ஜெ. மறைவுக்குப் பிறகு புதுச்சேரி அ.தி.மு.க நான்கு அணிகளாக பிரிந்தது. முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், ஓ.பி.எஸ் ஆதரவாளராக ஒரு அணியாகவும், மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் ஒரு அணியாகவும், அ.தி.மு.க சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ ஒரு அணியாகவும், வையாபுரி மணிகண்டன் தனி அணியாகவும் என அ.தி.மு.க நான்கு அணிகளாக பிரிந்திருந்தது. இடையில் அன்பழகன் மற்றும் அவரது தம்பி பாஸ்கரும் சசிகலா அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என்று மாறி மாறி சென்று மீண்டும் அ.தி.மு.கவில் ஐக்கியமாகியுள்ளனர்.

Advertisment

pp

இதனிடையே மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு மாநில செயலாளர் பதவியை எதிர் பார்த்து ஓம்சக்தி சேகர், வையாபுரி மணிகண்டன், அன்பழகன் மூவரும் காத்திருக்கின்றனர்.

Advertisment

அன்பழகன் எம்.எல்.ஏ. புதுச்சேரியில் அ.தி.மு.க என்றால் தான் தான்’ என பிரகடனப் படுத்தாத குறையாக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி காங்கிரஸ் அரசை எதிர்த்தும், அவ்வப்போது ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்தும் அறிக்கை விடுவதோடு போராட்டங்களும் நடத்தி வருகிறார். அதேநேரத்தில், ஆளும் கட்சி அமைச்சர்களையே தன் கைக்குள் வைத்திருக்கும் சாமர்த்தியம் வாய்த்தவர்.

ஓம்சக்தி சேகரோ அவ் வப்போது ஆளும் காங்கிரசுக்கு எதிர்ப்பாக அறிக்கைகள் கொடுத்தாலும் அன்பழகன் அளவுக்கு அவரால் ஈடு கொடுத்து போட்டி போட முடியவில்லை.

Advertisment

சமீப கால மாக முத்தியால் பேட்டை எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், அன்பழகனுடனேயே இருந்தாலும் தன்னுடைய ஆளுமையை அவ்வப்போது நிரூபிப்பதற்காக போராட்டங்கள் நடத்தியும், அறிக்கைகள் வாயிலாகவும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை சேர்மனாக இருந்த போது தன்னை வளப்படுத்திக் கொண்ட இவர் இப்போதும் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் ஆதரவுடன் செல்வாக்காக வலம் வருகிறார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை மூன்றாக பிரித்து அதற்கான பொறுப் பாளர்களை சமீபத்தில் அறிவித்துள்ளனர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆனால் புதுச்சேரி மாநிலச் செயலாளராக இருந்த புருஷோத்தமன் இறந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையிலும் அப்பதவி நிரப் பப்படாமல் காலியாகவே உள்ளது. இதனால் கட்சிக்குள் கோஷ்டி மோதல் அதிகரித் துள்ளது.

""இன்னும் ஏழு மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் பொறுப் பாளர்களை நியமிக்காமல் தேர்தலை சந்திப்பது எளி தானதல்ல. உடனடியாக மாநில பொறுப்பாளர்களை நியமித்தால் தானே 2021 தேர்தலை சந்திப்பதற்கான வேலைகளை தொடங்க முடியும்'' என்று புலம்பித்தவிக்கின்றனர் ர.ர.க்கள்.

-சுந்தரபாண்டியன்