மிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்து வருவதால் தேர்தல் நடத்தை விதிகளை (கோட் ஆஃப் காண்டக்ட்) அமல்படுத்தியே வருகிறது தேர்தல் ஆணையம். நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் தலைமைச் செயலகத்திற்கு (கோட்டை) வருவதில்லை. முதல்வரும் அமைச்சர்களும் வராமல் இருப்பதால் வெறிச்சோடிக் கிடைக்கிறது தலைமைச் செயலகம்.

இதுகுறித்து தலைமைச்செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, "நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் முதலமைச்சரும், அமைச்சர்களும் கோட்டைக்கு வருவதற்கு தடை இல்லை. கோட்டைக்கு வந்து கோப்புகளை ஆராயலாம்; அதிகாரிகளிடம் விவாதிக்கலாம்; தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடந்து கொண்டிருந்த திட்டங்களின் நிலையை ஆய்வு செய்யலாம். முதல்வரின் முகாம் அலுவலகத்திலிருந்து கோட்டைக்கு வந்து செல்ல அரசு வாகனத்தையும் பயன்படுத்தலாம். இவைகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. அதேசமயம், கோப்புகளில் கையெழுத்துப்போடவோ, அரசாணைகளைப் பிறப்பிக்கவோ மட்டும் கூடாது.

sta

இப்படி இருந்தாலும்கூட, நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கோட்டைக்குச் செல்வதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக வேண்டாமே என நினைத்து, தலைமைச் செயலகத்துக்கு வருவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்கிறார். கோடையில் வீசும் கடும் வெப்பத்தில் மக்கள் அவஸ்தைபட்ட தால், அவர்களின் துயர் துடைப்பதற்காக அதிகாரிகளிடம் ஆலோசனை செய்வதற்கு ஒரே ஒரு முறை மட்டும் கோட்டைக்கு வந்து போனார் முதல்வர். அதன்பிறகு வரவில்லை. அமைச்சர் களையும் மாவட்டத்திலேயே இருங்கள் என அறிவுறுத்தியிருப்பதால் அவர்களும் கோட்டைப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

அதேசமயம், ஆட்சி நிர்வாகத்தில் கவனம் வைத்துள்ள முதல்வர், தனது அரசு செயலாளர் களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் தவறுவதில்லை. சட்டம் ஒழுங்கு குறித்த விவகாரங்களில் தேவை யான உத்தரவுகளை ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிறப்பித்தும் வரு கிறார் முதல்வர். அதனால் முதல் வரின் வீட்டிலுள்ள அவரது முகாம் அலுவலகம் வழக்கம் போல பிஸியாகத்தான் இருக்கிறது. ஆனால், முக்கியமான பல விசயங்களுக்காக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறுவதில் உயரதிகாரிகள் கோட்டை விட்டு விடுகிறார்களோ என தெரிகிறது. அதாவது, மே 7-ந்தேதி தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இந்த 3 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக விளம்பரங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நடத்தை விதிகள் இருப்பதால் இத்தகைய விளம்பரங்கள் செய்ய தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான முன் முயற்சியை எடுத்து, ஆணைய அதிகாரிகளிடம் பேச வேண்டிய தொனியில் பேசி, அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி அனுமதி பெற உயரதிகாரிகள் தவறிவிட்டதால், ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுகால சாதனை விளம் பரங்களை தி.மு.க. அரசால் செய்யமுடியாமல் போனது.

அது மட்டுமல்ல; சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள்; பலரும் படுகாயமடைந்தனர். அதேபோல, ஏற்காடு மலையிலிருந்து தனியார் பேருந்து உருண்டதில் 6 பேர் பலியானார்கள். இந்த 2 சம்பவங்களும் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், நிவாரண நிதி உதவி அளிக்க முதல்வர் விரும்பியிருக்கிறார். ஆனால், ஆணையத்தின் அனுமதி பெறப்படாததால் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையெல்லாம் சரியான நேரத்தில் அந்தந்த சமயத்தில் செய்திருந்தால்தான் மக்களுக்கான அரசு என்கிற இமேஜ் உருவாகும். இப்படிப்பட்ட விசயங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள்''’ என்று சுட்டிக்காட்டு கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

இதற்கிடையே, ஜூன் 4-ந் தேதி தேர்தல் முடிவு களுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் நடக்க விருக்கிறது. காரணம், பல அதிகாரிகள் மீது காண்ட்ரவர்சி களுக்கு பஞ்சமில்லை. மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் ஓய்வு பெறவிருக்கின்றனர். அவர்கள் பதவி வகித்த துறைகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை உடனடியாக செய்யலாமா? அல்லது சட்டமன்றக் கூட்டம் கூட விருப்பதால் அந்த கூட்டம் முடிந்ததும் மாறுதல் செய்யலாமா? என்கிற ஆலோசனையும் கோட் டையில் நடந்துகொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருந்தாலும், மாற்றப்பட வேண் டிய அதிகாரிகளின் லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் செயலாளர்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சண் முகம், அனுஜார்ஜ் ஆகியோர், துறையின் செயலாளராக மாறும் யோசனையில் இருக்கிறார்களாம். குறிப்பாக, தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மன் பதவி அல்லது வீட்டுவசதித்துறை செயலாளர் பதவி ஆகிய இரண்டில் ஒன்றை குறி வைத்து சண்முகம் காய்நகர்த்தி வருவதாகச் சொல்லப்படு கிறது. இப்படி 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நல்ல போஸ்டிங்கை எதிர் பார்த்து சீக்ரெட் முயற்சியில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே, தாது மணல் கொள்ளை ஊழல்களில் சிக்கியிருக்கும் கனிமவளத்துறையின் கூடுதல் இயக்குநர் முருகானந்தம், விருதுநகர் டெபுடி இயக்குநர் தங்கமுனியசாமி இருவரும் இந்த மாதம் ஓய்வுபெறவிருக்கிறார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க கோட்டையில் காய்கள் நகர்த்தப் பட்டுள்ளன.

Advertisment

ss