உயர் நீதிமன்றத்தில் கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று வந்திருக்கும் தீர்ப்பு ஒரு இடைக்காலத் தீர்ப்புதான். அந்த வழக்கு இன்னும் முடியவில்லை என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். மொத்தம் ஐந்து மனுக்கள் சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டன. அதில் இரண்டு மனுக்கள் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனு பா.ஜ.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. "பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் போலியானவை. எங்கள் அனுமதி இல்லாமலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன' என தமிழக அரசின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி அக்டோபர் 13ஆம் தேதி காலையில் நீதிபதிகளிடம் முறையிட்டார். அதை நாங்கள் பரிசீலனை செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினார்கள். அதன்பிறகு சி.பி.ஐ. விசாரணை கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நாங்கள் ஏற்கிறோம். இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விவகாரம். ஆதலால் ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி அஜய் ரஷ்தோகி தலைமையில் தமிழகத்தில் பணிபுரியும் இரண்டு ஒடந அதி காரிகள் அடங்கிய கமிட்டியை நியமிக் கிறோம். இந்த கமிட்டி சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்கும். மக்கள் மிதிபட்டு சாவதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து மாதம் ஒருமுறை விசாரணை அதிகாரிகள் அது குறித்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தானாக முன்வந்து மதுரை பெஞ்சின் விசாரணையை மீறி உயர் நீதிமன்ற நீதியரசர் செந்தில்குமார் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்தது சரியல்ல. இதற்கான விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் கொடுக்க வேண்டும்' என ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
உடனே தமிழக அரசு வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி "இந்த தீர்ப்புக்கு தமிழக அரசு உடன்படவில்லை. எங்களுக்கு இதில் மாற்றுக்கருத்து உள்ளது. அதை நாங்கள் மனுவாகத் தாக்கல் செய்யவேண்டும்' என்றார். உடனே அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. நாங்கள் சி.பி.ஐ. விசாரணையையே இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி கூறி யுள்ளோம்' என்றனர். மொத்தம் ஐந்து வழக்குகள் ஃபைல் ஆனது. அதில் சி.பி.ஐ. கேட்டு தாக்கல் செய்த 4 வழக்குகளில் மொத்தமாக வைத்து இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இதற்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொடர்பான வழக்கு களில் ஆஜராகக்கூடிய வழக்கறிஞர்கள். தனது மாமனார் லாட்டரி மார்ட்டின் மேல் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை வழக்குகளை சமாளிக்க, விஜய்யை பா.ஜ.க. பக்கம் அழைத்துச் செல்ல ஆதவ் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்கிறார்கள் த.வெ.கவைச் சேர்ந்தவர்கள். அதற்காக எடப்பாடி மூலம் கரூரைச் சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் கரிகாலன் என்பவர், நெரிசலில் இறந்துபோன இருவரது குடும்பத்திலிருந்து போலி கையெழுத்துகள் பெற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதெல்லாம் ஆதவ்வின் வேலைகள். பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அதில் பவன் கல்யாணைப் போல விஜய்யை சேர்ப்பதற்கான நகர்வுகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
காவல்துறையால் அஜித் படுகொலை செய்யப்பட்டது பற்றிப் பேசிய நடிகர் விஜய், "சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கைப்பிடியில் இருக்கும் அமைப்பு'’என பேசியிருந்தார். மைக்கேல்பட்டி வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் என பல வழக்குகள் சி.பி.ஐ. வசம் சென்றிருக்கிறது. அதில் எல்லாம் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. மைக்கேல்பட்டி வழக்கில் பா.ஜ.க. பொய் சொன்னது என சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையிலேயே தெரிவித்திருந்தது. எனவே, தமிழக அரசே அஜித் படுகொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ள நிலையில், கரூர் வழக்கு சி.பி.ஐ.க்குப் போவதைப் பற்றி கவலைப்பட வில்லை. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அந்த ஆணையம் கொடுக்கும் அறிக்கையில் விஜய் தாமதமாக வந்ததுதான் உயிர் இழப்புகளுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டால் அதையும் உச்ச நீதி மன்றத்தில் நடக்கும் வழக்கில் தமிழக அரசின் கருத்தாகத் தெரிவிக்க முடிவெடுத் துள்ளது தமிழக அரசு.
“கரூர் சம்பவத்தில் போலீஸ் மற்றும் தி.மு.கவினர் இணைந்து சதி செய்தார்கள் என்பதுதான் த.வெ.க. வைக்கும் குற்றச்சாட்டு. அதை உண்மையென நிரூபிக்க த.வெ.க. போராடும். அதற்கு தேவையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காது. எனவே, எங்களுக்கு மடியில் கனமில்லை.. சி.பி.ஐ. விசாரணை குறித்து எந்தப் பயமும் இல்லை. இந்த விவகாரத்தில் தவறு செய்தது த.வெ.க.தான். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்காதது, கூட்டத்துக்கு தாமதமாக வந்தது என அனைத்தையும் செய்தது த.வெ.க.தான். இதுதான் கூட்ட நெரிசலில் மக்கள் மிதிபட்டு இறக்கக் காரணமாக அமைந்தது. ஆகவே, சி.பி.ஐ. கையில் சிக்கப்போவது நடிகர் விஜய்தான். விசாரணையிலிருந்து தப்பிக்க ஒன்றிய அரசின் தயவு தேவை. அதனால் அரசியல்ரீதியாக மாட்டிக் கொள்ளப் போவதும் நடிகர் விஜய்தான்.’மேலும், உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. செய்த மோசடியும் அம்பலமாகும் என்கிறார்கள் தமிழக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.