தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும்”எனக்கூறி தமிழகத் திற்கு கல்வி நிதியை நிறுத்திவைத்துள்ளதோடு, பின்வழியில் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை களை நுழைக்கமுயலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருமொழிக் கொள்கை தோற்றுவிட்டது என ஆணவப் பேச்சு பேசும் பா.ஜ.க. மா.த.வுக்கு, "எவன்டா சொன்னது இருமொழிக் கொள்கை தோத்துச்சுன்னு. இன்றும் மொழிப் போருக்கு தமிழர்கள் ஆயத்தமாக உள்ளனர்' எனக் காட்டு வதுபோல் தமிழகமெங்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக தி.மு.க. கூட்டணியினர் போராடினர். அதன் சிகரமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகள் துணையுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக கண்டன உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அ.தி.மு.க.வுக்கு ஓர் வேண்டுகோள். இந்த பிரச்சினையில் அரசியல் செய்வதை கைவிட்டு தயவுசெய்து எங்களுடன் குரல்கொடுத்து வீதிக்கு வாருங்கள். இது திராவிட மண், பெரியார் மண், தமிழ்நாடு முதலமைச்சர் வழி நடத்தக்கூடிய சுயமரியாதை மண். அரசியல் எல்லாம் இரண் டாவதுதான். எங்களுக்கு முதலில் மொழி உணர்வு, இன உணர்வுதான். விரைவில் நிதி வழங்கவில்லை என்றால், இந்த ஆர்ப்பாட்டம் பெரும் போராட்ட மாக மாறும் என்பதை தெரிவித்துக்கொள் கிறேன்''’என்றார்.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, "ஒன்றிய காவி ஆட்சி நம்மை தற்போது வம்புக்கு இழுக்கிறது. அண்ணாவின் தத்துவம், பெரியாரின் கருத்து ஓட்டம்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும்”எனக்கூறி தமிழகத் திற்கு கல்வி நிதியை நிறுத்திவைத்துள்ளதோடு, பின்வழியில் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை களை நுழைக்கமுயலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருமொழிக் கொள்கை தோற்றுவிட்டது என ஆணவப் பேச்சு பேசும் பா.ஜ.க. மா.த.வுக்கு, "எவன்டா சொன்னது இருமொழிக் கொள்கை தோத்துச்சுன்னு. இன்றும் மொழிப் போருக்கு தமிழர்கள் ஆயத்தமாக உள்ளனர்' எனக் காட்டு வதுபோல் தமிழகமெங்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக தி.மு.க. கூட்டணியினர் போராடினர். அதன் சிகரமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகள் துணையுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக கண்டன உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அ.தி.மு.க.வுக்கு ஓர் வேண்டுகோள். இந்த பிரச்சினையில் அரசியல் செய்வதை கைவிட்டு தயவுசெய்து எங்களுடன் குரல்கொடுத்து வீதிக்கு வாருங்கள். இது திராவிட மண், பெரியார் மண், தமிழ்நாடு முதலமைச்சர் வழி நடத்தக்கூடிய சுயமரியாதை மண். அரசியல் எல்லாம் இரண் டாவதுதான். எங்களுக்கு முதலில் மொழி உணர்வு, இன உணர்வுதான். விரைவில் நிதி வழங்கவில்லை என்றால், இந்த ஆர்ப்பாட்டம் பெரும் போராட்ட மாக மாறும் என்பதை தெரிவித்துக்கொள் கிறேன்''’என்றார்.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, "ஒன்றிய காவி ஆட்சி நம்மை தற்போது வம்புக்கு இழுக்கிறது. அண்ணாவின் தத்துவம், பெரியாரின் கருத்து ஓட்டம் இங்கு இருக்கிறது. இந்த ஆட்சியை மிரட்டிப் பார்க்க நினைக்கிறார்கள். உங்கள் கனவு பலிக்காது. இது தமிழ் மண். பெரியார் மண். திராவிட மண். அதனால்தான் அமைச்சர்கள் முதல் துணை முதலமைச்சர் வரை போராட்டக் களத்திலிருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கலாச்சாரம் தவிடுபொடியாகும்''’என்றார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவோ, "ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என் பதை கொண்டுவர நினைக்கிறார்கள். வாரணாசி யை தலைநகரமாக கொண்டுவர நினைக்கிறார்கள். மீண்டும் மொழிப்போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமஸ்கிருத, இந்தியின் கீழ் இந்தியாவை கொண்டுவரத் துடிக்கும் பா.ஜ.க. அரசுக்கு, 100 ஆண்டுகால வரலாறுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம். மொழிக்கு தீக்குளித்து மாண்டவர்கள் உலகிலேயே தமிழர்கள்தான். வியட்நாமில் கூட புத்த பிட்சுகள் மதத்திற்காகத் தான் தீக்குளித்தார்கள், தமிழ்நாட்டை அச்சுறுத்த நினைத்தால் உங்கள் காலத்திலேயே இந்தியா துண்டு துண்டாகச் சிதறுகிற நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்னொரு மொழிப் போருக்கு நாம் தயாராகிவருகிறோம். நடராஜன், தாளமுத்து ஆகியோர் மீண்டும் உயிர்த்தெழுதல் போன்ற நிகழ்வு தற்சமயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என கூறு கிறார். அம்பேத்கர் சாசனத்தில் மும்மொழிக் கொள்கை பற்றி எழுதப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கும், சர்வ சிக்ச அபியான் திட்டத்திற் கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதுவரையிலும் 20,151 கோடி ரூபாய் தராமலிருக்கிறார்கள், இன்று நாங்கள் கேட்கிறோம். இது உங்கள் அப்பன் வீட்டு பணமா, 40 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் இதில் உள்ளது. 43 லட்சம் அரசுப் பிள்ளை களுக்காக தான் இந்த பணத்தை நாம் கேட்கிறோம். இதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும்''” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், "ஒன்றிய அமைச்சர், "நீங்கள் வரி கொடுத்தால் நிதி கேட்பது அற்பத்தனம்' என்று கூறுகிறார். அதற்கு நாங்கள் சொல்கிறோம் "இவ் வாறு நீங்கள் பேசுவது அயோக்கியத்தனம்' என்று. இவர்கள் சட்டத்தை ஒழுங்காகப் படித்தார்களா என்று தெரியவில்லை, இவர்கள் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1965-ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது என்று மோடிக்கும் தெரியாது. அந்தக் கட்சிக்கும் தெரியாது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இந்தி திணிக்கப்பட்டபோது தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களும் அதற்காகப் போராடினார்கள். பல மாணவர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு வீர மரணமடைந் தார்கள். கடுமையான அடக்குமுறைகளை மேற் கொண்டபோதும் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது தமிழ்நாடு ஸ்தம்பித்துப்போயிருந்தது. அதன் பிறகுதான் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று அறிவித்தார்கள். பா.ஜ.க மாநிலத் தலைவர் அவர்களே இருமொழிக் கொள்கை காலாவதியாக வில்லை, நீங்கள்தான் காலாவதியாகிவிட்டீர்கள், ஒன்றிய கல்வியமைச்சர் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்''’என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “"ஒரே நாடு ஒரே தேர்தல் போன்று கல்வியும் கொண்டுவரப் பார்க்கிறார்கள், அவர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்படு வதை தமிழ்நாடு மக்கள் அறிவார்கள். எந்த ஒரு மொழியையும் விரும்பி கற்றுக்கொள்வதில் தவறில்லை, ஆனால் எந்த ஒரு மொழியையும் திணிப்பதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது. கல்வியில் முன்னேற்றமடைந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மற்றொரு மொழியைத் திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் சாசனத்தையும் கடைப்பிடிக்காமல் இருக்கும் கூட்டம்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கல்விக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடை யாது. நீங்கள் இவ்வாறு செயல்பட்டால் தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடக்கும். தமிழகமே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக திரண்டு வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “"ஒன்றிய அமைச்சர் தமிழ்நாடு அரசை கண்டிக்கிற வகையில் கருத்து சொல்லியிருந்தார். உடனடியாக நம்முடைய அமைச்சர் அவர்களும், முதல்வர் அவர்களும் அந்த அமைச்சரின் ஆணவத்தை சுட்டிக்காட்டி கண்டித்தார்கள். மீண்டும் ஒரு மொழிப்போர் என்கின்ற எச்சரிக்கையை சொல்லு கின்ற போராட்டம்தான் இந்த அறப்போர். இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் முதலிடத் தில் இருக்கிறது. அனைவரும் தமிழ்நாட்டில் கல்வி பயில வருகிறார்கள். இந்தி படித்தவர்கள்தான் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்கள். இந்தி தெரியாதவர்கள் அவர்களுக்கு வேலை வழங்குகிறார்கள். ஆண்டுதோறும் வழங்கிவந்த நிதியை நிறுத்தியதன் காரணமாக அமைச்சர் அன்பில், டெல்லி சென்று ஒன்றிய கல்வி அமைச்சரை சந்தித்தார். பி.எம்.ஸ்ரீ என்கிற பள்ளிகளை திறந்து இந்தி கற்கவேண்டும் என கூறினார். அதற்கு அமைச்சர் அன்பில் எதிர்ப்பு தெரிவித்து புறப்பட்டார். அதைத் தொடர்ந்து காசியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்து ஆணவமிக்கது. மீண்டும் ஒரு மொழிப் போர் உருவாகும் என அன்பில் எச்சரித்தார். அதற்கான அறப்போராட்டம்தான் இது. சர்வ சிக்சா அபியான் திட்டம் என்று ஒரு திட்டம் இருந் தது. அதற்கு பெயர் மாற்றம் செய்து வேறுவகையில் திட்டங்களைக் கொண்டுவருகின்றனர். அதன்மூலம் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் தமிழகத்திற்கு வந்தால், மாணவர்கள் மூன்று மொழிகள் கற்கவேண்டும். அதில் இந்தி கட்டாயம். மற்ற இரண்டு மொழிகள் மாணவர்களின் விருப்பம் என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தி பேசாத பிற மாநில மாணவர்களுக்கு இந்தித் திணிப்பு நடைபெறும். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே மதம் என்பதுதான் பா.ஜ.க.வின் அஜண்டாவாக உள்ளது''’என்று சுட்டிக்காட்டினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மிகவும் வேகத்துடன், "நாம் தொடர்ந்து ஜனநாயக ரீதியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம், பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கிறோம். முதலமைச்சர் அவர்களுக்கும் அன்பான வேண்டுகோள் தமிழ்நாட்டில் இயங்கு கின்ற ஒன்றிய அரசு அலுவலகத்தில் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கூறுங்கள். சுங்கக் கட்டணங்கள் தர மறுப்போம், ஜி.எஸ்.டி. தரமாட்டோம் என்று அனைவரும் கூறுங்கள். இவற்றை முதலமைச்சர் செய்தால், மோடி உங்கள் வழிக்கு வருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்''” எனக் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தலைவர் களின் பேச்சுக்கள், "யார் சொன்னது இருமொழிக் கொள்கை தோற்றுவிட்டதென?' என்று பா.ஜ.க. மா.த.வின் சட்டையைப் பிடித்து உலுக்குவதுபோல அத்தனை வலுவாக இருந்தது.
-அ.அருண்
படங்கள்: ஸ்டாலின்