மிழகத்தில் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எப்போதும் இல்லாத வகையில் மக்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் சொந்த மாவட்ட மான திருவாரூர் சென்றபோது அங்கு மக்களை சந்திக்கும் வகையில் "ரோட் ஷோ'’ நடத்தினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி விழாவிற்கு சென்ற முதல்வர் அங்கும் மக்களை சந்தித்தார். சாலையில் நடந்துவரும் முதல்வரை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள், அவர் ‘ரோட் ஷோ’ நடத்திய ஆறு கிலோமீட்டர் தூரமும்  கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

எடப்பாடி பழனிச்சாமி கோவையில் ‘ரோட் ஷோ’ நடத்துகிறார். அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்ற கோவை மாவட்டத்தில் அவர் மக்களை சந்திக்கிறார் என்றவுடன் அவருக்கு ‘இஸட் ப்ளஸ்’ செக்யூரிட்டி அமைத்து அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. அவரை வரவேற்றது. இதில் ஒரு ஆச்சரியமான விசயமாக ‘எடப்பாடியுடன் பெரிய அளவு முரண்பட்டு நின்று மகராஷ்டிரா வின் ஷிண்டே போல தமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் அ.தி.மு.க.வை உடைப்பார்’ என எதிர்பார்க்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி யின் பிரச்சாரப் பயணத்தில் துணை நிற்கிறார். "அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்' என பேட்டியளித்த அமித்ஷாவின் பேச்சுக்கு இந்த நடைபயணம் மூலம் எடப்பாடி "நான்தான் இங்கு முதல்வர் வேட்பாளர்' என தனது ஸ்டைலில் அறிவித்துள்ளார் என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கோவையில் எஸ்.பி.வேலுமணி ஆதரவோடும் அதற்கு அடுத்தபடியாக விழுப்புரத் தில் சி.வி.சண்முகம் தலைமையிலும் என கடந்தமுறை அ.தி.மு.க. ஜெயித்த கொங்கு மற்றும் வன்னியர் பகுதிகளில் எடப்பாடி யாத்திரை நடத்துகிறார். எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை திரட்டி வலுவைக் காட்டிய செங்கோட்டையனை, எடப்பாடி இந்த யாத்திரைக்கு கூப்பிடவில்லை. கூட்டணிக் கட்சிகளில் பா.ஜ.க.வும் ஐ.ஜே.கே.வும்தான் எடப் பாடியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த உதிரிக்கட்சி யான ஏ.சி.சண்முகத்தின் கட்சிகூட எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எடப்பாடி தனது யாத்திரையில் "கோவில் நிதியில் கல்லூரிகள் கட்டுகிறது தமிழக அரசு' எனப் பேச, "பழனி கோயிலின் நிதியில் கல்லூரியைக் கட்டி அதை எடப்பாடியே திறந்து வைத்தார்' என தமிழக அரசு ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டியது. 

பல கல்லூரிகள் கோயில் நிதியில் கட்டப்பட்டுள்ளன என எடப்பாடியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எடப்பாடியின் பயணத் தைப் பார்த்த ஓ.பி.எஸ்., "நானும் பிரச்சாரப் பய ணம் போகப்போகிறேன்' என அறிவித்திருக்கிறார். 

Advertisment

நடிகர் விஜய் பிரச்சாரப் பயணத்தை செப்டம்பர் மாதம் முதல் நடத்தத் திட்டமிட்டுள் ளார். "தனித்துப் போட்டி' என அறிவித்துள்ள விஜய்யை, அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவர ஜான் ஆரோக்கியசாமி தலைமையில் ஒரு டீம் வேலை செய்துகொண்டிருக்கிறது. மா.செ.க்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ள விஜய் கட்சியில், அதற்குக் கீழுள்ள நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தில் விஜய் யாத்திரை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ஆதவ் அர்ஜுனா தனியாக அலுவலகம் திறந்து, சட்டமன்றத் தொகுதி வாரியாக த.வெ.க.வின் பலம் என்ன என்பதை ஆராய்ந்து பயணத்தை திட்ட மிடுகிறார். அது எடப்பாடி ஸ்டைலில் பேருந்து பயணமா அல்லது ஸ்டாலின் ஸ்டைலில் நடை பயணமா என்பது பற்றி விவாதம் நடந்துவருகிறது. எடப்பாடி ஸ்டைலில் கொஞ்ச தூரம் பேருந்து, ஸ்டாலின் ஸ்டைலில் நடைபயணம், விஜய் ஸ்டைலில் தனி விமானப் பயணம் என மூன்றும் கலந்த கலவையாக த.வெ.க. திட்டமிட்டு வருகிறது. 

"இந்த நடைபயணங் கள் எல்லாம் தமிழக அர சியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?' என அர சியல் வல்லுனர்களிடம் கேட்டபோது... "இ.பி.எஸ். தனது கட்சியில் நிலவும் அதிருப்திகளை சமாளிக்க வும் பா.ஜ.க.விற்கு தனது வலுவைக் காட்டவும் பய ணம் மேற்கொள்கிறார்கள். இ.பி.எஸ். பயணத்தின் போது பொதுமக்களின் நாடித்துடிப்புகளை அவருக்கு புதிதாக அளிக்கப்பட்டுள்ள ‘இஸட் ப்ளஸ்’  செக்யூரிட்டி மூலம் அமித்ஷா கண்காணிக் கிறார். ஏற்கெனவே மாஜி பா.ஜ.க. மா.த.வின் நடை பயணமும் இப்படித்தான் கண்காணிக்கப்பட்டது. ஸ்டாலின் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை யெல்லாம் பயன்படுத்தி நடைபயணம் மேற் கொள்கிறார். அத்துடன் தொகுதி அடிப்படையில் கட்சிக்காரர்களை தனியாக சந்தித்துப் பேசுவதன் மூலம் தேர்தல் களத்தில் நேரடியாகவே இறங்கிவிட்டார். விஜய்யின் நடை பயணம் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றிய விவாதங்கள் நடந்துவருகின்றன. பிரச்சாரப் பயணம் மூலம் இந்துத்வா வாக்குகளை எடப்பாடி ஒருங்கிணைக் கிறார். தி.மு.க.விற்கு விழும் தலித் மற்றும் இஸ்லா மிய வாக்குகளை பிரிக்க விஜய் நடைபயணம் நடத்துகிறார். அ.தி.மு.க. நேரடிக் கூட்டு, விஜய் கட்சி மறைமுக கூட்டு என பா.ஜ.க. களம்காண... பா.ஜ.க. எதிர்ப்பு என்கிற ஒற்றை கோஷத்தில் "கோட்சே வழியில் செல்லாதீர்கள்'’ என ஸ்டாலின் பிரச்சாரப் பயணத்தை முன்னெடுக்கிறார்''’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

நடைபயணங்களால் தமிழகமே ஸ்தம்பிக்கத் தொடங்கியிருக்கிறது!

Advertisment