வேலூர் மாவட்டத் திலுள்ள ஐந்து தொகுதிகளில் கீழ்வைத்தியனான் குப்பம் என்கிற கே.வி.குப்பம் (தனி) தொகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதிச் சீரமைப்பில் புதிதாக உருவான தொகுதி. இந்த தொகுதிக்குள் கே.வி.குப்பம் ஒன்றியத்தி லுள்ள 39 ஊராட்சிகள், குடியாத்தம் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சிகள், காட்பாடி ஒன்றியத்திலுள்ள 2 ஊராட்சி கள் என 75 ஊராட்சிகள் உள் ளன. முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த தொகுதி. பட்டியலின மக்கள், வன்னிய சமூகத்தினர், நாயுடு, முதலியார் இத்தொகுதியில் அதிகமாக வசிக்கின்றனர்.
2011-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் குடியரசுக் கட்சி செ.கு. தமிழரசன் நின்று வெற்றிபெற்றார். 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் லோகநாதன் களமிறக்கப் பட்டு வெற்றிபெற்றார். 2021-ல் அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். கூட்டணிக் கட்சிக்கு ஒரு தொகுதி தரவேண்டும் என்பதால் சென்னை- திருவள்ளூர் மாவட்டத்தை தாண்டி அரசியல் செய்யாத ஜெகன்மூர்த்திக்கு தனித்தொகுதியான இந்த தொகுதியைத் தந்தது அ.தி.மு.க. பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர், தொகுதிக்கு என எதையும் செய்யவில்லை.
தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்காத எம்.எல்.ஏ. என்றால் அது இவர்தான். தற்போது காதல் திருமண விவகாரத்தில் மைனர் பையனைக் கடத்திய விவகாரத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ள உச்சநீதிமன்றம் சென்று போராடிவரு கிறார். அதனால், வரும் தேர்தலில் ஜெகன் மூர்த்திக்கு சீட் வழங்கமாட்டார் இ.பி.எஸ். என் கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். முன்னாள் எம்.எல்.ஏ., கே.வி.குப்பம் ஒ.செ. லோகநாதன் இந்த முறை சீட் வாங்கிவிடவேண்டும் என முயற்சிக் கிறார். அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொரு ளாளர் ஆனந்தன், வேலூர் புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாபு, காட்பாடி ஒ.செ. சுபாஷ் போன்றோரும் சீட்டுக்காக மா.செ.வை சுற்றிச்சுற்றி வருகின்றனர்.
பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர்களில் ஒருவரான வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியா யினி இந்த தொகுதியைக் குறிவைத்துள்ளார். 2016-ல் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு தராததும், அவர் அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு தாவ ஒரு காரணம். இந்தமுறை பா.ஜ.க.வுடனான கூட்டணியில் அ.தி.மு.க. இருப்பதால் தலைமை தனக்கு சீட் வாங்கித் தந்துவிடுமென்கிற நம்பிக்கையில் காய்நகர்த்து கிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சரு மான துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பம் கிராமம், வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வின் ஊரான லத்தேரி இரண்டும் கே.வி.குப்பம் தொகுதிக்குள்தான் வருகின்றன. அப்படியிருந்தும் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தலிலும் இந்த தொகுதியில் தி.மு.க. தோல்வியைச் சந்தித்தே வரு கின்றது. கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவராக இருந்த சீத்தாராமன் 2011, 2021 தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார். தற்போது குடியாத்தம் எம்.எல்.ஏ.வாக உள்ள அமுலுவிஜயன், 2016-ல் இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டு அவரும் தோல்வியையே சந்தித்தார். மூன்று முறையும் உதயசூரியனே நேரடியாகக் களமிறங்கியும் தோல்விதான்.
அதற்கான முக்கிய காரணம், கே.வி.குப்பம், குடியாத்தம் இரண்டுமே தனித்தொகுதிகள். குடியாத்தம் ஒன்றியத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய என 5 ஒ.செ.க்கள் நியமிக்கப்பட்ட னர். அதில் 2 முதலியார்கள், 2 நாயுடுகள், 1 வன்னியர் என உள்ளனர். ஒரு பட்டியலின ஒ.செ.கூட கிடையாது. தொகுதியில் 75 ஊராட்சிகள் இருந் தாலும் தட்டப்பாறை, லத்தேரி, கொண்டசமுத் திரம், நெல்லூர்ப்பேட்டை, மேல்மோட்டூர் போன்ற பத்து முதல் 15 ஊராட்சிகள் தி.மு.க.வுக்கு பாதகமாகவே உள்ளன. மூன்று தேர்தலிலும் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தி.மு.க. தோல்வியடைந்தது. இங்கெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வைவிட தி.மு.க. லீட் எடுக்கிறது. சட்டமன்ற தேர்தலின்போது வாக்கு குறைகிறது, இதனை சரிசெய்யவேயில்லை. சீத்தாராமன் ஒன்றிய சேர்மனாக இருந்தபோதும் நல்லபெயர் எடுக்கவில்லை. அவரது ஊரான அம்மனாங்குப்பத்திலேயே அவருக்கு குறைந்த வாக்குகளே கிடைக்கின்றன. இரண்டுமுறை சீட் தரப்பட்டும் தோல்வியை சந்தித்தார். இந்தமுறை தொகுதியில் உதயசூரியன் உதிக்கவேண்டும் என கீ.வ.குப்பத்துக்கு புதிய தொகுதிப் பொறுப்பாளராக மாநில செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சிவ.ஜெயராஜை நியமித்து தொகுதியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் தீவிரம்காட்டுகிறார் மண்டலப்பொறுப்பாளர் அமைச்சர் எ.வ.வேலு.
கடந்த தேர்தலில் தலைவரிடம் வற்புறுத்தி சீத்தாராமனை வேட் பாளராக்கினார் துரை முருகன். தான் சிபாரிசு செய்த வேட்பாளர் தோற்றதால் அதிர்ச்சியாகி விட்டார். அடுத்ததாக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப் பாளர் முருகானந்தம் சீட் கேட்கிறார். எனக்கு இல்லையென்றால் என் மனைவி மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ஆனந்திக்கு தாங்க எனக் கேட்பார் என்கிறார்கள்.
கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில துணைச்செய லாளர், முரசொலி தமிழ் மன்றத்தின் நிறுவனர் கோபி தீவிரமாக முயற்சி செய்கிறார். மா.செ.வுடனே வலம் வரும் மாவட்ட துணைச் செயலாளர் முனைவர் பிரபாத்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, லத்தேரி அன்னங் குடியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் திவ்யா சிவக்குமார் என பட்டியல் போடுகிறார்கள்.
இதில் கோபி, திவ்யா சிவக்குமார் அமைச்சர் துரைமுருகனை வலம்வருகிறார்கள். மா.செ. நந்தகுமாரை பிரதாப் குமாரும், முருகானந்த மும் நம்பிக்கையோடு வலம்வருகிறார்கள்.