தெலுங்கானா!

கடந்த 2018 தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். 7 இடங்களிலும் வென்றிருந்தன. பா.ஜ.க. ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றிருந்தது.

இந்தத் தேர்த-ல் பி.ஆர்.ஆஸ்., காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு இடையிலான மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தல்கள், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க அளவு செயல்பட்ட பா.ஜ.க., சமீபமாக தெலுங்கானாவில் பின்னடைவைச் சந்தித்துவருகிறது. மாநில அளவில் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் அதற்கு இல்லாதது முக்கியமான பிரச்சனை.

Advertisment

பி.ஆர்.எஸ்.ஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ளூர உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

காங்கிரஸ் பெரும்பான்மை பெறும் எனவும், தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. எனினும் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் காங்கிரஸின் வெற்றி தெலுங்கானா காங்கிரஸுக்குப் புத்துணர்ச்சியளித்திருக்கிறது.

த-த் சமூகத்தைச் சேர்ந்த பாட்டி விக்ரமார்கா, ராகுலின் ஒற்றுமை நடைபயணம்போல், தெலுங்கானா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு காங்கிரஸைப் பலப்படுத்தியிருக்கிறார். மதச்சார்பற்ற கட்சி என்ற பெயரை காங்கிரஸ் தக்கவைத்திருக்கிறது. அது முஸ்-ம்களிடமும், அதீத மதச்சார்பு போக்கை விரும்பாதவர்களிடமும் வாக்குகளைப் பெற்றுத்தரும்.

Advertisment

இரண்டு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், காங்கிரஸின் வலுவான அடித்தளம், தொண்டர் படை இத்தேர்த-ல் மீண்டுவர உதவுமென நம்பப்படுகிறது.

கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா? என்பதுபோல் மூன்றாவது முறை முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து சந்திரசேகர ராவ் போட்டியிடுகிறார்.

முஸ்-ம்களுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை ராவ் அறிவித்திருக்கிறார். வெறுமனே மூன்றே மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டிருப்பதாக முஸ்லிம் அறிவுஜீவிகள் ஆத்திரப்படுகின்றனர்.

வேலையில்லாதவர்களுக்கு நிவாரணத் தொகை, த-த்துகளுக்கு மூன்று ஏக்கர் நிலம் போன்ற பி.ஆர்.எஸ்.ஸின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளைக் குறிவைத்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பிவருகின்றன. தெலுங்கானா மாநில பப்ளிக் சர்வீஸ் தேர்வுகளில் கேள்வித்தாள் அம்பலமானது மாநில அரசுக்குப் பின்னடைவு.

சந்திரசேகர ராவ் முதல்வர், அவரது மகன் கே.டி.ராமாராவ் 4 துறைகளுக்கு அமைச்சர், போதாதற்கு சந்திரசேகர் ராவின் மருமகன் ஹரீஷ் ராவும் கட்சியில் முக்கிய இடம் வகிக்க... குடும்ப அரசியல் என்ற அவச்சொல் கிளம்பியுள்ளது.

டெல்- கலால் கொள்கை ஊழல் வழக்கின் குற்றப் பத்திரிகையில் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா பெயர் இடம் பெற்றிருப்பது பி.ஆர்.எஸ்.ஸுக்கு கணிசமான சேதாரத்தை உண்டுபண்ணும்.

தொங்கு சட்டசபையா அல்லது பி.ஆர்.எஸ். அடித்துப் பிடித்து பெரும் பான்மையை எட்டப் போகிறதா என்பது தான் தெலுங்கானா மக்கள் விடை யளிக்கவேண்டிய கேள்வி.

5stateselections

சத்தீஸ்கர்!

சத்தீஸ்கர் 2018 தேர்தலின்போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க.வே வெல்லும் என கணித்திருந்த நிலையில் அவற்றின் கணிப்புகள் தலைகீழாக மாறின. மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 68 இடங்களை வென்று சத்தீஸ்கரில் ஆட்சியமைத்தது.

நக்சலைட்டுகளின் தாக்கம் மிகுந்த மாநிலம் என்பதால் சத்தீஸ்கருக்கு நவம்பர் 7, 17 என இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த முறை ஆட்சிக் கனவோடு களத்தில் இறங்கியிருக்கும் பா.ஜ.க., மாநிலமெங்கும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

பெரும்பாலான தேர்தல்களில் பழங்குடியினர் அதிகமுள்ள 29 தொகுதி களில் எந்தக் கட்சி வெல்கிறதோ, அதுவே ஆட்சியைப் பிடித்திருக்கிறது. எனவே காங்கிரஸும், பா.ஜ.க.வும் பழங்குடியினர் செல்வாக்குள்ள தொகுதிகளில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன.

பா.ஜ.க.வின் பிரதான பிரச்சனை சத்தீஸ்கரில் வலுவான தலைமையில்லாதது, அதன் எதிரொலி இந்தத் தேர்த-லும் எதிரொலிக்கலாம். இருந்தாலும் பழங் குடிகள் பெரும் பான்மையாக உள்ள இடங் களில் பா.ஜ.க. இரு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தி வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருக்கிறது. மோடி, அமித்ஷா, நட்டா என பா.ஜ.க.வின் பெருந்தலைகள் வருகைதந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

மகாதேவின் ஆன்லைன் பெட்டிங் செய- ஊழலில் குற்றவாளிகள் கைதுசெய்யப் படாமல் இருப்பது, நிலக்கரியில் 2000 கோடி ஊழல், வனத்துறை தொடர்பான டெண்டரில் 4000 கோடி ஊழல் என பா.ஜ.க. சரமாரியாக புகார்களை அடுக்குகிறது. கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட 36 வாக் குறுதிகளில் 19 நிறைவேற்றப் படாமல் உள்ளதாக அமித்ஷா முதல் நட்டா வரை பலரும் முதல்வரை குற்றம்சாட்டு கின்றனர்.

காங்கிரஸோ, அதன் பிரச்சாரத்தில் முதன்மையாக இந்தியாவிலேயே வேலையில்லா பிரச்சனை குறைவாக உள்ள மாநிலம் சத்தீஸ்கர்தான் என அழுத்திச்சொல்கிறது.

பா.ஜ.க.வின் பிஸ்வா சர்மா, காங்கிரஸ் வேட்பாளர் முகமது அக்பர் காவர்தாவை மதரீதியில் விமர்சித்து, அவரை ஜெயிக்கவிடக்கூடாதெனப் பேச. காங்கிரஸ் தேர்தல் ஆணை யத்தில் புகார் செய்ய, தேர்தல் ஆணையம் பிஸ்வா சர்மா வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக் கிறது.

தேர்தலின்போது மட்டும் தலையைக் காட்டும் பா.ஜ.க. பெருந்தலைகளை, “"கடந்த ஐந்து வருடத்தில் பிரதமர் மோடியை சத்தீஸ்கரில் பார்க்கவே இல்லை. இப் போது அடிக்கடி பார்க்க முடிகிறது'’என காங்கிரஸ் நாசூக்காக பதம் பார்க்கிறது. தன்னை ஊழல் ராவணன் என விமர்சிக்கும் பா.ஜ.க.வுக்கு, முதல்வர் பூபேஷ் பாகல், “கல்வியின்மை, போஷாக்கின்மை, நக்ச-ஸம், விவசாயிகளின் அவலம், ஊழல் இவையே ராவணனின் வடிவங்கள். அவற்றை எரிப்போம்” என ட்விட்டரில் பதிலடி தந்துள்ளார். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியமைக்கும் என யூகிக்கின்றன.

ff

மிசோரம்!

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை. மிசோ தேசிய முன்னணி கடந்த தேர்தலில் 26 தொகுதிகளில் வென்றது. மாறாக, கடந்த தேர்தலைவிட 24 இடங்கள் குறைவாக- அதாவது 5 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. மற்றொரு உள்ளூர்க் கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களில் வெல்ல, காங்கிரஸி-ருந்து ஆட்களை தங்கள் பக்கம் வளைத்த பா.ஜ.க. ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தது.

இந்த முறை மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் மூன்றுமே நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மாறாக, பா.ஜ.க. 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மிசோ தேசிய முன்னணியும், ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றியை எதிர் பார்க்க, பா.ஜ.க.வோ, தொங்கு சட்டசபை அமைந்தால் போது மென எதிர்பார்க் கிறது. எட்டு அல்லது பத்து இடங்களில் வென்றா லும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவை அளித்து அக்கட்சியை தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது அதன் எதிர்பார்ப்பு.

வழக்கம்போல மிஸோரமிலும் மக்களைத் துருவப்படுத்தும் யுக்தியையே பிரதானமாகக் கைக்கொள்கிறது. தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் பகுதிகளில் இருக்கும் சிறுபான்மை பழங்குடி கள் சமூகத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, மாநில அரசை குற்றம்சாட்டுவதன் மூலம் கட்சியை வளர்த்துக்கொள்ள நினைக் கிறது.

சமீபத்தில் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குக்கிகள் தஞ்சம்புகுந்தது மிசோரம் மாநிலத்தில்தான். மணிப்பூர் கலவரத்தை திறம்படக் கையாளமுடியாத பா.ஜ.க.வின் கையாலாகாத்தனம், கலவரத்துக்கே பா.ஜ.க.தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் பா.ஜ.க.வுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மாறாக, காங்கிரஸ் தன் முழு ஆற்றலுடனும் இந்த தேர்தலை எதிர்கொண்டு மீண்டும் மிஸோரத்தை காங்கிரஸ் செல்வாக்குள்ள மாநிலமாக மாற்ற நினைக்கிறது. ஆனால் காங்கிரஸின் பிரபல தலைவர்கள் பலரை பா.ஜ.க. வளைத்து தன் பக்கம் கொண்டுசென்றிருப்பது காங்கிரஸுக்குப் பின்னடைவு.

மிசோ தேசிய முன்னணியின் தலைவரும் முதல்வருமான ஜோரம்தங்கா, நாங்களே மீண்டும் வென்று ஆட்சியமைப்போம் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமாவும், மிசோ காங்கிரஸ் தலைவர் லால்சவ்தாவும் தாங்களே வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

நவம்பர் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் மிசோ தேசிய முன்னணிக்கும், ஜோரம் மக்கள் இயக்கத்துக்குமான போட்டி யாகவே இருக்கும் என்கி றார்கள் மிசோரம் அரசியல் களத்தை அறிந்தவர்கள்.