கவான் கிருஷ்ணர் சர்வ வல்லமை உடையவர். அருச்சுனனுக்குத் தேரோட்ட வந்தவர். ஆசிரம வாழ்க்கையில் முடிவு செய்யப்பட்டவைகளை எப்படி மீறுவது? போர் நோக்கம் நிறைவேற வேண்டும். வெற்றி ஒன்றுதான் குறிக்கோள். போர் முறை சட்டம், நியாயம், அநியாயம் ஆகியவற்றைப் பார்க்கக் கூடாது. இலக்கை அடைய வேண்டும். வெற்றிதான் இலட்சியம். அருச்சுனனை விட கிருஷ்ணர் 19 வயது பெரியவர். துவாரகையிலிருந்து போர்க்களத்திற்கு வந்துவிட்டார். தேர்த் தட்டிலும் அமர்ந்து விட்டார். ஆனால் அருச்சுனன் போருக்குத் தயாராக இல்லை.

"போர்க்களத் திலே உறவினர்கள் இருப்பார்கள். அவர் களைக் கொன்றா அதிகாரத்தை, ஆட்சி யைப் பிடிப்பது? அரியணையில் வீற்றி ருப்பது? அந்த உற வின் முறையார்களின் நேசமென்ன? பாச மென்ன? அதை எப்படி மறப்பது கிருஷ்ணா? என்னால் முடியாது' என்று கூறியவாறே தேரிலிருந்து இறங்கி காண் டீபத்தை பூமியில் போட்டுவிட்டு அமர்ந்து விட்டான் அருச்சுனன்.

போரைத் தவிர்ப்பதற்காக பகவான் கிருஷ்ண ரிடத்திலே பலப்பட பேசினான் பய னில்லை.

அருச்சுனனின் அறிவார்ந்த பேச்சு களைப் பகவான் கேட்டு ரசித்தார். புன்முறுவல் பூத்தார். அவன் எழுப்பிய வினாக்களுக்கு பக வான் விடையளிக்க வில்லை. "புலன் கடந்த இறைமைக் கோட் பாடு' என்று தாவி விட்டார் பகவான். அருச்சுனன் பேதை யாகிப் போனான். அவனின் அறிவாண்மை படுத்துவிட்டது. ஏன் தெரியுமா?

Advertisment

பகவான் சொன்னார்: ஆன்மா நிலையானது; அழிவற்றது; அளவிட முடியாதது; ஆனால் உடல் அழியுந்தன்மை உடையது. ஆன்மாவானது என்றென்றும் பிறக்கிறது. என்றென்றும் மடிகிறது. புலன்கள் பொருட்களைப் பொருந்துவதால் ஓ, குந்தியின் மைந்தா குளிர்ச்சி, சூடு, இன்பம், வேதனை போன்றவை உண்டாகின்றன. அவை வந்தது போன்றே மறைந்து விடும். அவை நிலைத்த தன்மை யற்றவை. போர்க்களத்தில் நடைபெறும் படு கொலைகள் சித்திரவதையாகவும் வேதனையாகவும் இருக்கும். ஆனால் வேதனை உணர்வு நீடித்து இருக்காது. ஏனெனில் அவை நிலையற்றவை.

இதை பகவான் கூறி நிறுத்தினார். இதை அவர் சொன்னதன் நோக்கம் அருச்சுனன் போரிலிருந்து நீங்க- பின்வாங்க காரணமில்லை என்பதற்காகத்தான்.

ஆனால் அருச்சுனன் பகவான் கிருஷ்ணரை விடவில்லை. அவன் கிருஷ்ணரைப் பார்த்து ""மனிதப் பண்புகளைவிட அரசியல் அதிகாரம் பெறுவது மேலானதா?'' என்று கேட்டான். இதற்கான சரியான பதிலை கிருஷ்ணர் கூறவில்லை.

Advertisment

அடுத்து, யோகத்தினால் முயற்சி வீண் போவதில்லை. இதில் தீதொன்றும் இல்லை, இதை சிறிய அளவில் பயின்றாலும் பெரிய அளவில் அச்ச உணர்வினின்று பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பகவான் சொன்னார். பகவானின் கருத்துகள் அருச்சுனனால் உட்கொள்ள முடியவில்லை. அருச்சுனனை அனைத்து வழியிலும் உய்விக்க வந்தவர் பகவான் கிருஷ்ணர்.

அவர் கடைசி ஆயுதத்தை எடுத்தார். ""உனது ஊனக்கண் (பகுத்தறிவு) கொண்டு என்னை நீ காண முடியாது. எனவே உனக்கு ஞானக்கண் வழங்கு கிறேன். அதைக் கொண்டு எனது ஈசுவர வடிவத்தைப் பார்'' -என்றார் கிருஷ்ணர்.

பகுத்தறியும் மனநிலை அவனுக்குப் போயிற்று. திகிலூட்டும் பயங்கரக் காட்சிகளைத் தனது கற்பனையில் பார்த்த அர்ச்சுனன் தன்னை மறந்து கூவினான். பகவான் கிருஷ்ணரின் புருஷோத்தம ரூபம் அவ்வண்ணம் இருந்தது. அவன் என்ன செய்வான்? அந்த விசுவரூப தரிசனம் அருச்சுனனைப் பணிய வைத்தது.

பகவான் கிருஷ்ணரும் அருச்சுனனும் ஒன்றாகி விட்டனர். உபநிடதங்கள் பசுக்களாகி விட்டன. பகவான் கிருஷ்ணர்- கோகுல கிருஷ்ணராகிவிட்டார். அருச்சுனன் கன்றாகிப் போனான். இந்த இருவரின் உரையாடல்கள் அமிர்தமான கீதை ஆயிற்று. பின் என்ன?

குருசேத்திரப் போர் நடந்தது. போரும் முடிந்தது. அருச்சுனன் முதலில் கிருஷ்ணரிடம் சொன்னதை எண்ணிப் பார்த்தான். கௌரவர் களும் ஆதரவாளர்களும் உறவினர்களுமாக அழிக்கப்பட்டு விட்டனர். பாண்டவர்கள் பக்கமும் அதே அளவு இழப்புகள் நடந்து முடிந்தன.

aa

போர் நடக்கிறவரை இருந்த கிருஷ்ணர் தருமனின் அசுவமேத யாகத்தில் கலந்து கொண்ட தோடு சரி. திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி ஆகி யோர் உயிரோடு இருந்தார்கள். நடையை மட்டும் கொண்டு பிணம் போல் வாழ்ந்தார்கள். போருக்குப் பிறகு 15 ஆண்டுகள் இருந்தார்கள். பிறகு வனம் சென்று காட்டுத் தீயில் மாண்டு போனார்கள்.

காட்டுத் தீ பற்றுகிறபோது திருதராஷ்டிரன் தனது உதவியாளர் சஞ்சயனைத் தப்பித்துச் சென்றுவிடு, ஓடிப் போ என்கிறான், அவன் பால் இரக்கம் கொண்டு. திருதராஷ்டிரனுக்குக் கண்ணும் உயிருமாக இருந்த சஞ்சயன் இமயமலைக்குச் சென்றான் -தவம் செய்ய. திருதராஷ்டிரன் அவனை இறக்கக்கூடாது எனக் கருதுகின்றான்.

அது இரக்கத்தின் உச்சம்.

குருசேத்திரத்தை நடத்த காரணமான பகவான் கிருஷ்ணர் என்ன ஆனார்? துவாரகை சென்றார். 36 ஆண்டுகள் ஆட்சி செய்தார். கிருஷ்ணரின் குலத்தவர்கள் வரம்பு கடந்த சுகத்தில் ஆழ்ந்து அவர்களாகவே ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போனார்கள். கிருஷ்ணனின் மகனையும் தாக்கிக் கொன்றார்கள். இந்தத் தாக்குதல்கள் ஏன் நிகழ்ந்தது? ரிஷிகளின் சாபத்தால் நிகழ்ந்தது என்கிறது மகாபாரதம். இதையெல்லாம் கண்ட கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் யோகத்தில் அமர்ந்து உயிர் நீத்தார். கிருஷ்ணரின் உறவினர்கள் எல்லாம் மாண்டு போனார்கள். அவர் அண்ணன் பலராமனும் மறைந்ததை கிருஷ்ணரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிறகு அவர் தியானத்தில் மூழ்கினார். பிறகு அவர் கடற்கரை ஓரத்தில் இருந்த காட்டில் திரிந்தார். தனது இறுதிக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார். அப்படியே ஓர் இடத்தில் தரையில் படுத்துத் தூங்கிப் போனார்.

அந்தக் காட்டில் மிருகங்களைத் தேடித் திரிந்த வேடன் ஒருவன் படுத்திருந்த கிருஷ்ணரைத் தூரத்திலிருந்து பார்த்து மான் என்று நினைத்து அம்பை எய்தினான். அம்பு கிருஷ்ணனின் காலில் புகுந்து அவரின் உயிரைத் தூக்கிச் சென்றது. கிருஷ்ணனின் குல முடிவைப் பற்றிய செய்தி அஸ்தினாபுரத்திற்கு வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டவுடன் பாண்டவர்களும் திரௌபதியும் உலகப் பற்றை முற்றிலும் வெறுத்து விட்டார்கள்.

aa

அபிமன்யூவின் மகன் பரிஷத்துக்கு முடிசூட்டி விட்டு அனைவரும் நகரத்தை விட்டு யாத்திரைக் குப் புறப்பட்டு விட்டனர். பல ஊர்களைச் சுற்றித் திரிந்த அவர்கள் இமயமலையை அடைந்தார்கள். அப்போது அவர்களுடன் ஒரு நாயும் சேர்ந்து கொண் டது. ஒருவர் பின் ஒருவராக மலையேறிச் சென்ற னர். அப்போது ஒவ்வொருவராக கீழே விழுந்து திரௌபதியும் தம்பிகளும் உயிர் துறந்தனர். இருப்பினும் தருமர் முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நாயும் வந்து கொண்டே இருந்தது. அந்த நாயை தரு மத்தின் அடையாளமாக வியாசர் குறிப்பிடுகிறார். தருமரின் முன்னே இந்திரன் ரதத்துடன் வந்து நின்றான்.

""உன் தம்பிகளும் திரௌபதியும் சுவர்க்கத் திற்கு வந்து விட்டார்கள். நீ மட்டுமே எஞ்சி நிற் கிறாய். தேகத்துடன் ரதத் தில் ஏறு. உன்னை அழைத் துப் போகவே வந்தேன்'' என்றான் இந்திரன்.

தருமர் தேரில் ஏறினார். உடன் நாயும் ஏறப் போயிற்று. நாய்க்கு சுவர்க்கத்தில் இடமேது? என்று நாயைத் தடுத்தான் -இந்திரன். தருமனோ தனக்கும் இடமில்லை என்று நாயை விட்டுச் செல்ல முடியாது என்றான். அப்போது நாயாக வந்த தரும தேவதை தன் மகனின் உறுதியை நினைத்து மாயமாக மறைந்தது.

தருமன் சுவர்க்கம் அடைந்தார். அங்கே துரி யோதனன் அழகிய ஆசனத்தில் அமர்ந்து இருந் தான். அவனுடைய தேஜஸ் சொல்ல முடியாததாக இருந்தது. பல கொடுமைகள், அக்கிரமங்கள் புரிந்த துரியோதனன் சுவர்க்கத்திலே இருக்கிறான் என்று தருமர் வருத்தம் அடைந்தார். என் தம்பிகள் எங்கே, அவர்கள் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துப் போங்கள். துரியோதனன் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்றார்.

உடனே இந்திரன் ஒரு தூதனை அனுப்பி தருமரின் தம்பிமார்கள் மனைவி இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகச்செய்தான். தூதனும் அழைத்துப் போனான். அந்த இடத்திலே துர்நாற்றம் வீசுகிறது. சகிக்க முடியவில்லை. அந்த இடத்திலே திரௌபதை, கர்ணன் மற்றும் தம்பிமார்கள் குரல்கள் கேட்கின்றன. ""நீங்கள் இங்கேயே இருங்கள். உங்களிடமிருந்து கிளம்பும் வாசம் எங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. நல்ல காற்று கிடைக்கிறது. நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டாம்'' என்று கேட்டுக் கொண் டார்கள்.

தருமரும் அவ்வாறே ஒப்புக் கொண்டார். உடன் வந்த தூதுவன் "வாருங்கள் போகலாம்' என்று அழைத்தான். தருமர் வர முடியாது என்று இந்திரனிடம் சொல்லச் சொன்னார். தூதுவனும் இந்திரனிடம் சொல்ல, யமனும் இந்திரனும் அங்கே வந்தனர். யமனின் மகன்தான் தருமர். அவரைப் பார்த்து யமன், ""சிறந்த புத்திமானே நான் உன்னை மூன்றாவது முறையாகச் சோதிக்கிறேன். உறவினர் களின் நிமித்தம் நீ நரகத்திலேயே இருக்க விரும்பி னாய். அரச பதவி பெற்று உலகம் பரிபாலித்தவர்கள் எல்லோரும் அவசியம் நரகம் பார்க்க வேண்டும். ஆகையால் ஒரு முகூர்த்தகாலம் உன்னாலும் நரகம் அனுபவிக்கப்பட்டது. உன் தம்பிமார்கள் யாரும் நரகத்தை அடையவில்லை. இது உன்னைச் சோதிக்கச் செய்த மாயம். இது தேவலோகம், இதோ பார் மூவுலகங்களிலும் செல்லும் தேவரிஷி நாரதர். துக்கப்படாதே'' என்று தேற்றினார்.

பிறகு தருமர் மானிட உடலை விட்டு திவ்ய சரீரத்தைப் பெற்றார். அதோடு மனிதப் பிறப்பிற்குரிய பகையும் மன வருத்தங்களும் சென்றன. குருசேத்திர போர் முடிந்து அனைவரும் "திவ்ய சரீரத்தால்' சுகம் அடைந்தனர். மானிட தேகத்தால் அல்ல. பூமியில் வாழ்வது மானிட தேகத்தால் தானே.

பகவான் கிருஷ்ணர் திவ்ய சரீரத்திற்கு வழிகாட்டுகிறார். அருச்சுனன் பூமியில் மானிட தேகத்தில் இருக்கிறபோது உறவோடு நட்போடு மக்களோடு அரசியல் நடத்த வேண்டும் என்கிறார். இதில் பகவான் கிருஷ்ணரின் கொள்கை சிறந்ததா? வில்லாளி அருச்சுனனின் கொள்கை சிறந்ததா?

நம் நாட்டில் உள்ள இருவரில் யார் கிருஷ்ணர்? யார் அருச்சுனன்? குழப்பமடைய வேண்டாம். நண்பர்களே, இருவரும் கிருஷ்ணர் களே. அருச்சுனன் அவர்களுள் ஒருவரும் இல்லை.

ஆதார நூல்கள்:

1) இராஜாஜியின் வியாசர் விருந்து

2) வினோபா பாவேயின் கீதைப் பேருரைகள்

3) பிரேம்நாத் பசாஸின் இந்திய வரலாற்றில் பகவத் கீதை