யார் பிரதமர்? INDIA VA NDA பரபரக்கும் டெல்லி!

rahul

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1#ந் தேதி நடக்கிறது. அதேநாளில், பா.ஜ.க. மற்றும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை டெல்-யில் கூட்டியிருக்கிறது காங்கிரஸ் தலைமை.

இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தவிர்த்து 20#க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் நடப்பதால் அதனை கவனிக்கும்பொருட்டு தன்னால் டெல்லிக்கு வரஇயலாது என்பதை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்துவிட்டார் மம்தா.

இதில் பங்கேற்க 1#ந் தேதி டெல்-க்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டா-ன். கூட்டத்தில் கலந்துகொண்டு மறுநாள் சென்னைக்குத் திரும்புகிறார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்த எதிர்பார்ப்பும் அதில் விவாதிக்கப்படவிருக்கும் பொருளும் ஏக பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

rahul stalin

மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்கிற நம்பிக்கையுடன் கூட்டத்தைக் கூட்டும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் தேர்வு, மத்திய அமைச்சரவையில் ஒவ்வொரு கட்சிக்குமான இடங்கள், அவைகளுக்கான இலாகா ஒதுக்கீடுகள், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக, இப்ப

பொதுவாக, இப்படிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே நடக்கும். ஆனால், இந்தமுறை கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போதே கூட்டத்தை நடத்துகிறது காங்கிரஸ் கட்சி. ஜூன் 1#ந் தேதிவரை மட்டுமே ஜாமீனில் வெளியே இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், மீண்டும் சிறைக்கு செல்லவேண்டிய சூழ-ருப்பதால் அவர் வெளியில் இருக்கும்போதே நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகத்தான் இந்த அவசர ஆலோசனை என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

அதுமட்டுமல்ல, இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும்பட்சத்தில் யார் பிரதமர் என்பதற்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் கெஜ்ரிவால், தேஜஸ்வி, அகிலேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தனது பெயரை பரிந்துரை செய்கிறார்களா? என்கிற பல்ûஸ பார்க்கவும் இந்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்ட ராகுல்காந்தி வ-யுறுத்தியுள்ளார் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

பா.ஜ.க.வையும் மோடியையும் விரட்டி மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்கிற அசாத்திய நம்பிக்கை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்துடன் டெல்லிக்குப் பறக்கும் ஸ்டாலின், ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க.வின் முக்கியத்துவத்தை பெரிய அளவில் நிலை நிறுத்துவார் என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள்.

குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடங்கியுள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைக்கும் என்பதால் அந்த எண்ணிக்கைக்கேற்ப மத்திய அமைச்சரவையில் தி.மு.க.விற்கான எண்ணிக்கையையும், இலாகாவையும் முடிவுசெய்ய வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறது தி.மு.க. தலைமை.

இன்னும் சொல்லப்போனால் துணைபிரதமர் பதவி கேட்கும் யோசனையையும் கூட்டத்தில் வ-யுறுத்த வேண்டும் என தி.மு.க.வின் சீனியர்கள் கட்சி தலைமையை வலியுறுத்துகிறார்களாம். டெல்லிகூட்டத்தில் கலந்துகொள்ளும் தி.மு.க. தலைமையின் திட்டம் இதுவாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையோ வேறுவிதமாக மாற்றி யோசிக்கிறதாம்.

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசியபோது, ""முதல் மூன்றுகட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் களம் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இல்லை. ஆனால், அடுத்தடுத்து நடந்த வாக்குப்பதிவின்போது எங்களுக்கு சாதகமாக மாறிய நிலையை நாங்கள் பார்த்தோம். அதனால்தான் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்கிற பாசிட்டிவ் கான்ஃபிடன்ஸ் எங்களின் தேசிய தலைவர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை நகர்த்திச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ராகுல்காந்தி. தவிர, 1#ந் தேதி நடக்கும் 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவின்போதே... இப்படி ஒரு கூட்டம் நடத்தினால், இந்தியா கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற பாசிட்டிவ் வைப் மக்களிடம் உருவாகும். இது எங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்.

ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் என்னவென்பதை கடந்த 3 நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் விவாதித்தபடி இருந்தார் ராகுல். அந்த விவாதங்களில், பிரதமர் தேர்வில் ராகுலைத் தவிர்த்து வேறு நபரை கூட்டணி கட்சிகள் வலியுறுத்தக்கூடும். அதனை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளக்கூடாது என மல்லிகார்ஜுன கார்கே சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதனை மறுத்துப் பேசிய ராகுல்காந்தி, ""காங்கிரஸ் கட்சிக்கு தனித்த பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே பிரதமர் பதவியை நான் ஏற்க முடியும்; குறைந்தப்பட்ச பெரும்பான்மையெனில் கட்சியி-ருந்து வேறு ஒருவரை முன்னிலைப்படுத்தலாம் எனச் சொல்ல, அதனை மற்றவர்களும் ஆமோதித்துள்ளனர்.

அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கான எண்ணிக்கை, இலாகா குறித்த சப்ஜெக்ட் விவாதிக்கப்பட்டால், கூட்டணியில் உள்ள எந்தக்கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களை வைத்து மட்டுமே அக்கட்சிகளுக்குரிய எண்ணிக்கையும் இலாகாவும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

மாறாக, கூட்டணிக் கட்சிக்கு கிடைத்த மொத்த எண்ணிக்கையை வைத்து கணக்கிடக்கூடாது என்பதை ஆலோசனைக் கூட்டத்தில் வ-யுறுத்த வேண்டும்; அதில் சமரசம் கூடாது என ராகுல்காந்தியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தி.மு.க.வை மனதில் வைத்தே இதனை பேசியிருக்கிறார்கள். அதாவது, தி.மு.க. 21 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 19 இடங்களில் போட்டியிட்டுள்ளன.

அந்த வகையில், 21 இடங்களில் எத்தனை இடங்களில் தி.மு.க. ஜெயிக்கிறதோ அந்த எண்ணிக்கைக்கேற்பத்தான் அமைச்சரவையில் தி.மு.க.வுக்கான இடங்கள் முடிவு செய்யப்படும். 5 எம்.பி.க்களுக்கு 1 கேபினெட் பதவி என்பது எங்கள் கட்சியின் (காங்கிரஸ்) யோசனையாக இருக்கிறது.

அதனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் ஜெயித்தாலும் தி.மு.க. எத்தனை இடங்களில் ஜெயித்திருக்கிறது என்பதை வைத்தே எண்ணிக்கை முடிவு செய்யப்பட வேண்டுமென்பது எங்கள் கட்சித் தலைமை எடுத்துள்ள தீர்க்கமான முடிவு. அதனால் 40 இடங்களுக்கான வெற்றி என்பதை வைத்தெல்லாம் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தினால் அதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கமாட்டார்கள்... மறுத்துப் பேசுவார்கள். அதனை தி.மு.க. தலைமை எப்படி சமாளிக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் 1#ந் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதிமுடிவு என எதையும் தீர்மானிக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது''’’ என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆட்சியைப் பிடிப்போம் என்கிற அசாத்திய நம்பிக்கையில் இந்தியா கூட்டணி இருப்பதையும், அதற்காக 1#ந் தேதி ஆலோசனைக் கூட்டம் நடப்பதையும் உற்றுக் கவனித்தபடி இருக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.

இதுகுறித்து பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் தரப்பில் விசாரித்தபோது, ""இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அற்புதமாக கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகுமா? என்பது 4#ந் தேதி மாலையில் தெரிந்துவிடும்'' என்கிறார்கள்.

iruthi sutru

இதையும் படியுங்கள்
Subscribe