மிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இதில் ரேம்ப் வாக் சென்றபோது விஜய்யைப் பார்க்கச்சென்ற சரத்குமார் என்ற தொண்டரை அவரது பவுன்சர்கள் தூக்கி கீழே வீசியதாகவும், அதனால் தனக்கு நெஞ்சுவலிப்பதாகவும் பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளரிடம் சரத்குமாரும் அவரது தாயும் புகாரளித்தனர். இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற் றும் பவுன்சர்கள் மீது 346/25மந, 189(2), 296(க்ஷ), 115(2) பி.என்.எஸ். பிரிவு களின்கீழ், வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கானது மதுரை மாவட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

Advertisment

 இதற்கிடையே "விஜய்யின் பவுன்சர்கள் என்னைத்தான் தள்ளிவிட்டனர், சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோவில் இருப்பது நான்தான்' என்று அஜய் என்ற இளைஞர் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் தூக்கிவீசிய வீடியோ வில் சரியாக முகம்தெரியவில்லை. பின்புறம் மட்டுமே இருவர் வெளியிட்ட வீடியோ விலும் தெரிந்தது. ஆனால் இருவருமே வீடியோவில் இருப் பதுபோன்று வெள் ளைச் சட்டையில் கருப்புக் கோடு போட்ட சட்டை அணிந்திருந் தனர்.  

பெரம்ப லூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், "சரத்குமார் என்ற இளைஞர் விஜய்யின் பவுன்சர்கள்மீது புகார் கொடுத் துள்ளார். ஆனால் அதில் உண்மையில்லை. உண்மையிலேயே பவுன்சர் தூக்கிவீசியதாகக் கூறப்படும் இளைஞர் விழுப்புரத்தைச் சேர்ந்த அஜய்தான். அவரே இதுபற்றி வீடியோவும் வெளியிட்டுள்ளார். அஜய்யை அப்படியே பவுன்சர்கள் கீழே தூக்கிப்போடவில்லை. பத்திரமாக கீழே இறக்கிவிட்டனர். அஜய்யை பவுன்சர்கள் கீழே தள்ளிவிட முயன்றபோது அவர் கம்பியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இதைப் பார்த்த விஜய், "ஏன், ஏன் இப்படி பண்றீங்க, பொறுமை..' என பவுன்சர்களை அதட்டிய வீடியோ காட்சிகளையும் வெளி யிட்டார். அந்த வீடியோவில் அஜய் கீழே விழவில்லை. கீழே நின்ற விஜய்யின் பவுன்சர்கள் அவரை பத்திரமாக கீழே இறக்கிவிட்டனர். அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தார்.

Advertisment

 இந்நிலையில் ஆகஸ்ட் 28 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தன் தாயுடன் விசாரணைக்கு வந்த சரத்குமாரை சந்தித்தோம். “"விஜய்யைப் பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினேன். அப்போது சுமார் 10 பவுன்சர்கள் என்னை நோக்கி ஓடிவந்தார்கள். அதிலொருவர் என்னை கீழே இறங்குமாறு ஒருமையில் திட்டினார். பின்னர், விஜய்யின் பாதுகாவலர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கிவீசினர். அப்போது அங்கிருந்த கம்பியைப் பிடித்துத் தொங்கினேன். அந்த கம்பியின் அழுத்தத்தில் எனக்கு நெஞ்சுப்பகுதி, உடலில் உள்காயம் ஏற்பட்டது. எனக்கு இன்னும் வலி உள்ளது. என் தலைவனைத் தொட்டுப்பார்க்கவேண்டும் போலிருந்தது. அதனால்தான் அருகில் சென்றுவிட்டேன். நான் மதுரைக்கு வரும் செய்தியறிந்து என் அம்மாவிடம் இதுதொடர்பாக, த.வெ.க. பொறுப்பாளர்கள் சமரசம் பேசினார்கள். ஆனால், முதல் உதவி சிகிச்சைக்குக்கூட அப்போது யாரும் உதவ வரவில்லை''’என்றார். 

youngester1

"நீ, உன்னைத்தான் விஜய் பவுன்சர்கள் தூக்கிவீசிட்டதா சொல்ற, ஆனால் விழுப்புரத்தைச் சேர்ந்த அஜய் என்ற பையன் நீ சொல்வது உண்மையில்லை. தூக்கிவீசியது அவனைத்தான். தனக்கு எந்த அடியும் படவில்லை என்கிறாரே''’என்றோம். 

Advertisment

"அப்படியென்றால் என் அம்மாவிடம் ஏன் சமரசம் பேசவேண்டும்? ஏன், புகாரை திருப்பி வாங்கச் சொல்லவேண்டும். அந்த பையனும் அங்கிருந்தான், அவனும் மேலே ஏறியிருக்கலாம். அவனைத் தள்ளிவிட்டார்களே தவிர, தூக்கி வீசவில்லை. ஆனால் என்னை மட்டும்தான் அந்த பவுன்சர் தூக்கி வீசினார். அந்தப் பையன் கீழே நிற்பதுபோன்ற படத்தைத்தான் காண்பிக்கிறார்''” என்று அடித்துச்சொன்னார்.

"முதலில் வீடியோவில் தூக்கி வீசப்பட்டது நான் இல்லை. அந்த பையன் வேறு,… நான் வேறு.… என் அம்மா தவறாகச் சொல்லிவிட்டார்'' என்று பேட்டி கொடுத்         தீர்களே?” என்றதும்... “"த.வெ.க. பொறுப்பாளர் கள் என்னை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அப்படிச் சொன்னேன். உண்மையில் நான்தான் அந்தப் பையன்''’ என்றார்.  

சரத்குமாரின் தாயோ, "எங்க பையன் மதுரையில் விஜய் மாநாடு நடக்குது, போறேன்னு சொன்னான். போகாதப்பான்னு சொல்லிவைச்சேன். மாநாட்டுக்குப் போகல. ஒரு இன்டர்வியூக்காக திருச்சிக்குப் போறேன்னு சொல்லிட்டு மாநாட்டுக்குப் போயிருக்கான். அது எனக்குத் தெரியாது. விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் இவன் மேலே ஏறிப்போயிட்டான். சரி மேடையில ஏறிட்டான்.. பொறுமையா போப்பான்னு சொல்லி விலக்கிவிட்டிருக்கணும். தூக்கி பந்தைக் கடாசுவது மாதிரி, குப்பையை தூக்கி எறியுற மாதிரி கடாசியிருக்காங்க. அவன் கை, கால் உடைந்திருந்தால், உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? இதுபோல் எந்த புள்ளைக்கும் நடக்கக்கூடாது... அதுதான் புகார் கொடுக்க வந்தேன்''’என்றார்

இருவருமே "நான்தான் அந்தப் பையன்' என்று மாறி மாறிச் சொல்வது மக்களையும், போலீஸாரையும் குழப்பிவருகிறது.