றுபடியும் ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை சூடுபிடித்துள்ளது. விசாரணைக் கமிஷனின் செயல்பாடுகள் சசிகலாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

jayalalithaசசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர் தமிழகத்தில் ஜெ. ஆட்சிக் காலத்திலும் ஓ.பி.எஸ். ஆட்சிக் காலத்திலும் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ். மணல் மாஃபியா தலைவரான சேகர் ரெட்டிக்கும் நெருக்கமாக இருந்த ராவ், ஜெ.வின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தி நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். இவர் மீது வருமானவரித்துறை பாய்ந்தது. சேகர் ரெட்டி மீது ஜெ.வின் இறுதிச்சடங்கு முடிந்த கையோடு பாய்ந்த வருமானவரித்துறை அதன் தொடர்ச்சியாக ராவ் மீது கை வைத்தது.

முதல்வராக ஓ.பி.எஸ். கோட்டையில் இருந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறையில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதனால் டென்ஷனான ராம் மோகன ராவ், ""நான் ஜெ.வின் சிஷ்யன். நான் சப்-கலெக்டர் நிலையில் இருந்த போதிலிருந்து அவர் என்னை செதுக்கினார் உருவாக்கினார். இன்று முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸைப் போல ஜெ. இல்லை. ஜெ. உயிருடன் இருந்திருந்தால் என் மீது மத்திய அரசின் வருமான வரித்துறை கை வைத்திருக்க முடியுமா? தமிழகத்தில் ஒரு தலைமைச் செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண அ.தி.மு.க. தொண்டருக்கு என்ன பாதுகாப்பு'' என வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் பேசினார் ராம் மோகன ராவ்.

ஜெ. மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதும் முதலில் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டவர் ராம் மோகன ராவ்தான். கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி 2017ஆம் ஆண்டு சாட்சியம் அளித்தார் ராவ். அந்த சாட்சியத்திலும் ஏகப்பட்ட கதைகளை அள்ளி விட்டிருந்தார். ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. அதை முதலில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு மேலாண்மை வாரியத்திற்கு தேவகவுடா போன்றவர்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கியது. அந்த சமயத்தில் எங்களை மருத்துவமனைக்கு அழைத்தார் ஜெ. அவருக்கு அப்பொழுது மூக்கு வழியாக பிராண வாயு செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அது நிறுத்தப்பட்டது. பிராணவாயு நிறுத்தப்பட்ட 2 மணி நேரம் ஜெ. தலைமைச் செயலாளராகிய என்னிடமும் காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞரான முத்துகுமாரசாமி மற்றும் ஜெ.வின் jayaசெயலாளர்களான ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன் ஆகியோரிடமும் பேசினார். கடுமையான மூச்சுத் திணறலுக்கிடையே "காவிரி தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை' என ஜெ. விளக்கினார். அவருடன் பேசியதை தொடர்ந்து நான் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் காவிரி வழக்கு விசாரணையை சந்திக்க டெல்லிக்குச் சென்றேன். அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெ. செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு காவிரி வழக்கின் நிலவரத்தை கேட்டறிந்தார்.

Advertisment

ஜெ.வின் உடல்நிலை மோசமடைந்ததும் எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்தது போல ஜெ.வுக்கும் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என்கிற கருத்து எழுந்தது. தம்பித்துரை தான் முதலில் அந்த கருத்தை தெரிவித்தார்.

அதன்பிறகு தமிழக அமைச்சரவை கூடி ஜெ.வுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது பற்றி முடிவு செய்யலாம் என கூறினார்கள். ஆனால், ஓ.பி.எஸ். தலைமையிலான அமைச்சரவை கூடி ஜெ.வை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. அதற்கு ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த இங்கிலாந்து டாக்டரான ரிச்சர்ட் பீலே எதிர்ப்பு தெரிவித்தார் என என்னிடம் சொன்னார்கள். மருத்துவ சிகிச்சையின் போது ஜெ.வை அவர் சிகிச்சை பெற்ற வார்டை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள். அப்பொழுது ஓ.பி.எஸ். உட்பட மூத்த அமைச்சர்கள் ஜெ.வை பார்த்தார்கள்' என ராம் மோகனராவ் சாட்சியம் அளித்திருந்தார்.

அவரை சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். இதுபற்றி சசிகலா வகையறாக்கள் ஏராளமான புகார்களை அடுக்குகிறார்கள். "ராம் மோகன ராவ் சொல்வதை நீதிபதி ஆறுமுகசாமி முறையாக பதிவு செய்ய மறுக்கிறார். "ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க முடியாமல் போனதற்கு காரணம் சசிகலாவா?' என நீதிபதி ஆறுமுகசாமி நேரடியாக ராம் மோகன ராவை கேட்டார். இதற்கு முன் நடந்த விசாரணையில், "ஜெ. உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஓ.பி.எஸ். தலைமையில் தமிழக அரசு அமைந்தது' என ஷீலா பாலகிருஷ்ணன் சாட்சியமளித்தார். உடனே அவரை இடைமறித்த நீதிபதி ஆறுமுகசாமி, "ஓ.பி.எஸ். முதல்வராவதற்கு ஸ்டாலின்தான் காரணமாமே' என கேட்டார். jusdgearumugasamy"அதெப்படி என ஷீலா திருப்பிக் கேட்டார். ஜெ. உடல்நிலை சரியில்லாமல் போனதால் தமிழக அரசு இயங்கவில்லை என ஸ்டாலின் சொன்னார். அதனால்தான் ஓ.பி.எஸ். தலைமையில் அரசு அமைந்தது' என அரசியல் லெக்சர் அடிக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி.

Advertisment

மொத்தத்தில் ஜெ. மரணத்துக்கு காரணம் சசிகலா என நிறுவும் முயற்சிகள் கமிஷனில் வேகமெடுத்துள்ளன. "சசிகலா ஜெ.வை நன்றாக பார்த்துக் கொண்டார். மருத்துவமனையில் ஜெ. நன்றாக இருந்தார்' என சொல்லப்படும் சாட்சியங்கள் சரியாக பதிவு செய்யப்படுவதில்லை.

அதுபோலதான் ராம் மோகன ராவ் வாக்குமூலமும் சரியாக பதிவு செய்யப்படவில்லை. அதனால்தான் அவரை நாங்கள் குறுக்கு விசாரணை செய்தோம். அவரது வாக்குமூலத்தை மறுபடியும் பதிவு செய்தோம். கமிஷனில் பதிவான விவரத்தை வைத்துதான் தீர்ப்பெழுத முடியும். நாளை கமிஷனின் தீர்ப்பு சசிக்கு எதிராக வந்தால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை ஆவணங்களைக் கூட எங்களுக்கு தர மறுக்கிறார்'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.