புதிய டி.ஜி.பி. யார்

புதுப்பிக்கப்பட்டது
dgpSS

 

மிழக காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) சங்கர்ஜூவால் வருகிற ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யார்? என்கிற விவாதம் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. புதிதாக நியமிக்கப்படும் டி.ஜி.பி.தான் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின்போதும் நீடிப்பார் என்பதால் புதிய டி.ஜி.பி. குறித்த எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்தபடி இருக்கிறது. 

சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல் களை பிறப்பித்திருக்கிறது. பிரகாஷ்சிங்      தொடர்ந்த வழக்கில் தெளிவான வரையறைகளை முன்னிறுத்தி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டி ருக்கின்றன. 

புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுபவருக்கு குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கவேண்டும், நேர்மையான தேர்வை உறுதிப்படுத்த மத்திய பணியாளர் தேர்வாணையத்துடன் (யு.பி.எஸ்.சி.) மாநில அரசுகள் கலந்தாலோசிக்க வேண்டும், தகுதி அடிப்படையிலான செயல் முறையாக இருக்கவேண் டும். அது குறித்த தகு திப் பட்டிய லை 3 மாதங்களுக்கு முன்பாக தயாரித்து யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்கிற வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். அதனால் மாநில அரசு நினைக்கிற மாதிரி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை நியமனம் செய்துவிட முடியாது. இப்படிப்பட்ட சூழல் இருப்பதால்தான் புதிய டி.ஜி.பி. குறித்த விவாதங்கள் எதிரொலிக்கத் தொடங்கி யிருக்கின்றன. 

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’"உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களின்படியே ராமா னுஜம், அசோக்குமார், டி.கே.ராஜேந்திரன், ஜே.கே.திரிபாதி, சைலேந்திரபாபு ஆகியோர் காவல்துறை தலைவர்களாக கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டார்கள். தற்போதைய காவல்துறை தலைவர் சங்கர்ஜூவாலும், அதன்படியே   தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார். 

அந்த வகையில் சங்கர்ஜூவாலின் 2 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜூன் மாதமே (2025) முடிவடைந்துவிட்டது. ஆனால், அவரது ஓய்வு பெறும் காலம் ஆகஸ்ட் (2025) வரை இருப்பதால் பதவியில் இருந்து வருகிறார் சங்கர் ஜூவால்.  ஆகஸ்ட் 31-க்கு பிறகு புதிய டி.ஜி.பி. நியமிக்கப்பட வேண்டும். 

இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, 30 ஆண்டுகள் சர் வீஸை முடித்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களின் சீனியாரிட்டியை முன்னிறுத்தி நேர்மையான செயல்முறை சார்ந்த தேர்வினை புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதில் கையாள வேண்டும். அதனடிப்படையில் தகுதிவாய்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு முன்பாக அதனை யு.பி.எஸ்.சி.க்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும். அந்த வகையில், கடந்த மே 30, 2025-ல் இந்த பட்டியல் யு.பி.எஸ்.சிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட பட்டியல் சென்றதாகத் தெரியவில்லை''’ என்று சுட்டிக்காட்டு கிறார்கள். 

இது குறித்து மேலும் நாம் விசாரித்த போது,”"ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சீனியாரிட்டிபடி சீமா அகர்வால்,  ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார், வன்னியபெருமாள் ஆகியோர் மாநில அளவில் முதல் 5 இடத்தில் இருக்கின்றனர். இது குறித்த பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். 

dgp1

யு.பி.எஸ்.சி. தலைவர் தலைமையிலான குழு, இந்த 5 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளிலிருந்து 3 பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்து அந்த மூவரில் ஒரு அதிகாரியை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக தேர்வு செய்துகொள்ள மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். அதேசமயம், இவர்களில் யார் மீதேனும் வழக்குகள் இருந்தால் அவர்களைத் தவிர்த்து, குறைந்தபட்சம் ஓய்வு பெற 6 மாதங்கள் பதவிக் காலம் இருக்கும் மீதமுள்ள அதிகாரிகளில் மூவரை தேர்வு செய்து மாநில அரசுக்கு யு.பி.எஸ்.சி. அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை தேர்வு செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு. 

அந்த வகையில், மேற்கண்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவர்தான் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி புதிய டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்படுவார். ஆனால், தகுதிப் பட்டியல் இதுவரை அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. அனுப்பப்படவில்லையெனில், சட்டம் ஒழுங்கு புதிய டி.ஜி.பி. நியமனத்தில் தி.மு.க. அரசுக்கு வேறு ஏதேனும் திட்டம் அல்லது யோசனை இருக்கலாம். காரணம், சீனியாரிட்டி பட்டியலில், முதல்வரை சுற்றியுள்ள அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட நபர் யாரும் இல்லாததுதான்''”என்று விவரிக்கிறது கோட்டை வட்டாரம். 

புதிய டி.ஜி.பி. நியமனம் குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ”நெறிமுறைகளின்படி 3 மாதத்திற்கு முன்பு யு.பி.எஸ்.சி.க்கு தகுதிப் பட்டியல் சரியான நேரத்தில் அனுப்பப்படாத சூழலில், சங்கர் ஜூவால் ரிட்டயர்ட் ஆனதும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவியில் திடீர் வெற்றிடம் உருவாகும். அது சர்ச்சையாகவும் மாறக்கூடும். அதைத் தவிர்க்க, தி.மு.க. அரசுக்குத் தோதான ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்படலாம்.

ஆனால், பொறுப்பு டி.ஜி.பி. அல்லது இடைக்கால டி.ஜி.பி. என ஒருவரை நியமிப்பது, உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக மாறும். பெரும்பாலும், இடைக்கால டி.ஜி.பி. என்கிற கான்செப்ட்டை உச்சநீதிமன்றம் விரும்புவதில்லை. அதனால், அப்படிப்பட்ட சட்டச்சூழல்களை முதல்வர் ஸ்டாலினும் விரும்பமாட்டார். 

அதேசமயம், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தாமல் இருந்தால், முறைப்படி புதிய டி.ஜி.பி. தேர்வு செய்யப்படும்வரை தற்போதைய சங்கர்ஜூவாலே இடைக்கால டி.ஜி.பி.யாக தொடர்வதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவுகள் வழிகாட்டியுள்ளது. 

இதனையெல்லாம் கருத்தில்கொண்டு, புதிய டி.ஜி.பி.யை தேர்வுசெய்து நியமித்தால் தி.மு.க. அரசு சர்ச்சைகளை தவிர்க்கலாம். இதற்கு மாறாக, தேர்தல் நெருங்கும் காலம் என்பதால் தேர்தல்வரை தங்களுக்கு தோதான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியை பொறுப்பு டி.ஜி.பி.யாக தி.மு.க. அரசு நியமித்தால், தேர்தல் நேரத்தில் அந்த டி.ஜி.பி.யை மாற்றிவிட்டு புதிதாக ஒருவரை தேர்தல் கால டி.ஜி.பி.யாக இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும். அது, தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்''’என்று பின்னணிகளை விவரிக்கின்றனர்.   

 

nkn120725
இதையும் படியுங்கள்
Subscribe