டல் சூழ்ந்த ஊர் என்பதால் கடலூர் ஆனது என்றும், இப்பகுதி மக்கள் ஒரு காலத்தில் கடலையை அதிக அளவில் ஏற்றுமதி செய்ததால், இது கடலையூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் இது மருவி கடலூர் ஆனது என்றும் கூறுகின்றனர். இப்போது மாநகராட்சித் தகுதியைப் பெற்றுள்ளது.

கடலூர் மாநகர கட்சிப் பிரமுகர்கள் பலரும், மேயர் சீட்டை வாங்க தங்கள் கட்சித் தலைமையை, கிரிவலம் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இது பெண்கள் தொகுதியாக அறிவிக் கப்படலாம் என் றும், அப்படி இருக்காது என்றும் பரவலாக பட்டிமன்றம் நடந்துவரும் நிலையில், இரு பாலர் மத்தியிலும் மேயர் பதவி மீதான ஆர்வம் பெருகியிருக்கிறது.

Advertisment

cuddalore

தி.மு.க.வின் மாவட்டப் பொருளாளரும், கடலூர் வடக்கு ஒன்றியச் செயலாளருமான வி.எஸ்.எல்.குணசேகரன், மக்கள் மத்தியிலும் பிரபலமானவர். வசதி வாய்ப்புகளிலும் குறைவில்லாதவர். தொகுதி ஆண்களுக்கானதாக இருந்தால் தானும், அது பெண்கள் தொகுதியாக மாறினால், தன் மனைவி அல்லது தன் மருமகள் போட்டியிடு வதென்று தீர்மானித் துக் கொண்டு, காய் நகர்த்துகிறார். இதனால் மா.செ.வும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் சிட்டிங் எம்.எல்.ஏ ஐயப்பனும், மாவட்ட மாணவரணி அமைப்பாளரான பொறியாளர் நடராஜனும் கூட வரிந்து கட்டுகின்றனர். டிப்பர் டாராஸ் லாரிகள் அசோசியேஷன் தலைவராக உள்ள நடராஜன், தேர்தல் செலவுகளைத் தாராளமாக செய்வதற்கும் தயாராக உள்ளார். அதேபோல், தனது துணைவியார் அருள்செல்வியையும் களமிறக்கத் தயாராக இருக்கிறார். இவரைப் போலவே நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, தனக்கு அல்லது தனது துணைவியார் சுந்தரிக்கு சீட் வேண்டும் என்று இப்போதே எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை வட்டமிட்டு வருகிறார். முன்னாள் அரசு வழக்கறிஞர் சிவராஜும், மேயர் கனவில் இருக்கிறார்.

முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரனின் மகனான வழக்கறிஞர் பிரிவுப் பிரமுகர் ஏ.ஜி.ஆர். சுந்தரும், பி.கே. அறக்கட்டளை நிறுவனர் வி.கே.சுந்தரம் என்கிற விஜயசுந்தரமும், டிப்பர் லாரி சங்கத் தலைவர் பிரகாஷும் கூட ரேஸில் இருக்கிறார்கள். இவர்களில் பிரகாஷ், தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பனின் தீவிர விசுவாசியாவார்.

இதேபோல் தி.மு.க.வின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸில், தொழில்நுட்ப பிரிவு ரவிக்குமார், சீட் கனவோடு, மாநிலத் தலைவர் அழகிரி மூலமாக சீட்டை வாங்கத் துடிக்கிறார். எதிர்க் கட்சியான அ.தி.மு.க. நிலவரம் எப்படி என்று பார்த்தால், அங்கும் சீட்டுக்கு முட்டல் மோதல்கள் நடந்துவருவது தெரிகிறது.

முன்னாள் நகராட்சித் துணைத் தலைவராக இருந்த சேவல் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொறுப்பிலும் உள்ளார். இவர் தனக்கு அல்லது தனது மருமகள் சங்கீதா வசந்தராஜுக்கு சீட் கொடுங்கள் என்று மாஜி மந்திரி சம்பத்திடம் முண்டியடித்து வருகிறார். அதேபோல் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொறுப்பில் உள்ள மாதவன், அவர் துணைவி பிரியா, கடலூர் நகர துணைச் செயலாளர் கந்தன், அவர் மனைவி நிஷா, அட்வகேட் பாலகிருஷ்ணன், அவர் மனைவி உமாமகேஸ்வரி ஆகியோரும் சீட்டுக்கான வேள்வியில் இருக்கின்றனர்.

Advertisment

cuddalore

அ.தி.மு.க.வில் மேயர் சீட்டுக்கு பலர் முட்டிமோதும் நிலையில், கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில், பரபரப்பான முட்டல் மோதல்கள் அரங்கேறின. நகர துணைச் செயலாளர் கந்தன், நகராட்சி வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், பழைய ஆட்களுக்கே பதவிகளைக் கொடுக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். இதற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சேவல் குமார், ஆறுமுகம் உட்பட சிலர் எதிர்ப்பு தெரி விக்க, இரு தரப் புக்கும் இடை யே வாக்கு வாதம் வலுத்து, கைகலப்பாக மாறியது. இதில் அங்கிருந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட் டன. இருதரப்பு மோதலில் கந்தன், சேவல் குமார், ஆறு முகம், ராதா கிருஷ்ணன், பாலாஜி உள் ளிட்ட பலருக்கும் படுகாயம் ஏற்பட... அவர் கள் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

cuddalore

மோதல் குறித்து தனித் தனி யாக இரு தரப்பினரும் காவல் துறையில் புகார் அளித்திருக்கும் நிலையில், அவர்கள் இரு தரப்பினர் மீதும் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

"மேயர் தேர்தலுக்கு முன்பே, உட்கட்சி தேர்தலில் "நீயா? நானா?' என்று மோதிக் கொள்ளும் இவர்கள், எப்படி மேயர் பதவி யைப் பிடிக்கப் போகிறார்களோ?' என்று அவர்கள் தரப்பே புலம்புகிறது.

கடலூர் தேர்தல் களம், அனைத்துக் கட்சியிலும் உள்ள நிலநடுக்கத்தைப் பார்த்து, ஒரு பெரும் சுனாமியை எதிர்கொண்டிருக்கிறது.