வேலூர் சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டை. சிறுபான்மையின வாக்குகள், முதலியார் சமூக வாக்குகள் நிறைந்த தொகுதியிது. வெற்றியைத் தீர்மானிப்பது சிறுபான்மையின வாக்குகள்தான்.

Advertisment

1952 முதல் 2021 வரை இந்த தொகுதியில் 8 முறை தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. தனித்து இரண்டு முறை, தி.மு.க. கூட்டணியில் இரண்டு முறை, அ.தி.மு.க. கூட்டணியில் இரண்டு முறை என 6 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. அதிலும் தொடர்ந்து நான்கு முறை வெற்றிபெற்றவர் ஞானசேகரன். அ.தி.மு.க. இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

Advertisment

தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன். ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சியில் பொறுப்பிலிருந்த கார்த்தியை வேலூர் தி.மு.க.வில் சரியான ஆள் இல்லை என தி.மு.க.வுக்கு அழைத்துவந்தவர் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன். அவர் மூலமாக கவுன்சிலர் சீட் வாங்கி வேலூர் நகராட்சி சேர்மனானவர், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் மாறினார். பின்னர் அணிமாறி திருவண்ணாமலை மா.செ. அமைச்சர் எ.வ.வேலு ஆதரவாளரானார். இரண்டாவது முறையும் சீட் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியாக, தொகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை வாங்கித் தருவேன் எனச் சொன்னதை கண்டுகொள்ள வில்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகரில் மேம்பாலங்கள் அமைக்கப்படும், மாநகர் சுற்றுப்பாதை அமைக்கப்படும்,  தினசரி குடிநீர் வழங்கப்படும், காட்பாடி டூ சத்துவாச்சாரிக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படும் போன்ற கோரிக் கைகளை 2016 தேர் தலின்போதும் மக்கள் மன்றத்தில் வைத்தார். எதிர்க்கட்சியாக இருந்ததால் எதுவும் செய்யமுடிய வில்லை என 2021 தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி தப்பினார். தற்போது ஆளும்கட்சி எம்.எல்.ஏ. இப்போதும் சொன்னது சொன்னதாகவே இருக்கின்றது. அவருக்கு பெயர்சொல்லும்படியான திட்டம்  என்றால் பென்டிலென்ட் மருத்துவமனையை பன் னோக்கு மருத்துவமனையாக பிரமாண்ட மாகக் கட்டியதுதான். 

Advertisment

தான் ஒரு ஒரு எம்.எல்.ஏ. என்பதை     மறந்து மேயர் வேலையைப் பார்க்கிறார். கவுன்சில் கூட்டம் நடந்தால் முதல் ஆளாகப்போய் அமர்ந்துகொள்வது, மேயரை யாராவது கேள்விகேட்டால் அந்த கவுன்சிலரை ஓரம்கட்டுவது, மாநகராட்சியில் நடை பெறும் சின்னச் சின்ன வேலைகள் முதல் பெரிய வேலைகள்வரை அத்த னையிலும் தலையிட்டு கவுன்சிலர்களுக்கான கமிஷனையும் தானே வாங்கிக்கொள்கிறார். எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளால் ஆளும்கட்சி கவுன்சிலர்கள் எம்.எல்.ஏ. மீது ஏக அதிருப்தியில் உள்ளனர். தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்கு எதிரி எதிர்க்கட்சியில்லை, சொந்தக் கட்சி கவுன்சிலர்களும், கட்சி யினரும்தான்.

vellore1

மூன்றாவது முறை யாக சீட் வாங்கிவிட கார்த்தி எம்.எல்.ஏ. முயற்சி செய்துவருகிறார். எனக்கு சீட் தாங்கன்னு கடைசி நாள் வரை இவர் போய் கேட்க மாட்டாரு, முக்கிய நிர்வாகிகள் இவரிடம் வந்து நீங்களே நில்லுங்க அப்படிங்கறமாதிரி கெஞ்சவைப்பாரு. ஏன்னா சாதிரீதியா வலிமையான ஆள் இத்தொகுதியில் இல்லாதது அவருக்கு ப்ளஸ். அதனால் அவரைத் தவிர வேற யாருக்கும் சீட் இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் சீட் வாங்க முயற்சிசெய்கிறார். இவர் மீண்டும் அ.தி.மு.க. போக முயற் சிக்கிறார் என்கிறது ஒருதரப்பு. காங் கிரஸிலிருந்து அ.தி.மு.க. பயணம்போய்விட்டு தி.மு.க.வுக்கு வந்துள்ள, இந்த தொகுதியில் நான்குமுறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானசேகரனும் முயற்சிசெய்கிறார். அதேநேரத்தில்           முன்னாள் எம்.எல்.ஏ. தேவராஜின் பேரனும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாள ராகவுள்ள பாலாஜியும் கேட்கும் திட்டத்தில் உள்ளார் என்கிறார்கள். இவர்களோடு முன்னாள் எம்.பி. முகமதுசகியின் மகன் டாக்டர் சகி, பகுதிச் செயலாளர் சத்திய   மூர்த்தி உட்பட சிலர் தலைமை செலவு செய்வதாக இருந்தால் நாங்கள் நிற்கத் தயார் என்கின்றனர்.  

அ.தி.மு.க.வில் வேலூர் மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள எஸ்.ஆர்.கே. அப்பு, தகவல் தொழில்நுட்ப அணி  மண்டலச் செயலாளர் ஜனனி.சதீஷ்குமார், முன்னாள் மா.செ. மூர்த்தி உட்பட சிலர் முயற்சிக்கின்றனர்.

வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் நிற்கலாம் என ஒரு பேச்சு அடிபடுவதால் அ.தி.மு.க.வில் சீட் கேட்பவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

2014, 2019, 2024 என மூன்று முறை வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை, இரட்டை இலை சின்னத்தில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் நூறு கோடிகளைச் செலவு செய்தும் வெற்றிபெறாமல் தோல்வியைச் சந்தித்தவர் ஏ.சி.சண்முகம். வேலூர் தொகுதியில் சாதி ஓட்டு அதிகமாக இருப்பதால் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகிவிடுங்கள் என அ.தி.மு.க.வினர் சிலர் அவரிடம் பேசிவருகின்றனர். 

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்லியுள்ளார். பா.ஜ.க. கோட்டாவில் அமைச்சராகிவிடலாம் என தூபம் போடுகின்றனர். அதே நேரத்தில் தனது மச்சான் ரவிக்குமாரை நிறுத்தலாமா என யோசிக்கிறார் என்கிறார்கள். தொடர்ந்து தி.மு.க.வே வெற்றிபெறும் இந்தத் தொகுதியை ஏ.சி.எஸ்.ஸுக்குத் தந்துவிட்டு, அதற்கு பதில் 10 தொகுதிகளின் தேர்தல் செலவை அவரிடம் ஒப்படைத்துவிடலாம் என கணக்கு போடுகிறார் இ.பி.எஸ். என்கிறார்கள்.