ஈரோடு கிழக்கு:
விசைத்தறித் தொழிலும் அதனைச் சார்ந்த வணிகம், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் ஆகியன மிகுந்து காணப்படும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூக வாக்குகள் பெரும்பான்மையாகவும், அதனையடுத்து கவுண்டர், வன்னியர், பட்டியலினத் தவர்கள் சமூக வாக்குகளே தொகுதி வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
காவிரிக்கரையோரத் தொகுதியான ஈரோடு கிழக்கில் கிராமங்களே இல்லை. காவிரி ஆறு, காளிங்கராயன் கால்வாய்களில் சாயக்கழிவு கலப்பது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம், 15 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை பணி, பல்நோக்கு மருத்துவமனையாக தரமுயர்த்தப்பட்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை என்பன தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கின்றது.
குறுகிய காலத்திலேயே இரண்டு இடைத் தேர்தல்களைச் சந்தித்த இந்த சிறிய தொகுதியில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், தற்போதைய வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான முத்துசாமி சென்ற முறை போட்டியிட்ட மேற்குத் தொகுதியினை விட்டு கிழக்குத் தொகுதிக்கு மாற வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகின்றது. அவரைத் தவிர்த்து தி.மு.க.வில் தற்போதைய எம்.எல்.ஏ. சந்திரகுமார், குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளரான திருவாசகம் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராகக் களமிறங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தென்னரசுவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒதுக்கினால் த.மா.காங் கிரஸ் சார்பில் யுவராஜாவும் வேட்பாளருக்கான களத்தில் உள்ளனர்.
ஈரோடு மேற்கு:
2008-ல் மறுசீரமைப்பு மூலம் உரு வாக்கப்பட்ட இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மை சமூகமாகவும், முதலியார், பட்டியலின சமூக மக்கள் வெற்றி வேட்பாளரை தீர்மானிப்பவர் களாகவும் உள்ளனர்
ஈரோடு கிழக்கு:
விசைத்தறித் தொழிலும் அதனைச் சார்ந்த வணிகம், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் ஆகியன மிகுந்து காணப்படும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூக வாக்குகள் பெரும்பான்மையாகவும், அதனையடுத்து கவுண்டர், வன்னியர், பட்டியலினத் தவர்கள் சமூக வாக்குகளே தொகுதி வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
காவிரிக்கரையோரத் தொகுதியான ஈரோடு கிழக்கில் கிராமங்களே இல்லை. காவிரி ஆறு, காளிங்கராயன் கால்வாய்களில் சாயக்கழிவு கலப்பது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம், 15 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை பணி, பல்நோக்கு மருத்துவமனையாக தரமுயர்த்தப்பட்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை என்பன தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கின்றது.
குறுகிய காலத்திலேயே இரண்டு இடைத் தேர்தல்களைச் சந்தித்த இந்த சிறிய தொகுதியில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், தற்போதைய வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான முத்துசாமி சென்ற முறை போட்டியிட்ட மேற்குத் தொகுதியினை விட்டு கிழக்குத் தொகுதிக்கு மாற வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகின்றது. அவரைத் தவிர்த்து தி.மு.க.வில் தற்போதைய எம்.எல்.ஏ. சந்திரகுமார், குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளரான திருவாசகம் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராகக் களமிறங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தென்னரசுவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒதுக்கினால் த.மா.காங் கிரஸ் சார்பில் யுவராஜாவும் வேட்பாளருக்கான களத்தில் உள்ளனர்.
ஈரோடு மேற்கு:
2008-ல் மறுசீரமைப்பு மூலம் உரு வாக்கப்பட்ட இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மை சமூகமாகவும், முதலியார், பட்டியலின சமூக மக்கள் வெற்றி வேட்பாளரை தீர்மானிப்பவர் களாகவும் உள்ளனர். மாணவர்கள் படிக்க ஏராளமான நூலகங்கள் ஏற்படுத்திக் கொடுத் தது, சி.என்.சி. கல்லூரியை அரசுக் கல்லூரி யாக மாற்றியது, ஐ.ஏ.எஸ். பயிற்சி மற்றும் விளையாட்டு அரங்கம் அமைக்கவிருப்பது மற்றும் கனிராவுத்தர் குளத்தில் புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க இடம் தேர்வுசெய்தது உள்ளிட்டவை சாதனை களாக சிட்டிங் எம்.எல்.ஏ. முத்துச்சாமிக்கு பெயர் வாங்கிக்கொடுத்தாலும், ஊராட்சிக் கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம், போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை திட்டம் மற்றும் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளும் மக்களிடம் உண்டு.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அமைச்சரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான முத்துச்சாமி, குமார பாளையம் தொகுதிப் பொறுப்பாளரான திருவாசகம் ஆகியோரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளரான கே.வி. ராமலிங் கம், முன்னாள் ஈரோடு துணை மேயரான கே.சி.பழனிசாமி ஆகியோரும், பா.ஜ.க. எனில் மாவட்டத்தலைவ ரான செந்திலும் வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புண்டு.
மொடக்குறிச்சி:
அதிகளவில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பா.ஜ.க.வின் சரஸ்வதி. இத்தொகுதியின் வெற்றி வேட்பாளரைத் தீர்மானிப்பது கொங்கு வெள்ளா ளக் கவுண்டர் சமூக மக்களும், பட்டியலின மக்களுமே. காளிங்கராயன் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவேண்டும், கொடுமுடியிலிருந்து நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்திற்கு காவிரியாற்றின் குறுக்கே பாலம் வேண்டும், மஞ்சள் அதிகம் விளையும் மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும் என் பது இங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கை.
கடந்த முறை இங்கு தி.மு.க. போட்டியிட் டாலும் இந்த முறை தொகுதியை தி.மு.க. கூட் டணியிலுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல். இருப்பினும் தி.மு.க.வே. நேரடியாகக் களமிறங்கி னால் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் அணிச் செயலா ளர் சச்சினாந்தம் ஆகியோர் வேட்பாளருக்கான களத்தில் இருக்கின்றனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்றால் 2001, 2016 மொடக்குறிச்சி சட்டசபைத் தேர்தலில் தோல்வியுற்ற சூரியமூர்த்தி யும் களத்தில் உள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவசுப்பிரமணி யம், மீண்டும் பா.ஜ.க.வுக்கே இத்தொகுதி ஒதுக்கப் பட்டால் பா.ஜ.க. சார்பில் இப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மருமகள் கிருத்திகா சிவக்குமார் வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புண்டு.
பெருந்துறை:
இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. இதுவரை 9 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள் ளன. தி.மு.க. இத்தொகுதியில் வெற்றிபெற்றதே கிடையாது. கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாடார், வேட்டுவக் கவுண்டர்கள், பட்டியலின சமூக மக்களே இங்கு வெற்றி வேட்பாளரைத் தீர் மானிக்கின்றனர். விவசாயம், லாரி டிரான்ஸ் போர்ட் ஆகிய தொழில்கள் தொகுதிக்கு வாழ்வா தாரம் தருகின்றது. பெருந்துறை தொகுதியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள சிப்காட் கழிவுநீரால் 39 ஊராட்சிகளில் ஆழ்துளைக் கிணறுகளி-ருந்து வரும் நீர் குடிப்பதற்கு உகந்தல்ல என்பதால் குடிநீர் பிரச்சனை, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கவேண்டும் என்பன தொகுதியின் தலையாய பிரச்சனையாக இருக்கின்றன.
இத்தொகுதிக்கு தி.மு.க. சார்பில், அ.தி.மு.க.வி லிருந்து தி.மு.க.விற்கு வந்த தோப்பு வெங்கடாசலம், அ.தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப் பினர் ஜெயக்குமார், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் கே.செல்வராஜ் ஆகியோர் தொகுதி யின் வேட்பாளருக்கான களத்தில் உள்ளனர்.
பவானி:
பிரதான தொழிலாக விவசாயம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பலம் சேர்க்கும் இத்தொகுதி யில், வன்னியர், கொங்குவேளாளக் கவுண்டர்கள், முதலியார் சமூக வாக்குகள் தொகுதியின் வேட் பாளரைத் தீர்மானிக்கின்றன. சிட்டிங் எம்.எல்.ஏ. பதவி அ.தி.மு.க. வசமிருக்கும் இத்தொகுதியில் காவிரி, பவானி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதும், மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காததும் தொகுதியின் நீண்டகாலப் பிரச்சனையாக இருக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பவானி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே.ஏ.சேகர், கா.சு.மகேந்திரன் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருப்பண்ணனும் வேட்பாளருக் கான எதிர்பார்ப்பில் உள்ளனர். பலம்வாய்ந்த அ.தி.மு.க. தொகுதியான இத்தொகுதியில் அ.தி.மு.க. 8 முறையும், தி.மு.க.வும், காங்கிரசும் 2 முறையும், பா.ம.க., த.மா.கா., சுயேட்சை ஒருமுறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்:
தற்பொழுது தி.மு.க. வசமுள்ள இத்தொகுதி யில் விவசாயமும், செங்கல் சூளையும் முக்கிய தொழிலாக இருக்கின்றன. வன்னியர், நாடார், கொங்கு வேளாளக் கவுண்டர், நாயக்கர், லிங்காயத்து என அனைத்துத் தரப்பு சமூக மக்களும் தொகுதி முழுவதும் விரவி இருக்கின்றனர். தோனிமடுவு கால்வாய் திட்டம், காவிரி உபரிநீர் குடிநீர் திட்டம், மலைவாழ் மக்களின் சாதிச் சான்றிதழ் பிரச்சனை ஆகியனவே தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.
தி.மு.க. சார்பில் தற்போ தைய சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஏ.ஜி. வெங்கடாசலம், தூக்க நாயக்கன்பாளையம் பகுதி ஒன்றியச் செயலாளர் சிவபாலன் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா, உயர்நீதி மன்ற வழக்கறிஞரான வி.என்.எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர்.
கோபிசெட்டிபாளையம்:
விவசாயமே பிரதான தொழிலான இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாடார்கள், பட்டியலின மக்களும் தொகுதியின் வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கின்றனர். அ.தி.மு.க. சார் பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக் கப்பட்ட செங்கோட்டையன் தற்பொழுது த.வெ.க.வில் ஜாகை மாறியுள்ளார். 9 முறை வெற்றிபெற்ற இத்தொகுதி யில் அவரை வெற்றிபெற வைத்தது அ.தி.மு.க. வாக்குகளா..? இல்லை அவரது சொந்த செல்வாக்கா.? என்பதனை வருகின்ற தேர்தல் ரிசல்ட் கூறிவிடும்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பாக கோவை சூலூர் தொகுதிப் பொறுப்பாளரான சிந்து ரவிச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் கோபி நகரச் செயலாளரான பிரினியோ கணேஷ், செங்கோட்டையனின் அண்ணன் மகனான செல்வமும் வேட்பாளராகக் களத்தில் உள்ளனர். த.வெ.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான செங்கோட்டையன் போட்டி யிடலாம் என்கின்றது தொகுதி நிலவரம்.
பவானிசாகர் (தனி):
பட்டியலின மக்கள், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாடார், வேட்டு வக்கவுண்டர் சமூக மக்களின் வாக்குகள் தொகுதியின் வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கின் றன. சாலை, பாசன வசதி, உள் கட்டமைப்பு வசதிகள், மலை வாழ் மக்களுக்கு வாழ்விடத்தி லேயே தொழில் ஆகியன தொகுதியின் கோரிக்கையாக இருக்கின்றது. மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் மலைவாழ்மக் கள் அதிகமுள்ள பகுதிகளில் கம்யூனிஸ்ட்களும், அ.தி.மு.க.வின ரும் சரிசமமாக உள்ளனர்.
கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் விக்னேஷ் குமார், சத்திய மங்கலம் குணசேகரன் ஆகி யோர் தி.மு.க. வேட்பாளராகக் களம் காணக் காத்திருக்கையில், தொகுதியினை கூட்டணிக்கு கொடுத்தால் சி.பி.ஐ. சார்பில் 2011-ல் இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த சுந்தரம் போட்டியிடலாம் என்கின்றது கள நிலவரம். அ.தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி ஆகியோரும் வேட்பாளருக்கான களத்தில் உள்ளனர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us