Advertisment

யாருக்கு சீட்டு? -புதுக்கோட்டை போட்டாபோட்டி!

pudukottai

புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மாவட்டத் தலைநகரிலுள்ள தொகுதி புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாநகர மக்களின் முக்கியமான பிரச்சனைகளை மாநகராட்சியே பார்த்துக்கொள்ளும் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க. - அ.தி.மு.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இப்பவே தயாராகி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

Advertisment

தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. மாநகரில் இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதி இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. குளங்களில் ஆக்கிர மிப்புகளால், மழைக்காலத்தில் மழைத்தண்ணீர் நகர்முழுவதும் தேங்கி நாற்றமெடுக்கிறது. மாநகராட்சி கலைஞர் பூங்கா, காந்தி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கிடங்களில் கட்டணக் கொள்ளை என பொதுமக்கள் புகார் வாசித்துக்கொண்டிருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

Advertisment

தற்போது, இந்தத் தொகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த டாக

புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மாவட்டத் தலைநகரிலுள்ள தொகுதி புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாநகர மக்களின் முக்கியமான பிரச்சனைகளை மாநகராட்சியே பார்த்துக்கொள்ளும் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க. - அ.தி.மு.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இப்பவே தயாராகி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

Advertisment

தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. மாநகரில் இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதி இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. குளங்களில் ஆக்கிர மிப்புகளால், மழைக்காலத்தில் மழைத்தண்ணீர் நகர்முழுவதும் தேங்கி நாற்றமெடுக்கிறது. மாநகராட்சி கலைஞர் பூங்கா, காந்தி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கிடங்களில் கட்டணக் கொள்ளை என பொதுமக்கள் புகார் வாசித்துக்கொண்டிருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

Advertisment

தற்போது, இந்தத் தொகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த முறை இந்த சீட்டுக்காக 15 வருட சர்வீஸ் இருக்கும்போதே தனது அரசு மருத்துவர் பணியை துறந்துவிட்டு வந்தவர். வெற்றிபெற்றதும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார் கிடைக்கவில்லை. ஆனாலும் யாருடனும் பிரச்சனை இல்லாமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார். மறுபடியும் நமக்கே சீட்டு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இவரிடம் உள்ளது.

ஆனால், திருமயம் தொகுதியில் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் மிகக்குறைந்த வாக்குகளில் வெற்றிபெற்று அமைச்சராகவும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ள ரகுபதி "எனக்கு டவுனில்தான் வீடு உள்ளது. அதனால் இந்த முறை எனக்கு புதுக்கோட்டை தொகுதியை கொடுங்கள்' என்று தலைமையை கேட்டுவருகிறார். அதேபோல மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எம்.எம்.அப்துல்லா மற்றொரு பக்கம் கிச்சன் கேபினட் மூலம் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

இன்னொரு பக்கம், தன்னை மாநகர மேயராக்கிய மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் நேரு இந்த முறை புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராகும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுப்பார் என்று மாநகர மேயர் திலகவதி செந்தில் காத்திருக்கிறார். விராலிமலை தொகுதி யைச் சார்ந்தவரான வடக்கு மா.செ. செல்லப் பாண்டியன் எனக்கு விராலிமலையில் சீட் வேண்டாம். செலவு செய்யமுடியாது அதனால புதுக்கோட்டை தொகுதிக்கு வாய்ப்புக் கொடுக்கணும் என்று கேட்டுவருகிறார். இவர்கள் மட்டுமின்றி கடந்த முறை அ.தி.மு.க.வில் சீட்டு கொடுக்கப்பட்டு, தற்போது தி.மு.க.வில் இணைந்துகொண்ட கார்த்திக் தொண்டைமானும் தனக்கு தி.மு.க. சீட்டு தரும் என்கிறார். நைனா முகமது, லியாக்கத் அலி, எம்.எம்.பாலு, சுப.சரவணன், வீரமணி என பலரும் சீட்டு கிடைக்குமென்ற கனவில் உள்ளனர்.

அ.தி.மு.க.வில் மாஜி நெடுஞ்செழியன், தற்போது இங்கே போட்டி அதிக மில்லை, சீட்டுக்காக போட்டிபோடக்கூடிய கார்த்திக் தொண்டைமானும் இல்லை, ராஜசேகரும் இல்லை. அதனால் இந்த முறை தனக்கு தலைமை சீட்டு கொடுக்கும் என்ற முழுநம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருக்க, மாநகரச் செயலாளர் பாஸ்கர் தனக்கு மா.செ. விஜயபாஸ்கர் சீட்டு வாங்கிக்கொடுப்பார் என்று அவர் கூடவே சுற்றிவருகிறார். அதேநேரத்தில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு அதிக தொகை செலவழித்துவிட்டு இந்த புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை யாவது கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு விஜயபாஸ்கர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்தவர், எடப்பாடி வருகையின்போது பல செலவுகளை அவர் ஏற்றுக்கொண்டார். அதேபோல கடந்த ஆட்சிக்காலத்தில் மாஜி வேலுமணியின் பினாமியாக செயல்பட்டு எல்.ஈ.டி., நெடுஞ்சாலை ஸ்டிக்கர், கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு புகாரில், ரெய்டுகளில் சிக்கிய பழனிவேல், பணத்தை கட்டி வைத்துக்கொண்டு சீட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதேநேரத்தில், பா.ஜ.க மேற்கு மா.த. ராமச்சந்திரனோ, "அ.தி.மு.க. கூட்டணியில் புதுக் கோட்டை மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும். அது புதுக்கோட்டை தொகுதியாக இருக்கும். அந்த ஒதுக்கீட்டில் வரும் இந்த புதுக்கோட்டை தொகுதியில் எனக்குதான் சீட்டு கொடுப்பார்கள். செலவைப் பற்றி கவலையில்லை. எனக்கு சீட்டு கொடுத்தால் தி.மு.க.வில் அமைச்சர் ரகுபதிக்கே இங்கே சீட்டு கொடுத்தாலும் எதிர்த்துநின்று வெற்றிபெற்றுக் காட்டுவேன்'' ’என்று கூறிவருகிறார். அதே கட்சியில் மாஜி வேலுமணி பினாமியாக இருந்து அ.தி.மு.க பிரமுகராகக் காட்டிக்கொண்டவரும், எல்.ஈ.டி. முறைகேட்டில் சிக்கி, கருப்பு முருகானந்தம் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தவரான முருகானந்தம், தனக்குத்தான் சீட்டு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். 

மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பர்வேஸ், விஜய் ரசிகர் மன்றத்திலிருந்தே நகராட்சி கவுன்சிலர் ஆகிட் டேன். இப்ப புதுக்கோட்டை தொகுதி வேட் பாளராக கட்சி என்னைத்தான் நிறுத்துவாங்க என்று வேலைகளில் ஆர்வம் காட்டி வருவதோடு, டிசம்பரில் புதுக்கோட்டை வரும் விஜய்க்கு அதிக கூட்டம் கூட்ட மும்முரம் காட்டுகிறார். ஓ.பி.எஸ். அணியில் மாஜி நகர்மன்றத் தலைவர் ராஜசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் இருக்கிறார். புதுக்கோட்டையில் சீட்டுக்கான ஓட்டம் தொடங்கிவிட்டது.

nkn041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe