தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினரிடமும் உள்ளது. குறிப்பாக, மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, வேளாண் கடன் ரத்து, சிலிண்டர் மானியம் போன்றவை மீதான எதிர்பார்ப்புகள் அதிகம். இந்த நிலையில்தான், பட்ஜெட்டுக்கு முன்பாக, தமிழ்நாட்டின் நிதி நிலை பற்றிய 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
பத்தாண்டுகளுக்கு முன் (2011) தமிழ்நாட்டின் கடன் சுமை 1.14 லட்சம் கோடி. அ.தி.முக.. ஆட்சியில் 2016-ல் 2.28 லட்சம் கோடி. 2021-ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்றுள்ள கடன் அளவு 4.85 லட்சம் கோடி ரூபாய். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் உள்ள வரிச்சுமை 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய். இதற்காக அரசாங
தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினரிடமும் உள்ளது. குறிப்பாக, மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, வேளாண் கடன் ரத்து, சிலிண்டர் மானியம் போன்றவை மீதான எதிர்பார்ப்புகள் அதிகம். இந்த நிலையில்தான், பட்ஜெட்டுக்கு முன்பாக, தமிழ்நாட்டின் நிதி நிலை பற்றிய 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
பத்தாண்டுகளுக்கு முன் (2011) தமிழ்நாட்டின் கடன் சுமை 1.14 லட்சம் கோடி. அ.தி.முக.. ஆட்சியில் 2016-ல் 2.28 லட்சம் கோடி. 2021-ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்றுள்ள கடன் அளவு 4.85 லட்சம் கோடி ரூபாய். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் உள்ள வரிச்சுமை 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய். இதற்காக அரசாங்கம் கட்டுகிற ஒருநாள் வட்டி மட்டும் 87.31 கோடி. "வருவாய் பற்றாக்குறை ஒன்றரை லட்சம் கோடியாக இருக்கிறது' என நிதியமைச்சர் ஒவ்வொன்றாக அறிவிக்க, முந்தைய ஆட்சியின் நிர்வாக அலட்சியம் வெளிப்பட்டதுடன், இத்தகைய சூழலில் தி.மு.க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்தது.
"தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளும், திருச்சி தேர்தல் சிறப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தொலை நோக்குத் திட்டங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்''’என்றார் நிதியமைச்சர்.
மேலும், "கலைஞர் தலைமையி லான முந்தைய தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் -உற்பத்தி வளர்ச்சி, வரி வருவாய், நிதி நிலை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது 4-ல் 1 பங்கு அளவுக்குத்தான் அ.தி.மு.க ஆட்சியில் தமிழ் நாடு இருந்தது. முறையான நிர்வாகம் இல்லை. ஊதாரித் தனமாக 1 லட்சம் கோடியை செலவு செய்துள்ளனர். வரி வருவாயை வேண்டுமென்றே வசூலிக்காமல் இருந்துள்ளனர். 2.05 லட்சம் ஹெக்டர் நிலம் அ.தி.மு.க. ஆட்சியில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது. மின்துறை (டான்ஜெட்கோ) மீதான கடன்தான் அதிகளவில் உள்ளது. அதன் ஜிப்பை அவிழ்த்தால் இன்னும் பல விஷயங்கள் தெரியவரும். உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடத்தப்படாததால், 2ஆயிரத்து 577 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு இழந்துள்ளது. நாங்கள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்துதான் வெளியிட்டிருக் கிறோம். எதிர்க்கட்சித் தலைவ ராக உள்ள முன்னாள் முதல்வரே 1 ரூபாய் வாங்கி 50 பைசா முதலீடு செய்தோம் என்று சொல்லி நிலைமையை ஒப்புக்கொள்கிறார். அதற்கு மேல் நாங்கள் என்ன சொல் வது?''”என்று ஊடகத்தின ரிடம் கேட்டார் நிதியமைச்சர்.
இந்த வெள்ளை அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி வகித்த துறைகள் தொடர்பான நிர்வாகக் கோளாறுகளை தி.மு.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது. இன்னும் ரேஷன்கடை உள்ளிட்ட மற்ற விவரங்களும் இருப்பதாகத் தெரிவித்த நிதியமைச்சர், "ஜீரோ வரி பட்ஜெட் என்பதே பொய்யானது என்றும், அதன் மூலம் எளிய மக்களுக்கு பலன் எதுவுமில்லை, பணக்காரர் களே பயன் பெறுகிறார்கள்'' என்றும் தெரிவித்தார்.
"பணக்காரர்களிடம் சொத்து வரி கடந்த ஆட்சியில் வசூலிக்கப்படவில்லை. உயர்த்தப்படவுமில்லை. 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை. போக்குவரத்து துறையில் ஒரு பேருந்தை ஒரு கி.மீ. தூரத்துக்கு இயக்குவதற்கு 59 ரூபாய் நட்டமாகிறது' என்றும் வெள்ளை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை 92 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதகாவும், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரி வருவாய் 20 ஆயிரத்து 33 கோடி ரூபாய் நிலுவையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து எப்படி மீளப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. "கொரோனா நிவாரண நிதி போன்ற அரசின் உதவிகளில் வருமான வரி செலுத்து பவர்களும் பலன் பெறு கிறார்கள். அவை கட்டுப் படுத்தப்படவேண்டும்' என நிதியமைச்சர் தெரிவித் திருப்பது, அடுத்தடுத்த திட்டங்கள் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி யுள்ளது.
"மகளிர் உரிமைத்தொகை அரிசி அட்டைதாரர் அனைவ ருக்கும் வழங்கப்படுமா, அதில் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா?' என்ற பதற்றம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. "கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிதி சீர்கேட்டை அடுத்த 5 ஆண்டுகளில் சரிப்படுத்த முடியும்' என்கிற நிதியமைச்சர், தனது வெள்ளை அறிக்கை மூலம் சிவப்பு சிக்னலை வெளிப்படுத்தியிருக்கிறார். 13-ந் தேதி அவர் தாக்கல் செய்ய விருக்கும் முதல் பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதில் கிடைக்கவேண்டும்.
-கீரன்