"சமீபத்திய பரப்புரைக் கூட்டமொன்றில் விஜய், "ஸ்டாலின் சார் எதுக்கெல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோல்'' என்று நான் சொல்லட்டுமா?”என்று கேட்கிறார் -தன் முதுகுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவரைப் போல. உண்மையைச் சொல்வதென்றால், த.வெ.க. வேட்பாளர் தேர்வு இன்று விஜய்யின் கட்டுப்பாட்டில் இல்லை. அது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு கட்சி அரசியல் புள்ளிகளின் கணக்கில், அமைதியாகச் சிக்கியிருக்கிறது.
அப்படி என்னதான் நடக்கிறது என்றறிய களமிறங்கி னோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் வெவ்வேறு ரகம். வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, நடிகர் விஜய் மீது வைத்திருக்கும் அபிமானத்தால், தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள்.
தகுதி, மக்கள் ஆதரவு போன்ற அளவுகோல்கள் முழு வதுமாக புறக்கணிக்கப்பட்டு, கோடிகளில் பேசும் பேரங்களே த.வெ.க. அரசியலின் முகமாக இருக்கிறது. ‘வேட்பாளராக வேண்டுமென்றால் விலை கொடுக்க வேண்டும்’ என்ற அரசியல் கலாச்சாரம் த.வெ.க.விலும் வேரூன்றியுள்ளது. அட, இதுக்கு மேல இன்னும் ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு என்பதுபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் த.வெ.க. வேட்பாளர் கனவில் மிதக்கும் நபர்களை, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எப்படி கைப்பாவைகளாக இயக்கப் போகிறார்கள் என்பதைக் காட்டும் திருவிளை யாடல்கள்தான் இனி தொடங்கவிருக்கின்றன. மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் எவ்வாறு ‘விலைபோகத்’ தயாராகிறார்கள் என்பதே, இனி அரங்கேறப் போகும் அரசியல் நாடகம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், தான் போட்டியிடவுள்ள சிட்டிங் தொகுதியில் தனது வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருப்பதை உணர்ந்து, அதைச் சரிசெய்ய ஆலோசனை நடத்தினார். "அண்ணே… நம்ம பசங்கதான்…இதுக்கு சரியா வருவாங்க'…என்று ஒரு மூத்த நிர்வாகி சொல்ல, த.வெ.க. நிர்வாகி ஒருவரை அமைச்சர் தரப்பு தொடர்புகொண்டது. “"யப்பா… எப்படி பார்த்தாலும் நீங்க ஜெயிக்கப் போறதில்ல. ஆனா… ஓட்டு விழும். அது வேஸ்ட் ஆகாம இருக் கிறதுக்கு நாங்க வழி சொல்லுறோம். உங்க கட்சில என்னோட தொகுதில யாரு போட்டியிட்டாலும், எனக்கு சரியா இருந்தால் போதும். வயசுப் பசங் கள்ல ரொம்ப பேரு ஏற்கனவே எங்க எதிர்க்கட்சி யோட இளைஞரணில இருந்தவங்க. அப்புறம் என்ன? லேடீஸ் ஓட்டு எந்த அளவுக்கு வாங்க முடியுமோ வாங்குங்க. எலக்ஷன் செலவெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்'’என்று ஒரு கணக்கோடு பேச, “"சரிங்க ஐயா.. இப்ப வரைக்கும் யாரு வேட் பாளர்னு தெரியல. ஆனாலும் பெரியவங்க. உங்க பேச்சை நாங்க கேட்டுக்கிறோம்'’என்று துடிப்பான இளைஞர்கள் தலையாட்டி வைத்திருக்கிறார்கள்.
இன்னொருவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர். அவரது தொகுதியில் எடுத்த சர்வே, ஒரு குறிப்பிட்ட சாதி வாக்குகள் அவருக்கு பெரி தாக ஆதரவாக இருக்காது என்பதைச் சுட்டிக் காட்ட, மனிதர் உடனே உஷாராகிவிட்டார். தன் கட்சியில் இருந்த சேவைப் பணிகளால் அறியப் பட்ட ஒருவரைப் பிடித்து, த.வெ.க.வில் சேரச் சொல்லி, புஸ்ஸி ஆனந்த் வரைக்கும் பேச வைத்து விட்டார். அவரது டார்கெட் ஒன்றுதான்- ஆளும் கட்சி வேட்பாளருக்கோ அந்தக் கூட்டணியில் உள்ள வேறு கட்சி வேட்பாளருக்கோ சென்று சேரும் குறிப்பிட்ட சாதி வாக்குகளை, தீவிரமாக த.வெ.க. பக்கம் பிரித்துவிடுவது. இந்த ‘சேவைக்கு’ நம்பமுடியாத அளவுக்கு பெரும் தொகை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அந்த முன்னாள் அமைச்சர் கொடுத்திருக்கிறார்.
ஆளும்கட்சி முக்கிய புள்ளிகள் பல பகுதி களில் ஏன் த.வெ.க.வினரை வளைக்கிறார்கள் என் றால், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை மேடைகள் தோறும் தவறாமல் குறிப்பிட்டு, விஜய் குறிவைப்பதெல்லாம் அ.தி.மு.க. பெண் வாக்காளர் களைத்தான். அந்த வகையில் மட்டுமல்ல.. கேப்டன் இல்லாத நிலையில் ஏதோ ஒரு அதிருப்தியில் உள்ள இளைஞர் படையையும் சேர்த்துத்தான். பட்டியலின சமுதாயத்தவர்களில் கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள் அதிகமாக இருப்பதாலும், அந்தப் பின்னணியில் அவர்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்களாக இருந்தாலும்கூட, விஜய் மீது ஈர்ப்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அத்தகைய இளைஞர்கள் தப்பித்தவறி அ.தி.மு.க. ஆதரவு நிலை எடுத்துவிடக்கூடாது என்ற அடிப் படையில், அந்த இளைஞர்களின் வாக்குகளையும் த.வெ.க. கவரக்கூடும் என்பதால், தேர்தல் களத்தில் த.வெ.க. பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அ.தி.மு.க. வாக்கு வங்கியையே சேதப்படுத்தும் என்ற நம்பிக்கையில், ஆளும் கட்சியினர் த.வெ.க. தரப்பினருக்கு தூபம் போட்டு வருகிறார்கள்.
இங்கே தேர்தல் கணக்கு என்னவென்றால், விஜய் சினிமாவில் நடித்து கோடி கோடியாகச் சம்பாதித்துவிட்டார். அதன்பிறகு ரிலாக்ஸாக அரசியல் பக்கம் வந்து, எம்.ஜி.ஆர். அளவுக்கு பேரும் புகழும் அடைய வேண்டும் என்ற பேராசையில், தனது இயல்புக்கு ஒத்துப்போகாத அரசியல் துறைக் குள் வாலண்டியராக வந்து மாட்டிக்கொண்டார். அந்தக் கனவை, தன் சினிமாவை விசிலடித்துப் பார்த்த கூட்டத்தைக் கொண்டு நிறைவேற்றலாம் என்பதுதான் அவரது பிளான். அப்படியிருக்க, கீழ்மட்டத்தில் இருப்பவர்கள், ‘எதிர்காலத்துக்கு ஏதாவது சேர்த்துவைக்க வேண்டும்’ என்ற எண்ணத் தோடு, பிரதான கட்சி வேட்பாளர்கள் விரிக்கும் வலையில் சிக்கினாலும், தங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்ற பாதுகாப்பு உணர்வோடுதான், தங்க ளது தலைக்கு சத்தமே இல்லாமல் விலை பேசப் பட்டு, ஊதும் மகுடிக்கு தலையாட்டுகிறார்கள்.
ஆனால், எந்தத் திட்டமுமே இல்லாத வெள் ளந்தியான தாய்க்குலங்களும், அவர்களுடைய வளர்ப்புகளான இளைஞிகளும், தலைவர் விஜய்யை தமிழ்நாட்டைக் காக்க வந்த ரட்சகராகவும், அவர் நிறுத்தும் அரசியல் உத்தமர்கள், தியாகச் செம்மல்கள் எனச் சித்தரிக்கப்படும் வேட்பாளர்கள் எல்லாரும் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்துவிடுவார்கள் என்ற அப்பாவித்தனமான நம்பிக்கையோடும் இருக்கிறார்கள் என்பதே மேலே சுட்டிக்காட்டிய அந்த மனநிலையின் பின்னணி யாக உள்ளது.
அரசியல் விழிப்புணர்வே இல்லாத, சினிமா மாயையில் சிக்கியவர்களாக இவர்களை வளர்த்துவிட்டது - யாருடைய குற்றம்?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/vijay-whistle-2026-02-16-16-39-14.jpg)