னவரி 3-ஆம் தேதி இரவு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் "யார் பெரியார்' என்கிற தலைப்பில் மயிலாடுதுறையில் மிகப்பெரிய பொதுக்கூட் டம் நடந்தது. மாநில நிர்வாகிகளுள் ஒருவரான தமிழன் காளிதாஸ் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

Advertisment

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "நாங்கள் பெரியாரைப் போற்றுகிறோம், ஆனால் யார் பெரியார் என்பதுதான் இங்கே பிரச்சனை. இந்த நிலத்தில் திராவிடம் என்கிற கோட்பாடு, தத்துவ சித்தாந்தம் ஏன் வருகிறது? முதலில் திராவிடம் என்கிற சொல் எங்கிருந்து வருகிறது. அது எந்த மொழிச் சொல்? திராவிடம் என்கிற சொல்லே சமஸ்கிருதச் சொல். திராவிடம் என்கிற சொல்லை கால்டுவெல் மனுஸ்மிருதியில் இருந்துதான் எடுத்தேன் என்கிறார். ஆரியர்கள், திராவிடர்கள் என்கிற இரண்டு சொல்லும் ஐரோப்பியர்கள் இந்த நிலத்தில் பயன்படுத்தியது. திராவிடம் என்பது வடபுலத்திலிருந்து தென்புலத்திற்கு நகர்ந்து வந்த பிராமணர்களைக் குறிக்கும் சொல். உ.வே.சாமிநாத ஐயரை, ஞானசம்பந்தரை திராவிட சிசு என்றுதான் சொல்கிறார்கள். இப்போதுகூட காஞ்சி சங்கர மடத்திற்கு ஒரு இளைய மடாதிபதியை தேர்வுசெய்திருக்கிறார்கள். அவர் பெயரும் கூட டிராவிட் என்றுதான் முடியும். (கணேச சர்மா திராவிட்)

Advertisment

தமிழர் கழகம் என்று தொடங்கவிருந்ததை திரா விடர் கழகம் என மாற்றக் காரணமே பெரியார் தலைவ ராக இருக்கமுடியாது என்பதால்தானே. அப்போது பெரியாரோடு முரண்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவை வரச்சொல்லி 3 மணி நேரம் திராவிடம் என்றால் என்ன என மக்களிடம் தெளிவுற செய்திருக்கிறார்கள். அதே போல தமிழன் என்று சொன்னால் பிராமணனும் தமிழன் என்று வந்துவிடுவானே என்று கி.வீரமணி கூறு கிறார். பிராமணன் தமிழன் என்று வந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை, நீங்கள் தமிழன் இல்லை, அதனால் நீங்கள் வரமுடியாது. இதற்காகத்தானே திராவிடத்தை கொண்டுவந்தீங்க. 

periyar1

தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிடப் பொங்கல் என்கிறார். கருணாநிதி மகன் ஸ்டாலின் திராவிடப் பொங்கல் வைத்தால் மானத்தமிழன் பிரபாகரனின் மகன் அந்த திராவிடத்தையே பொங்கல் வைப்பான். காவிரியில் தண்ணீர் வாங்கித்தர துப்பில்ல, திராவிட பொங்கல் ஒரு கேடா. நூறு ஆண்டுகளாக பிராமணப் பூச்சாண்டியை காட்டி ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வாரிசுகளை மழுங்கடித் தீர்கள். தமிழை, தமிழரை இழிவாகப் பேசிவிட்டார் என்பதற்காக கனகவிசயனின் தலையில் கல்லினைச் சுமக்கவைத்து பாட்டி கண்ணகிக்கு கோயில் கட்டிய செங்குட்டு வனின் பிள்ளைகள் நாங்கள். இந்தியா முழு வதும் பிராமணர்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் எதிர்ப்பு. பரம்பரை பகையை ஊதிவிட்டு குளிர் காய்கிறது திராவிடம். திராவிடம் என்பவன் அங்குட்டு நில்லு. உன் ஓட்டு எனக்கு தீட்டு. தமிழர்கள் என்று சொல்லுபவர்கள் எனக்கு ஓட்டுப் போடு.

Advertisment

நீராருங் கடலுடுத்த நிலமடந் தைக் கெழிலொழுகும்....எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் கன்னடமும் களிதெலுங்கும் என இருந்த வரி களை தூக்கியது யார், கருணாநிதி தானே'' (பாடல் வரிகளையே தப்புத் தப்பாக கூறியதோடு பாடியவர் பெயரையும் மாற்றிக் கூறினார் சீமான்)

யார் பெரியார் என்று வரிசை படுத்திப் பேசிய சீமான், "என்ன பெத்த அப்பன் என்னைக் காத்தான். அதனால் அவன் பெரியார்.  மண்ணைக் காத்தான் நம்மாழ்வார், அவன் என் இனத்தின் பெரியார். பாரம்பரிய விதை களை காத்த நெல் ஜெயராமன் பெரியார். இந்த நாடு அடிமைப் பட்டுக் கிடந்த நாட்களில் ஆயிரக்கணக்கான நாடகங்களை நடத்தி 29 முறை சிறைத்தண்டனை பெற்ற விசுவநாததாஸ் பெரியார்...''’என வரிசைப்படுத்தி வந்தவர், இறுதியில், "பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எங்களின் பெரியார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எங்களின் பெரியார்''’என்றார்.  

மறுநாள் நான்காம் தேதி திராவிட மாணவர் பேரவை சார்பில் அதே இடத்தில் மிக பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில்  மாணவர்களும், மாணவி களும் பெரும்பான்மையாகப் பேசினர். 

கூட்டத்தில் பேசிய முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், "பெரியார்,  பெரியார் என்று தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை. 1938-ல் நடந்த மகளிர் மாநாட்டில் எல்லா மகளிர் தலைவர்களும் சேர்ந்து கொடுத்த பட்டம். ஐக்கிய நாடுகள் சபை யில் இருக்கும் யுனெஸ்கோ 1970, பெரியாரைப் பாராட்டியிருக் கிறது. எம்.என்.ராய், என்னுடைய நாத்திக ஆசான் என பெரியா ரைப் பாராட்டியிருக்கிறார். திருக்குறள் எப்படி உலகப் பொதுமறை யோ அதேபோல பெரியாரும் உலகமயமாகிவிட்டார். அப்படிப் பட்ட பெரியாரைத் தொட்டு சீமான் வீணாகப்போகிறார். ராஜாஜி, திரு.வி.க.வை விடவா பெரிய அறிவாளியா சீமான்? சீமானுக்கு முடிவுரை எழுதப்போகும் காலம் வந்துவிட்டது'' என்று பேசிமுடித்தார்.

மீத்தேன் திட்ட ஒருங்கிணைப்பாளரும், வரலாற்றுப் பேராசிரியருமான ஜெயராமன் பேசுகையில், "ஈழ விவகாரத்தில் மேதகு பிரபாகரனை கையிலெடுத்து தமிழீழத்தை அழித்ததுபோல், பெரியாரை அழிக்க கையில் எடுத்திருக்கிறார்கள். பெரியார் முதலமைச்சராகவோ, பிரதமராகவோ, வேறு எந்த அமைச்சராக வும் இருந்ததில்லை. 1940-களிலும் 42-லும் முதலமைச்சராக இருக்க கவர்னரிடமிருந்து அழைப்பு வந்தும்கூட அதை நிராகரித்தவர். அதேநேரம் கடந்த ஒரு நூற்றாண்டாக பெரியார்தான் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். பெரியார் இல்லாமல் போனாலும் அவரது தத்துவமும், சொற்களும் இன்று வரை செயல்பட்டுவருகிறது.

periyar2

திராவிட கோட்டையை பிராமண கடப்பாரையைக் கொண்டு இடிப்பேன் என்கிறார் சீமான். ஒரிஜினல் பார்ப்பன கடப்பாரையான ராஜகோபாலாச்சாரி எவ்வளவோ முயன்றார், பெரியார் தனது இடது கையால் அதைப் பிடுங்கி வீசியெறிந்தார். 1925-ல் ஆர்.எஸ்.எஸ். துவங்கினார் கள். 2025 முடியும்போது இங்கு இந்துராஷ்டிரத் தை உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவர்கள் விருப்பப்படி அமைய இந்தியா மேப்பில் ஒரேயொரு இடம்தான் இடிக்கிறது. அதுதான் தமிழ்நாடு. காவல் அரணாக பெரியாரும், திராவிட இயக்கமும் இருக்கிறது. இவற்றைத் தகர்க்க அடி யாட்களை அனுப்புகிறார்கள். அந்த அடியாட்களில் ஒருவர்தான் சீமான்.." என்று பேசி முடித்தார்.

திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகையில், "சீமான் யூடிப் அரசியல் செய்பவர். சீமான் யாரையெல்லாம் பெரியாரென்று சொன்னாரோ அவர்கள் எல்லோருமே பெரியார் ஒருவர்தான் பெரியார் என்றனர். பெரியார் இறந்து 53 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் பெயரைச் சொன்னால் எதிரிகள் குலைநடுங்கி பதறுகிறார்கள். பெரியாரை திட்ட வந்த சீமான், கலைஞரை தொட்டு பிறகு ஸ்டாலினிடம் வந்துநிற்கிறார். இதுதான் அவருக்கான அஜண்டா. இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததுமே பலபேர் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அதன் தாக்கம்தான் சீமானை இங்கு பதறவைத்திருக்கிறது'' என்றார்.

கடைசியாகப் பேசிய சுப.வீரபாண்டியன், "சீமானுக்கு பெரியாரைப் பேசுவதற்கு ஏதேனும் தகுதி வேண்டாமா? அரசியல் எங்களுக்கு உணர்வு, வாழ்க்கை, மூச்சு. உங்களுக்கு அது பிழைப்பு, தொழில், காசு தவிர உங்களுக்கு நோக்கம் எதேனும் உண்டா? 

அறிவாளிக்கு அடை யாளம் சத்தம்போட்டுப் பேசுவதில்லை. செய்தியை யாவது சரியாகச் சொல் கிறீர்களா? அதுவுமில்லை 3-ஆம் தேதி இந்த மேடையில் ஒருமணி நேரம், 42 நிமிஷம் கத்திப் பேசி யிருக்கிறீர்கள். அதில் பாதி தவறு, பாதி பிதற்றல், கத்தல். "மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்று பாடிய நாமக்கல் கவிஞர் என்று உளறித் தீர்த்திருக்கிறீர்களே... அதைப் பாடியது கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. 

மீனாம்பாள் சிவராஜ் எங்களுக்கு பெரியார் என்றீர்கள். மீனாம்பாள்தான் ஈ.வே.ராவுக்கு பெரியார் என பட்டம் கொடுத்தார் என்கிற வரலாறாவது தெரியுமா? குடித்துவிட்டு உளறுவதுதான் உங்கள் வாடிக்கை.

நாமக்கல் கவிஞருக்கு இறக்கும்வரை பெருந்தொகையை உதவியாகக் கிடைக்கச்செய்தவர் கலைஞர். வ.உ.சி அவர்கள், பெரியார் குறித்தும் சுயமரியாதை இயக்கம் குறித்தும் புகழ்ந்து பேசியதை வ.உ.சி. பதிப்பகம் புத்தகமாகவே வெளியிட்டுள்ளனர். 1944-ல்தான் பெரியார் தனது கழகத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார். அதற்குமுன்பே அயோத்திதாசர் 1892-ல் திராவிடத்தை பெயராக வைத்து தனது அமைப்பைத் தொடங்கினார். பிறகு 1894-ல் திராவிடத்தை வைத்து கட்சியை தொடங்கியவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். 1947-ல் ஈரோடு மாநாட்டில் திரு.வி.க., திராவிடர் நாட்டின் வரைபடம் ஒன்றை வெளியிட்டுப் பேசியபோது, "நீ ஏன் இந்த வரைபடத்தைத் திறக்கிறாய் என்று கேட்கிறார்கள். அதிலென்ன தவறு, நானும் திராவிடன்தானே என்று சொன்னவர் திரு.வி.க., தேவநேயப் பாவணருக்கு "திராவிடமொழி ஞாயிறு' என பட்டம் கொடுத்தவர் பெரியார். இப்படி நீ கூறும் பெரியார்கள் எல்லோரும் தங்களுக்கான பெரியார் என ஏற்றுக்கொண்ட பெரியாரை சம்பந்தமேயில்லாமல் பேசுவது பிழைப்பு வாதம். ஒரு படத்தை எடுத்துவிட்டு பிழைப்பு நடத்துகிற சீமான் போன்றவர்கள் பெரியாரை குறைபேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது?''’என்று பேசிமுடித்தார்.