காலில் விழ வைத்தது யார்? -ஊர்ப் பஞ்சாயத்தும் உண்மைகளும்!

vv

மூக வலைத்தளங்களில் பரவிய அந்தக் காட்சி பதற வைத்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமம் ஓட்டனேந்தல். இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்துப் பெரியவர்கள், இடைநிலைச் சமூகமக்கள் காலில் விழுகிறார்கள். பஞ்சாயத்து என்ற பெயரில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று அந்த வீடியோ வைரலாக, நேரடியாகக் களத்திற்குச் சென்றோம்.

ஓட்டனேந்தல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஒரு மாரியம்மன் கோவில். அதேபோல் மற்ற இன மக்களுக்கு ஒரு மாரியம்மன் கோயில் எனத் தனித்தனியாக இரு கோயில்கள் உள்ளன. கடந்த 12ஆம் தேதி பட்டியல் இன மக்கள், தங்கள் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழாவில் ஒலிபெருக்கி வைத்து மேடையமைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். கொரோனா விதிகளுக்கு மாறாகக் கூடிய கூட்டம் தொடர்பாக பட்டியல் இனத்தைச் சாராத இளைஞர் ரமேஷ் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் அளித்துள்ளார். சக காவலர்களுடன் ஸ்பாட்டுக்கு வந்தார் எஸ்.ஐ.

village

ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்களை எச்சரித்து, ஒலிபெருக்கி உட்பட பல பொருட்களை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளார். மறுநாள் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் காவல் நிலையம் சென்று, இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என சப் இன்ஸ்பெக்டரிடம் எழுதிக் கொடுத்து விட்டு, பொருட்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். அப்போது சப் இன்ஸ் பெக்டர் தெரிவித்த தகவல் மூலம்தான், ரமேஷ்தான் புகார் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஊருக்குத் திரும்பியதும் ரமேஷை சந்தித்தவர்கள், திருவிழா

மூக வலைத்தளங்களில் பரவிய அந்தக் காட்சி பதற வைத்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமம் ஓட்டனேந்தல். இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்துப் பெரியவர்கள், இடைநிலைச் சமூகமக்கள் காலில் விழுகிறார்கள். பஞ்சாயத்து என்ற பெயரில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று அந்த வீடியோ வைரலாக, நேரடியாகக் களத்திற்குச் சென்றோம்.

ஓட்டனேந்தல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஒரு மாரியம்மன் கோவில். அதேபோல் மற்ற இன மக்களுக்கு ஒரு மாரியம்மன் கோயில் எனத் தனித்தனியாக இரு கோயில்கள் உள்ளன. கடந்த 12ஆம் தேதி பட்டியல் இன மக்கள், தங்கள் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழாவில் ஒலிபெருக்கி வைத்து மேடையமைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். கொரோனா விதிகளுக்கு மாறாகக் கூடிய கூட்டம் தொடர்பாக பட்டியல் இனத்தைச் சாராத இளைஞர் ரமேஷ் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் அளித்துள்ளார். சக காவலர்களுடன் ஸ்பாட்டுக்கு வந்தார் எஸ்.ஐ.

village

ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்களை எச்சரித்து, ஒலிபெருக்கி உட்பட பல பொருட்களை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளார். மறுநாள் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் காவல் நிலையம் சென்று, இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என சப் இன்ஸ்பெக்டரிடம் எழுதிக் கொடுத்து விட்டு, பொருட்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். அப்போது சப் இன்ஸ் பெக்டர் தெரிவித்த தகவல் மூலம்தான், ரமேஷ்தான் புகார் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஊருக்குத் திரும்பியதும் ரமேஷை சந்தித்தவர்கள், திருவிழா பாதியில் நின்றதால் செலவுத்தொகையான 20 லட்சத்தை தரவேண்டும் எனக் கேட்க, ரமேஷ் தரப்பு இளைஞர்களுக்கும், பட்டியல் இன இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் சிலர் தலையிட்டு, இணக்கமாக வாழும் ஊரில் பிரச்சினை வேண்டாம் என சமாதானப் படுத்தியுள்ளனர்.

அங்குள்ள ஆலமரத்தடியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிலர் ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து வந்து பஞ்சாயத்து பேசுமாறு கூறியுள்ளனர். சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஆறுமுகம், சந்தானம், திருமால் ஆகிய மூவரும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்பு வெற்றிலை பாக்கு வைத்து, "ஊர் தவறு நடந்துவிட்டது... அதற்காக மன்னிக்க வேண்டும்' என்று கீழே விழுந்து கும்பிட்டுள்ளனர் அப்போது ஊர் பிரமுகர் திருவேங்கடம் என்பவர் "இதெல்லாம் என்ன பழக்கம் இப்படி யார் உங்களை செய்யச் சொன்னது?' என்று கண்டித்துள்ளார் இந்தக் காட்சிகளை பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் கள் சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ காட்சிகளாகப் படம் எடுத் துள்ளனர். பிரச்சினை முடிந்து இருதரப்பும் கலைந்து சென்றதும் இந்த வீடியோ வைரலானது.

பட்டியலினத் தலைவர்களை ஆதிக்க ஜாதியினர் தங்கள் காலில் விழுந்து கும்பிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் என்ற பதற்றம் அதிகமானது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஊருக்குள் சென்று போலீசாருக்கு தகவல் அளித்த ரமேஷ் உட்பட மூன்றுபேர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ள னர். இதை அறிந்த ஊர்மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்

vv

"நாங்கள் யாரும் அவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. அவர்களாகவே செய்துவிட்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டு, எங்கள் இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்துள்ளனர்' என்ற கருத்தை முன்வைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி. கோவிந்தராஜ். டி.எஸ்.பி. சின்னராஜ் மற்றும் போலீஸ் படையுடன் அந்தக் கிராமத்திற்குச் சென்று இரு தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் ரமேஷ், ராமச்சந்திரன், முத்துராமன், சூர்யா, ஐயப்பன், சீதாராமன், கோகுல்ராஜ் உட்பட 8 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரை கைது செய்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சாராத ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த லோகநாதன், ஆதிகேசவன் உட்பட 54 பேர்கள் மீது ஊருக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

vv

இருதரப்பிலும் நம்மிடம் பேசியவர்கள், "காலம் எவ்வளவோ மாறிவிட்டது. மக்களும் மாறிவிட்டார்கள், நாங்களும் மாறிவிட்டோம். இரு தரப்பிலும் ஒருவருக் கொருவர் சகோதரர்களாக நண்பர்களாகப் பழகி வருகிறோம் வெளியூர்களுக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் பஸ் போக்குவரத்து இல்லை என்றால் அவர்கள் வாகனங்களில் நாங்களும், எங்கள் வாகனங்களில் அவர்களும் அமர்ந்து ஊருக்கு வந்து சேருவோம். அப்படிப்பட்ட ஒற்றுமையை சில பட்டியலின இளைஞர்கள் திட்டமிட்டு சீர்குலைத்து எங்களைச் சிக்கலில் மாட்டிவைத்துள்ளனர்'' என்கிறார்கள். பட்டியலின பெரியவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஊர் மக்களைவிட நாங்கள்தான் வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறோம். எங்கள் இரு தரப்பிலும் பணம் கொடுக்கல், வாங்கல் என பரஸ்பரம் மிகுந்த ஒற்றுமையாக இருந்து வருகிறோம். வெளியூர்-வெளிமாநிலங்களில் வேலை பார்த்த எங்கள் இளைஞர்கள் கொரோனாவால் ஊருக்குத் திரும்பி, கோவில் விழாவில் ஆர்வம் காட்ட, அது புகாராகிவிட்டது''’என்றனர். "போலீஸ் தரப்புதான் இதில் விளையாடிவிட்டது' என வருத்தப்படுகிறார்கள் கிராமத்தினர்.

அந்தந்த பகுதிகளில் நடக்கும் சட்டமீறல்களைக் கவனித்து, தகவல் தெரிவிக்கும் இன்ஃபார்மர்களை போலீசார் வைத்திருப்பார்கள். அவர்களின் பெயர் ரகசியமாகக் காக்கப்படும். ஆனால், இப்போது அவர்களை மாட்டிவிடும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது காவல்துறையில் உளவுபார்க்க தனித்தனித் துறைகள் உள்ளன. இன்ஃபார்மர்களை நம்பவேண்டியதோ, போட்டுக் கொடுக்க வேண்டியதோ இல்லை. அதை மீறி, அமைதியான கிராமத்தில் சாதியப் பிரச்சினை கிளம்ப காரணமே காவல்துறைதான் என்று குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி முக்கியஸ்தர்கள்.

சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாகச் சென்று அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதோடு... தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நம் மிடம், "இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு போலீசார் தேடிவருகிறார்கள். கிராமத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஏ.டி.எஸ்.பி தலைமையில் விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

சமூகநீதிப் பேரவை சார்பில் உண்மை அறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று நேரடி களஆய்வு செய்து திரும்பியுள்ளனர். குழுவின் தலைவரான பா.ம.க. வழக்கறிஞர் பாலு, "இருதரப்பு மக்களும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர் அதை சீர்குலைக்கும் வகையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிலர் தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து திட்டமிட்டு திரைப்பட ஷூட்டிங் நடத்துவது போல் இந்த செட்டப்பை செய்துள்ளனர். பிரச்சினையை அதிகமாக்கும் விதமாக சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் என்பவர் நடந்துள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இருதரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்று சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கிராமப்புறங்களில் ஒற்றுமையைச் சீர்குலைத்து வருகிறார்கள் அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அமைதியையும் சுயமரியாதையையும் எதிர்பார்க்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்த விவகாரம் சாதிய அரசியலுக்குள் சிக்கிக்கொள்வதை விரும்பவில்லை. "போலீசோ, மற்ற சமூகத்து சாதி வெறியர்களோ, தங்கள் தரப்பில் உள்ள சாதி வெறியர்களோ இதில் ஆதாயம் தேட நினைப்பது அமைதியைக் குலைத்துவிடும்' என்கிறார்கள்.

சாதிவெறி அத்தனை எளிதாக அமைதிக்கு இடம்தராது என்பதை, ஓட்டனேந்தல் கிராமத்தின் இரு சமூகத்து முக்கியஸ்தர்கள் பலர், போலீஸ் தங்களைக் கைது செய்துவிடும் என்று பயந்து தலைமறைவாக உள்ளதன் மூலம் உணரமுடிகிறது

nkn220521
இதையும் படியுங்கள்
Subscribe