பெரிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்துவந்த விழுப்புரத்தில் இருந்து, அண்மையில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. இதன்பின் இந்த மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், வானூர், மைலம், விக்கிரவாண்டி ஆகிய ஏழு தொகுதிகள் இடம் பிடித்திருக்கின்றன. அரசியல் பரபரப்புக்குப் பெயர் போன இம்மாவட்டத்தின் சீட் ரேஸ் நிலவரத்தைத் தொகுதி வாரியாக நாம் பார்க்கலாம்.

ponmudi

செஞ்சி

5 முறை பேரூராட்சித் தலைவரான மஸ்தான் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாகவும் தி.மு.க.வின் வடக்கு மா.செ.வாகவும் இருக்கிறார். மீண்டும் நானே என்று இந்த முறையும் கோதாவில் இறங்கியுள்ளார். தனக்கு சீட் இல்லாவிட்டாலும் தனது மகன் முக்தியால் அலிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார் மஸ்தான். இந்த நிலையில் தி.மு.க.வின் தீர்மானக்குழு உறுப் பினரான செஞ்சி சிவா, தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் தமிழகத்திற்கு முன்மாதிரியாக செயல்பட்டுக் கட்சித் தலைவர் ஸ்டாலி னிடம் பாராட்டு பெற்றிருக்கிறார். மக்க ளிடமும் செல்வாக்கு உள்ள இவருக்கு செஞ்சி அல்லது மைலம் தொகுதியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல் கட்சியினர் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது. அடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன் மகனான இளைஞர் அணி ஆனந்த், எக்ஸ் எம்.எல்.ஏ.வும் மாநில விவசாய அணியின் இணைச் செயலாளருமான செந்தமிழ்ச்செல்வன், ஒ.செ. விஜயகுமார் ஆகியோரும் சீட்டுக்கு வரிசைக் கட்டி நிற்கிறார்கள்.

Advertisment

ஆளும் கட்சி யான அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.பி. சேவல் ஏழுமலை அல் லது அவரது மனைவியும் மேல்மலையனூர் ஒன்றிய சேர்மனாகப் பதவி வகித்தவரு மான ராஜா ராணி, இவர்களின் மகன் யுவராஜ் ஆகிய மூவரில் ஒருவருக்கு சீட் வேண்டும் என்று வரிந்துகட்டி நிற்கிறார் கள். இவர்களோடு ஒ.செ. கோவிந்தசாமி, வழக்கறிஞர் அணி கதிரவன், முன்னாள் சேர்மன் வி.ஆர்.ரங்கநாதன் ஆகியோரும் சீட்டுக்கு மோதுகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வும் இத்தொகுதி மீது கண் வைத்துள்ளது. பேராசிரியர் தீரன் அல்லது எக்ஸ் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் இருவரில் ஒருவருக்கு சீட் கேட்கிறது அந்தத் தரப்பு. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் சீட் கேட்கிறார். இவர் விஷ்ணுபிரசாத் எம்.பி.யின் ஆதரவாளர் என்பதால் நம்பிக்கை யோடு முண்டியடிக் கிறார்.

மைலம்

தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல். ஏ.வான டாக் டர் மாசிலா மணி, தொ குதி முழுக்க மக்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளைச் செய்துவரு கிறார். தலைமை தமக்கே மீண்டும் வாய்ப்பு அளிக் கும் என்பது அவரது அசைக்க முடியாத நம் பிக்கை. இருந்தும் திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மைலம் ஒ.செ.வுமான சேதுநாதன், வல்லம் ஒ.செ. அண்ணா துரை, மருத்துவர் அணி டாக்டர் சேகர், வழக்கறி ஞர் அணி அசோகன் ஆகியோரும் அறிவால யத்தை நோக்கி சீட்டுக் காகப் படையெடுத்து வருகிறார்கள். அ.தி.மு.க. விலோ, அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சொந்த ஊரான அவ்வையார் குப்பம் அமைந்துள்ள தொகுதி இது. எனவே இங்கு அவரது சகோ தரரும் ஜெ.’நியூஸ் நிர்வாக இயக்குனருமான ராதாகிருஷ்ணன் சீட் டைக் குறிவைத்திருக் கிறார். நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றா லும், இவரைச் சுற்றியே மாவட்ட அரசியலின் செயல்பாடுகள் உள்ளன. அவர் இல்லையென்றால் ஒ.செ.க்கள் டி.டி.சேகரன், புலியனூர் விஜயன், ஒலக்கூர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடசேன் ஆகியோரும் சீட்டுக் கனவில் முயற்சிசெய்து வருகிறார்கள்.

Advertisment

பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, தொகுதி மீது காதல் கொண்டிருக்கிறார். இவரது சொந்த ஊரும் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது. மேலும், ஏற்கனவே இங்கு வேட்பாளராக நின்ற பிரகாஷ், பேராசிரியர் தீரன், நெ.டி.சுப்பிர மணியன், முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகி யோரும் மைலம் தொகுதி மீது மையல் கொண்டுள்ளனர்.

ponmudi

திண்டிவனம்

இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட மகளிரணி யின் சீத்தாபதி சொக்க லிங்கம் இருக்கிறார். மீண்டும் இவருக்கு அல்லது இவரது கணவர் சொக்கலிங்கத் திற்கு அல்லது அவர் களது மகன் பொறி யாளர் செந்திலுக்கு சீட் கிடைக்கும் என்ற கணக்கில் உள்ளனர். கட்சித் தலைமை இவர் கள் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கருதும் மகளிரணி துணைச் செயலாளரும் முன் னாள் ஒன்றிய சேர்ம னுமான வசந்தா, தனக்குத்தான் சீட் என்று நம்பிக்கையோடு வலம் வருகிறார். இவர்களோடு வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பாங்கை சேகர், சண்முகம், மரக்காணம் நகர செயலாளர் ரவிக்குமார், ஒ.செ. பழனி, முன் னாள் ஒன்றிய சேர்மன் மாரியம்மாள் சகோதரர் தெய்வநாயகம் ஆகியோரும் சீட்ரேஸில் குதித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. தரப்பிலோ கடந்தமுறை போட்டியிட்டு 101 வாக்குகளில் தோல்வியைத் தழுவியவர் ராஜேந்திரன், தனக்கே கட்சித் தலைமை மறுபடியும் வாய்ப்பைத் தரும் என்று நம்புகிறார். இந்த நிலையில் மரக்காணம் நகரச் செயலாளர் கனகராஜ், ஒலக்கூர் ஒ.செ யோகநாதன், முன்னாள் எக்ஸ் எம்.எல்.ஏ. ஹரிதாஸ், எக்ஸ் ஒ.சேர்மன் விஜயா அர்ச்சுனன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுந்தர், சிறுவாடி மோகன், மானூர் மண்ணாங்கட்டி ஆகியோர் சீட்டிற்காகப் பரபரக்கிறார்கள்.

வானூர்

தி.மு.க.வில் இரண்டுமுறை நின்று வெற்றி வாய்ப்பை இழந்த மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் மைதிலி ராஜேந்திரன், மீண்டும் சீட்டை எதிர்பார்க்கிறார். இவரோடு, எக்ஸ் எம்.எல்.ஏ.வும் மாவட்ட துணைச் செயலாளருமான புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துவேல் அண்ணன் மகனும் விவசாய அணியைச் சேர்ந்தவருமான முருகேசன் ஆகியோரும் சீட்டுக்காக வரிந்துகட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க.விலோ சிட்டிங் எம்.எல்.ஏ சக்கரபாணி மீண்டும் தனக்கே சீட் என்று சொல்லி வருகிறார். காரணம்... இவர், அமைச்சர் சி.வி.சண் முகத்தின் தீவிர ஆதரவாளர். எனவே அவர் தனக்கு சீட்டைப் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை அவரிடம் வலுத்திருக்கிறது. இவரோடு, முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன், தாட்கோ கண்ணன், மகளிரணி சந்தியா ஆகியோரும் சீட்டுக்கான போட்டியில் குதித்துள்ளனர். பா.ம.க. தரப்பில், மாநில துணைத்தலைவரான சங்கர், மாநில பொதுச்செயலாளரான வடிவேல் ராவணன் ஆகியோர் காத்திருக்கின்றனர். இவர்களில் வடிவேல்ராவணன் "வானூர் இல்லையென்றால் திண்டிவனத்தைக் கொடுங்கள்' என்று தைலாபுரக் கதவைத் தட்டிவருகிறார்.

விக்கிரவாண்டி

கடந்த 2019-ல் இடைத் தேர்தலை சந்தித்த தொகுதி இது. தி.மு.க.விடம் இருந்த இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் முத்தமிழ்ச்செல்வன், கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பைத் தரும் என்று நம்புகிறார். இவருக்கு மாவட்ட மந்திரி சண்முகத்தின் ஆதரவும் இருக்கிறது. இதற்கிடையே கட்சியின் மாவட்டப் பிரதிநிதி சுப்பிரமணியன், தெற்கு ஒ.செ. பகண்டை முகுந்தன், வடக்கு ஒ.செ. எசாலம் பன்னீர்செல் வம், விக்கிரவாண்டி நகரச் செயலாளர் பூர்ணராவ் என சீட்டுக்கு மோதுபவர்களின் பட்டியல் நீள்கிறது.

தி.மு.க. தரப்பி லோ, விட்டதைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இடைத் தேர்தலில் போட்டி யிட்டு, வெற்றி வாய்ப் பைக் கோட்டைவிட்ட, மத்திய மா.செ. புகழேந்தி, மீண்டும் களமிறங்க வரிந்துகட்டுகிறார். அதே போல் மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மேற்கு ஒ.செ. வேம்பி ரவி, இளைஞரணி ரவிதுரை, காலம் சென்ற முன்னாள் அமைச்சர் விக்கிர வாண்டி கோவிந்தசாமி மகன் ஏ.ஜி. சம்பத், விவசாய அணியைச் சேர்ந்த அன்னியூர் சிவா, பாபு ஜீவானந் தம் உள்ளிடோரும் சீட்டுக்கு மோதி வருகின்றனர்.

ponmudi

விழுப்புரம்

அ.தி.மு.க.வில் சட்ட அமைச்சர் சண்முகம் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார். வாரத்தில் சில நாட்கள் விழுப்புரம் பகுதியையே சுற்றிவந்து, நலத்திட்ட உதவிகளைச் செய்வதோடு, கட்சிக்காரர்களையும் தன்வயப்படுத்தி வைத்திருக் கிறார். இவரை மீறி இங்கு சீட்டுக்கு போட்டியிட யாரும் முன்வரமாட்டார்கள். ஒருவேளை இவர் விக்கிரவாண்டி அல்லது மைலம் தொகுதிக்கு மாறினால், இவரது தீவிர விசுவாசியான நகரச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி பசுபதி, ஒ.செ.க்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், பேட்டை முருகன், இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று இவர்கள் கனவு காண்கிறார்கள். பா.ம.க. தரப்பில், மாநில துணைப் பொதுச் செயலாளரான சிவகுமார் சீட்டுக்கனவில் தைலாபுரத்தின் தயவை எதிர்பார்க்கிறார்.

தி.மு.க. தரப்பிலோ, இங்கு வெற்றிபெற்று அமைச்சராக வலம்வந்த பொன்முடி மீண்டும் இங்கே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவு கிறது. அவர் இங்கு போட்டியிடவில்லை என்றால், முன்னாள் நகரமன்ற சேர்மன் கனகராஜ், முன்னால் ந.செ.சர்க்கரை, அவைத்தலைவர் ஜெயசந்திரன், தி.மு.க.வின் புதிய வரவான எக்ஸ் எம்.பி. டாக்டர் லட்சுமணன் ஆகியோர் தங்களுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். கட்சித் தலைமையின் கருணைப் பார்வை இவர் மீது இருக்கிறது என்று கட்சிக்காரர்களே கருதுகிறார்கள்.

திருக்கோவிலூர்

2011-ல் விழுப்புரம் தொகுதியில் சண்முகத்திடம் தோல்வியைத் தழுவிய தி.மு.க பொன்முடி, 2016-ல் இங்கு நின்று எம்.எல்.ஏ. வானார். இந்த முறையும் இந்த தொகுதியில் அவர் நிற்கலாம் என்று அவர் ஆதரவாளர் கள் கருதுகின்றனர். ஒருவேளை இவர் மீண்டும் விழுப்புரத்துக்கே இடம் பெயர்ந்தால், இவரது ஆதரவாளர்களான எக்ஸ் எம்.பி. ஆதிசங்கர், மாவட்ட துணைச்செயலாளர் தேவி முருகன், ஒ.செ. தங்கம், திருவெண்ணெய்நல்லூர் ஒ.செ. விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவருக்கு சீட் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் போட்டி அதிகமாக உள்ளது. ஒ.செ.க்கள் எபி பழனி, இளங்கோவன், ஏகாம்பரம், சேகர், தேவனூர் பழனிச்சாமி என எதிர்பார்ப்பில் இருப்போ ரின் பட்டியல் நீள்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.தரப்பில், மாநில துணைச் செயலாளர் தங்க ஜோதி, மாவட்ட தலைவர் பாலசக்தி, பா.ஜ.க. தரப்பில் மாவட்டத் தலைவர் கலிவரதன் ஆகியோரும் சீட்டுக்காக முட்டிமோது கின்றனர். 2011-ல் தே.மு.தி.க. சார்பில் களமிறங்கி வெற்றிபெற்ற மா.செ. வெங்கடேசன், மீண்டும் இங்கே களமிறங்கும் ஆவலுடன் சீட்டுக்குக் காத்திருக்கிறார். திருக்கோவிலூரில் ஒரு காலைத் தூக்கிய நிலையில் உலகளந்த பெருமாள் கோவில் கொண்டுள்ளார். அவரை தினசரி சென்று தரிசனம் செய்து வருகிறார்கள் சீட்டுக்கு மோதும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள்.

தி.மு.க.வைச் சேர்ந்த சிலர், அ.தி.மு.க.வின் பவர் புள்ளிகளுடன் மறைமுக உறவு வைத்துக்கொண்டு பயனடைந்து வருவதாக, அக்கட்சியின் தலைமைக்கு "ஐபேக்'’ நிறுவனம் ரிப்போர்ட் கொடுத்திருப்பதாகவும் கட்சியினர் மத்தியிலேயே பரபர டாக் அடிபடுகிறது. இதேபோல் "இந்தமுறை ஆட்சி மாற்றம் இருக்கும்' என்று அ.தி.மு.க. பிரமுகர்களே கருதுவதால், அவர்களும் தி.மு.க. புள்ளிகளுடன் சீக்ரெட்டாக நட்பு பாராட்டி வருகிறார்களாம்.

இதையெல்லாம் தாண்டி சீட் ரேஸால் மாவட்டம் முழுக்கப் புழுதி பறந்துகொண்டு இருக்கிறது.

-எஸ்.பி.எஸ்.