2006-ல் ஓமலூர் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வென்ற தமிழரசு, பள்ளிக்கூடம், விவசாயம், புளூமெட்டல் தொழில் என பிஸியாக இருக்கிறார். ஜி.கே.மணியின் உள்ளடியால் மருத்துவர் ராமதாசுடன் கோபித்துக்கொண்டு 2019-ல் தி.மு.க.வில் இணைந்தார். மாஜி எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனுடன் நெருக்கமாக இருப்பதால், அமைச்சர் ராஜேந்திரன் அவரை ஒதுக்கியே வைத்திருக்கிறார்.
அமைச்சர் ராஜேந்திரன் 2001-ல் ஓமலூரில் முதன்முதலாக போட்டியிட்டபோது அவருக்கு வேலைசெய்ய தமிழரசு மறுத்துவிட்ட பிளாஷ்பேக், இப்போதுவரை அவருக்கு எதிராக இருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட தமிழரசு சரியான சாய்ஸாக இருப்பார். சீட் கிடைக்காவிட்டால் சுயேச்சையாகக் களமிறங்கி 15 ஆயிரம் வாக்குகள் வரை சேதாரமாக்குவார்.'' என்கிறார்கள்.
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், வரும் தேர்தலில் பல்பாக்கி கிருஷ்ணனும், தமிழரசுவும் நிச்சயமாக "கேம் சேஞ்சர்'களாக இருப்பார்கள் என்றே பேசப்படுகிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us