திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்குள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் (தனி), திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளும் தி.மு.க. வசமே உள்ளன. தி.மு.க. தொடங்கியது முதல் இப்போதுவரை தி.மு.க.வின் வெற்றிப் பட்டியலில் உள்ள தொகுதிகளில் முதன்மையானது திருவண்ணாமலை தொகுதி. தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் கடந்த தேர்தல்களைவிட இந்த தேர்தலில் இத்தொகுதியில் சீட் வாங்க பலத்த போட்டி நடக்கிறது. சீட் கேட்பவர்கள் தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தைத் தான் வழக்கமாக சுற்றுவார்கள், அதற்கு மாறாக அமைச்சர் எ.வ.வேலுவை கிரிவலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

dd

தற்போது தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரான சி.என்.அண்ணாதுரை. அடிப் ஸ்கீமில் தனது தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மூவாயிரம் பேருக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தந்து தென்னிந்தியாவில் முதலிடம் பெற்ற எம்.பி. ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி வாங்கித் தந்ததன் மூலமாக மக்க ளிடம் நல்ல பெயர் பெற்றுள்ளேன் என இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு ரிப்போர்ட் தந்துள்ளார். பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சொல் பேச்சு மீறா தவர் என்பதால் அண்ணாதுரைக்கே மீண்டும் சீட் வாங்கித் தருவார் என்கிறார்கள் அவரது ஆதர வாளர்கள். அண்ணாதுரையோ, எம்.பி. சீட் மீண்டும் கிடைக்குமா, கிடைக் காதா என்கிற கவலையில் உள்ளார்.

தி.மு.க. தலைமைக்கு மிக நெருக்க மான அமைச்சர் எ.வ.வேலுவின் இளைய மகனான தி.மு.க. மருத்துவரணி யின் மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பனை எம்.பி. தேர்தலில் நிறுத்துங்கள் என திருப்பத்தூர் மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ., நல்லதம்பி எம்.எல்.ஏ. போன்றோர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் வலியுறுத்தி வருகின்றனர். கம்பனின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் "வருங்கால எம்.பி.யே!' என இப்போதே கொண்டாடத் தொடங்கியதோடு, எம்.பி. சீட் கேளுங்கள் என்கிறது. மற்றொரு தரப்பு, "முதலில் மா.செ. பதவியை வாங்குங்கள், மற்றவை தானாக நடக்கும்' என்கின்றனர். இரண்டு தரப்பினரின் இருவேறு கருத்துக்களால், கட்சித் தலைமையும், அமைச்சரும் (வேலு) என்ன சொல்றாங்களோ அதுப்படி நடந்துக்கிறேன், நில்லுன்னா நிற்பேன், வேணாம்னு சொன்னால் தேர்தல் வேலையை மட்டும் பார்ப்பேன் என்கிற மனநிலையில் உள்ளார் கம்பன்.

Advertisment

tt

சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டியின் தம்பியும், தி.மு.க. மாநில பொறியாளர் அணிச் செயலாளருமான எஸ்.கே.பி.கருணா என்கிற கருணாநிதியை, தற்போது மாநிலம் முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், கட்சிக் கூட்டங் களில் கலந்துகொள்ள வைக்கிறது கட்சித் தலைமை. இளைஞரணி செயலாளர் உதய நிதியின் நேரடிப் பார்வையில் இருக்கிறார், இலக்கிய மேதைகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. சீட்டை நூலிழையில் பறிகொடுத்தவர். இந்த முறை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென தலைமையில் முயற்சித்து வருகிறார்.

எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஆகிவிடவேண்டும் என்கிற கனவில் நீண்ட ஆண்டுகளாக இருந்துவரும் திருவண்ணா மலை நகரமன்ற முன்னாள் தலைவரும், முன்னாள் தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஸ்ரீதர், தி.மு.க. தலைமையின் கிச்சன் கேபினட் வழியாக சீட் வாங்க முயற்சியைத் தொடங்கினார். பக்திமானான அவர், சீட் பெறு வதற்காக கோவில் கோவிலாக சென்று வேண்டுதல்களை வைத்துவந்தார். இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலுக்குள் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இப்படியொரு சிக்கலில் உள்ளவரை சீட் தரச்சொல்லி சிபா ரிசு செய்ய அமைச்சர் வேலு யோசிக்கிறார். எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும் என முயன்றுவருகிறார் ஸ்ரீதர்.

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை என இரண்டு தொகுதிகள் இதில் வருகின்றது. கடந்த தேர்தலின்போதே எங்கள் பகுதியை சேர்ந்த திருப்பத்தூர் ந.செ. ராஜேந்திரனுக்கு எம்.பி. சீட் வாங்கித் தாருங்கள் என எ.வ.வேலுவிடம், ஒ.செ. ராஜாமணி தலைமையில் நிர்வாகிகள் முறையிட்டனர், அப்போது கிடைக்கவில்லை. இப்போதாவது எங்கள் பகுதிக்கு தாருங்கள் எனக்கேட்கும் முடிவில் உள்ளனர். திருப்பத்தூர் ந.செ. ராஜேந்திரன், ஜோலார்பேட்டை மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி போன்றோரும் சீட் கேட்கும் முடிவில் உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல்களின்போது எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஆரணி தொகுதியை கேட்கும் காங்கிரஸ் கட்சி. இந்தமுறை ஆரணி தொகுதியோடு திருவண்ணாமலை தொகுதியைக் கேட்கும் பட்டியலில் வைத்துள்ளது. ஆரணியில் தி.மு.க.வே போட்டியிட வேண்டுமென விரும்புவதால் மாற்றுத் தொகுதி ஒன்றை கேட்போமென திருவண்ணாமலை தொகுதியைக் கேட்கிறது. திருவண்ணாமலை தொகுதி ஒதுக்கப்பட்டால் தங்கள் கட்சியின் மாவட்ட தலைவர் செங்கம் குமார் நிறுத்தப்படலாம்'' என்கின்றனர்.

அ.தி.மு.க.விலும் சீட் பெறுவதற்கான போட்டி பலமாகவே உள்ளது. திருவண்ணாமலை அ.தி.மு.க. கிழக்கு மா.செ.வாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனிடம், நீங்கள் எம்.பி. தேர்தலில் நில்லுங்கள், ஜெயிப்பீங்கன்னு ரிப்போர்ட் வந்திருக்கு எனச் சொல்லியுள்ளார் இ.பி.எஸ். அவர் வேண்டாமெனப் பின்வாங்கியதும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் நிற்கச் சொல்ல, எனக்கு எம்.பி.யெல்லாம் செட்டாகாது என உறுதியாகச் சொல்லிவிட்டார். அதே நேரத்தில், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், டி.டி.குமார் போன்றவர்களை நிறுத்தலாமா என வீரமணி தரப்பில் ஆலோசனை கேட்டபோது, கட்சித் தலைமை கேட்கும் பணத்தை எங்களால் கட்டமுடியாது எனத் தயங்கியபடி கூறியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் மா.செ. பெருமாள் நகர் ராஜன், திருவண்ணாமலை ஒ.செ. கலியபெருமாள், கிழக்கு மாவட்ட துணைச்செய லாளர் சில்பி சகானா, தெற்கு மா.செ. அக்ரி. கிருஷ்ணமூர்த்தியின் மகன் மாவட்ட கவுன்சிலர் அரவிந்த் உட்பட சிலர் சீட் கேட்டு லைனில் நிற்கின்றனர். இதில் யார் பசையுள்ள பார்ட்டி என இ.பி.எஸ். விசாரணை நடத்திவருகிறார். எம்.பி. சீட் பெறுபவர்கள் தங்களது ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச் சந்திரன் இருவரும் முயற்சியெடுத்துவருகின்றனர்.

பா.ஜ.க.விடம் தொகு திப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அ.ம.மு.க. தினகரன், திருவண்ணாமலை தொகுதியை தங்கள் கட்சிக் கான கேட்கும் பட்டியலில் வைத்துள்ளார். அவர் கேட் பது கிடைக்கும்பட்சத்தில் திருப்பத்தூர் மா.செ.ஞான சேகரனை களமிறக்க முடிவு செய்துள்ளார். பா.ஜ.க.வே போட்டியிடும் பட்சத்தில் வேட்பாளராக வேண்டும் என பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை. தொகுதியில் மைனாரிட்டியான செட்டியார் சாதியை சேர்ந்த பா.ஜ.க. மண்டல பொறுப்பாளர் குணசேகரன், வன்னியர் கோட்டாவில் முன்னாள் மாவட்டத்தலைவர் புதுப் பாளையம் நேரு, யாதவர் கோட்டாவில் ஆலயங்கள் பாதுகாப்பு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் சங்கர் போன்றவர்கள் வேட் பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

பா.ம.க. இந்தத் தொகுதியை சாய்ஸாகவே வைத்துள்ளது. கூட்டணியில் இந்தத் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் தலைமையின் விருப்பமோ, பா.ம.க. தலைமைக் கழக நிர்வாகியாக உள்ள செல்வகுமாரை நிறுத்தலாம் என ஆலோசிக்கிறது. அவர் ஏற்கெனவே கீழ்பென் னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தவர். இவர் இல்லையென்றால் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.ராஜா, பொன்னுசாமி, முன்னாள் சேர்மன் கிருபாகரன் போன்றவர்கள் கட்சியே செலவு செய்தால் நிற்கிறோம் எனச் சொல்லலாமென்ற முடிவில் இருக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட மருத்துவர் ரமேஷ்பாபு மீண்டும் கேட்கிறார்.

திருவண்ணாமலையை வெல்பவர் யார் என்பது விரைவில் தெரியும்.

Advertisment

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

tt