ஒருபக்கம் செங்கோட்டையன், கோகுல இந்திரா ஆகியோரின் எதிர்ப்புகள், மறுபக்கம் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான மகேந்திரன் போன்ற கொங்கு மண்டல தளபதிகளின் ரகசிய சதி ஆலோசனைகள், இவற்றுக்கிடையே... ‘பொதுச்செயலாளர் தேர்வு குறித்த பிரச் சினையை தேர்தல் ஆணையமே விசாரிக்கும்’ என்ற நீதிமன்ற அதிரடி என அனைத்துக்கு மிடையே விரக்தி மனநிலையில் துவண்டு கிடக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடிக்கு எதிராகக் காய் நகர்த்துவதாக வெளிவரும் தகவல்கள் அக்கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அ.தி.மு.க.வின் கள நிலவரம் குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...
"யார் தலைமையில் கட்சி இருக்கிறது, யாரோடு கூட்டணி அமைக்கிறோம் என்பதையெல் லாம் கடந்து, ‘வரவிருக்கும் தேர் தலில் அ.தி.மு.க. வெற்றியடைந்து ஆட்சி அமைக்க வேண்டும்’ என்பதே இங்குள்ள அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. ஆனால், தான் தலைமையேற்ற பிறகு நடந்த 10 தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தும்கூட, அதற்கு காரணம் என்ன என்பதை ஆராய மறுக்கிறார் எடப்பாடி. கட்சியி லிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்து ஒன்றிணைந்த அ.தி.மு.க.வாக இருந்தால் மட்டுமே கட்சி வளரும் என சீனியர்கள் பலர் கூறியும் அதை ஏற்க மறுக் கிறார். கடந்தாண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சேலத்திலுள்ள எடப் பாடியின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்துப் பேசியபோது கூட, ஓ.பி.எஸ்.ஸை மட்டுமாவது கட்சியில் மீண்டும் சேர்க்குமாறு வலியுறுத்தினர். ஆனால், அதை முற்றிலுமாக மறுத்துவிட்டார் எடப்பாடி.
அட, ஓ.பி.எஸ்.ஸை கட்சியில் சேர்க்கா தது ஒருபுறம் இருக்கட்டும், கட்சியில் தனக்கு அடுத்தடுத்த நிலையில் இருப் பவர்களையாவது தக்கவைக்க முயற்சி செய்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தான் தலைமையேற்ற பிறகு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத எடப்பாடி பழனிசாமி, ‘கட்சியில் தன்னை மீறி எவருக்கும் பவர் இருக்கக்கூடாது’ என ஜெயலலிதா மாதிரி நினைத்தால் அது எடுபடுமா?
தான் சார்ந்துள்ள மேற்கு மண்டல மா.செ.க்களான வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, மகேந்திரன் ஆகியோர், அவரவர் மாவட்டத்தில் கோலோட்சி வருவதால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படுவ தாக நினைத்து, அவர்களைக் கேட் காமலேயே எடப்பாடி எடுத்துவரும் முடிவுகள்தான் செங்கோட்டையனை இன்று கொந்தளிக்க வைத்துள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோகுலஇந்திரா குமுறி யதற்கும் இதுதான் காரணம். எம்.ஜி.ஆர். காலம்தொட்டு, இன்று வரை கட்சியில் இருப்பவர்கள் என்று பார்த்தால், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என வெகுசிலர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி எடுக் கும் முடிவுகள் குறித்து அவர்கள் அனைவருமே அதிருப்தியில்தான் உள்ளனர் என்பது கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று திருச்சியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், “"ஓ.பன்னீர்செல் வத்தை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்பதற்காக தங்கமணி நாடகங்கள் நடத்தினார். இப்போது எடப்பாடி பழனிசாமியுடன் சிறப்பாகப் பயணித்து வருகிறார்'’என திண்டுக்கல் சீனிவாசன் பேசியதிலிருந்தே புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
எஸ்.பி.வேலுமணியைக் கலந் தாலோசிக்காமல் செ.ம.வேலுச்சாமிக்கு மாநில பதவி, தங்கமணி, மகேந்திரன் ஆகியோர் அனுப்பிய லிஸ்ட்டை குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு, தான் விரும்பியவர்களுக்கு மாவட்ட பதவிகள், சீனியரான செங்கோட் டையனைப் புறக்கணித்துவிட்டுத் தனது சம்பந்தியான கே.சி.கருப்பண்ணனுக்கு பதவி எனக் கோட்டைக்குள்ளேயே குத்து விளையாட்டு விளையாண்டால் யார்தான் பொறுத்துக்கொண்டிருப் பார்கள்?
தற்போது, பொதுச்செயலாளர் தேர்வு குறித்து தேர்தல் ஆணையமே விசாரிக்கும் என்று நீதிமன்றம் வேறு கூறிவிட்டது. ஒருவேளை, ‘பொதுச் செயலாளர் தேர்வு கட்சியின் நடைமுறைக்கு எதிரானது’ என அவர் கள் தீர்ப்பளித்தால், எடப்பாடியின் நிலை என்னவாகும்? எனவே, இதையெல்லாம் உணர்ந்து எடப்பாடி இனியாவது நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம்''” என்றவர்களிடம், “"பா.ஜ.க.வோடு கூட்டணியே கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், கோவைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறாராமே எஸ்.பி.வேலுமணி? இதை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரம் என எடுத்துக்கொள்ளலாமா?''’எனக் கேட்டோம்.
"அதுபற்றி எங்களுக்குத் எதுவும் தெரியாது. அப்படிப் பார்த்தால், அத்திக்கடவு -அவினாசி திட்ட விழாவுக்கு மறுநாள், சென்னை பதிவெண் கொண்ட ஒரு ஆடி காரில் தன்னந்தனியாக எங்கேயோ சென்று, யாரையோ ரகசியமாக சந்தித்து வந்தாரே செங் கோட்டையன்! அதை எப்படி எடுத்துக்கொள்வது?''’என எதிர் கேள்வி கேட்டனர் நம்மிடம்.
இந்நிலையில், எடப்பாடி அறிவித்த 82 மாவட்ட பொறுப் பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது உட்கட்சிப் பூசலை அதிகரித்துள்ளது. மாஜி செங்கோட்டையனோ, "நான் கட்சியில் தொண்டனாக பணியாற்றுவேன்' என்று குறிப்பிட்டார். ஓ.பி.எஸ்.ஸோ, கட்சிக்கு பொதுச்செயலாளரை நியமிக்க முடியாது. ஒருங்கிணைப் பாளர்தான் உண்டு. சாதாரண தொண்டன்தான் ஒருங்கிணைப் பாளராக வருவார் என கூறியுள்ளார்.
பா.ஜ.க. தரப்போ, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் கழட்டி விட்டுவிட்டு, செங்கோட் டையனை அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளராக கொண்டுவர காய் நகர்த்துகிறதாம்.
கூட்டிக் கழித்துப் பார்த் தால், எடப்பாடியின் கையை விட்டு நழுவுகிறதோ அ.தி.மு.க.?