Advertisment

யார் இந்த அஸ்ராகார்க்?  பரபரப்பான ஃப்ளாஷ்பேக்!

asrak

ரூரில் நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்துக்கு வந்து நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்  குழுவிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதியே பரிந்துரைத்துள்ள காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் யார்? என்பது குறித்து, நமது நக்கீரன் 2012, பிப்ரவரி 15-17 இதழில் வெளியான ஒரு கொலைச் சம்பவம் குறித்த செய்திக் கட்டுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 

Advertisment

ஒரு கொலை நடக்கிறது... மனைவியே கணவரை கொலை செய்கிறார். விசாரணை செய்ய காவல்துறை வருகிறது. மனைவிதான் கொலை செய்தாரென்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணத்தை அறிந்ததும், விசாரணை செய்யவந்த எஸ்.பி. அஸ்ராகார்க், மனிதாபிமான அடிப்படையில், "அந்தம்மாவை விடுவிச்சிடுங்க' என்று உத்தரவிடுகிறார். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஒரு கொலைக்குற்றவாளியை காவல்நிலையத்திலேயே விடுவித்த அந்த சம்பவம் குறித்த நக்கீரன் செய்தியிலிருந்து ரீவைண்ட் செய்து பார்ப்போம்!

Advertisment

மதுரை

மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஜோதிபாசுக்கும், உஷாராணிக்கும் திருமண மாகி நான்கு குழந்தைகளோடு, 22 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில்... குடி, கூத்து என  ஜோதிபாசு தடம்புரண்டதில், இருவருக் கிடையே பிரச்சனை பெரிதாகி விவாகரத் தானது. 

கணவரைப் பிரிந்த நிலையிலும், உஷாராணி கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்கவைத்தார். ஏரோநாட்டிக்கல் படித்த மூத்த மகள், பிரபல ஓட்டலில் ரிஷப்ஷ னிஸ்ட்டாக வேலைக்குப் போக ஆரம்பித்தார். இரண்டாவது மகளும், மூன்றாவது மகளும் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொள்ள, கடைசி மகன் +1 படித்துவந்துள்ளான். 

விவாகரத்தாகுமளவு என்ன விஷயம்? அதன்பின் கொலைவரை எப்படிப் போனது? ஜோதிபாசு, அப்பளக்கடை கீதா என்பவளை வீட்டுக்கே அழைத்துவந்து குடும்பம் நடத்தியிருக்கிறார். அதோடு, தினமும் குடித்துவிட்டு வந்து அனைவரையும் அடித்துத் துன்முறுத்தியிருக்கிறார். இதையடுத்தே நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து வாங்கி யிருக்கிறார் உஷாராணி. விவாக ரத்துக்கு பின்னரும், உஷா ராணிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துவர... அவருக்கு பயந்து வீடு மாறிக்கொண்டேயிருந்தார் உஷாராணி. 

இந்நிலையில், விவாகரத் துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து, "நான் திருந்திவிட்டேன். சேர்ந்து வாழலாம்' என்று அழைக்க, இருதரப்பு வக்கீல் களும் பேசி, சமாதான மாகியிருக்கிறார்கள். இந் நிலையில், மீண்டும் போதையில் விழுந்து, பட்டப்பகலிலேயே, வயது வந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில், மனைவியை, "இப்பவே என்கூட வா' என்று படுக்கையறைக்கு அழைத்து தகராறு செய்திருக்கிறார். மறுத்ததற்கு அடித்துத் துன் புறுத்தியிருக்கிறார். இவர் திருந்தவே மாட்டாரென்பது புரிந்து, ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார் உஷாராணி. அதற்கடுத்த      நாளும் போதையில் வீட்டுக்கு வந்தவர், உஷாராணியை படுக் கைக்கு அழைத்து தகராறு செய்திருக்கிறார். இரண்டாவது மகள் கோகிலா, "வீட்டை விட்டு வெளியே போய்யா' என அப்பாவை கண்டிக்க... "அப்படின்னா உங்கம்மா வுக்கு பதிலா நீ வாடி...' என, தான் பெற்ற பெண்ணையே போதை யின் உச்சத்தில், தூக்கிக்         கொண்டு பெட்ரூமுக்குள் சென்று கதறக்கதற பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறான். தான் பெற்ற மகளையே தன் கணவன் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிப்பதைப் பார்த்து பதறிப்போன பெற்ற மனசு என்ன செய்வதெனத் தெரி  யாமல் பதற... அங்கே மகனின் கிரிக்கெட் மட்டை உஷா ராணியின் கண்ணில் பட, அடுத்தநொடியே அதை கையி லெடுத்து, கணவனின் மீது மட்டையால் மடேரென்று அடிக்க, அடித்த அடியில் பேச்சு மூச்சின்றி சரிந்து விழுந்திருக் கிறார் ஜோதிபாசு. உடனே ஜோதிபாசு உயிரிழக்க, மகளை காப்பாற்றினார் தாய். 

கொலை நடந்த தகவல் கிடைத்ததும் ஸ்பாட்டுக்கு இன்ஸ்பெக்டர் பாலாஜியும் காவலர்களும் சென்றிருக்கிறார் கள். எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் அங்கே சென்றிருக்கிறார். கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டார். தந்தையால் காயமடைந்த கோகிலாவை விசாரித்தார். அந்தப் பெண்ணின் உடம் பெங்கும் நகக்காயங்களும், கீறல்களுமாக இருந்தது.      உடனே அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்தியவர், "மகளை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்பாராமல் நடந்துவிட்ட கொலைதான் இது. தன்னையும், தன் மகளையும் காப்பாற்றும் வகையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எனவே அந்த உஷாராணி மீது எஃப்.ஐ.ஆர், போட்டுட்டு, அந்தம்மாவை விடுவிச்சி டுங்க'' எனக் கூறினார் அஸ்ரா கார்க். அதனால் இ.பி.கோ 100, 120 செக்ஷன்களின்படி வழக்கைப் பதிவு பண்ணிவிட்டு, தமிழகத்திலேயே முதல்முறையாக ஒரு கொலைக் குற்றவாளியை காவல் நிலையத்திலேயே விடுவித்திருக்கிறார்கள்.  "இது எங்களுக்கே புதிய அனுபவம்'' என்றார் இன்ஸ் பெக்டர் பாலாஜி.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எஸ்.பி. அஸ்ரா கார்க்கோ, "இது திட்ட மிட்ட கொலையல்ல என் பதை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான், இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்கிறது''’என்றார் அழுத்த மாய்.  ஒரு கொலைச் சம்ப வத்தில், கொலையாளியின் பக்கத்து நியாயத்தை மனி தாபிமானத்தோடு புரிந்து கொண்டு, மகளைக் காப் பாற்றுவதற்காக தனது கணவ னாகிய காமமிருகத்தை கொன்றது தவறில்லை என்று கொலையாளியை விடுவித்த அஸ்ரா கார்க், தற்போது கரூர் வழக்கை கையாளுவதால், 41 பேர் பலியான சம்பவத்தில், தீவிர விசாரணை நடத்தி, நீதியை நிலைநாட்டுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

nkn111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe