டந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வினர், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை பணம் மற்றும் பரிசுப் பொருள்களால் குளிர்வித்த னர். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தி லுள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியால் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வாரி இறைத்தனர். மேலும், வாக்குப்பதிவுக்கு முதல் நாளன்று, இரவோடு இரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள், பெண் வாக்காளர் களைக் குறிவைத்து, பரிசுக் கூப்பன் என்ற பெயரில் விசிட்டிங் கார்டு அளவிலான ஓர் அட்டை யை விநியோகம் செய்தனர். அந்த அட்டையின் முன்பக்கத்தில் ஜெயலலிதா, இரட்டை விரலை உயர்த்தி காண்பித்தபடி நிற்கும் படமும், இரட்டை இலை சின்னமும் அச்சிடப்பட்டு இருந்தது. அட்டையின் பின்பக்கத்தில் பழைய பத்து பைசா வடிவத்தில் முத்திரை வைக்கப்பட்டு இருந்தது.

salempeople

தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த டோக்கனுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் அல்லது பட்டுச் சேலை அல்லது அத்தொகைக்கு ஈடான தங்கம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய வாக்காளர்கள், அதிரி புதிரியாக அ.தி.மு.க.வுக்கு வாக் களித்ததால், சேலம் மாவட்டத் தில் அக்கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றது. எடப்பாடி தொகுதியில் அதிக வாக்குப்பதிவுக்கும் அதுவே காரணமானது. சேலத்தில் அ.தி. மு.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்ற பிறகும் கூட, அவர்கள் வழங்கிய டோக்கனுக்கு இதுவரை மளிகை பொருள் களோ, பட்டு சேலையோ வழங்காமல் ஏமாற்றிவருவதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சித்ரா தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக வென் றுள்ளார். இந்த தொகுதியிலும் டோக்கனுக்கு பொருட்கள் வழங்கப்படாததால், சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்ட ணம் அருகே உள்ள சந்தைப்பேட் டையில், அ.தி.மு.க.வினர் வழங் கிய டோக்கன்களுடன் கடந்த மே 30-ம் தேதி திடீரென்று சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த மணியம்மாள், கலை வாணி, ஜோதி ஆகியோர் நம் மிடம் பேசியபோது, "அ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் கவுன் சிலர் செல்வராஜ் மற்றும் சில நிர்வாகிகள் வீடுவீடாக டோக் கனை கொடுத்து, அ.தி.மு.க. ஜெயித்தால், டோக்கனுக்கு 2,000 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் அல்லது பட்டுப்புடவை தருவ தாகச் சொன்னார்கள். எங்கள் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் அருந்ததியர் சமூகத்தி னர், அ.தி.மு.க.வினரின் ஆசை வார்த்தையைக் கேட்டு ஏமாந்து அக்கட்சிக்கு ஓட்டு போட்டனர். இதனால், ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சித்ரா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ரிசல்ட் வந்து ஒரு மாதமாகியும் இன்னும் தொகுதிப் பக்கமே வரவுமில்லை, டோக்கனுக்கு பொருள் வழங்கவு மில்லை. கொரோனா லாக்டௌ னால் வருமானமிழந்த நிலையில், தமிழக முதல்வர் வழங்கிய 2,000 ரூபாயை வைத்துத்தான் சமாளித் தோம். எம்.எல்.ஏ. சித்ராவும், எடப் பாடி பழனிசாமியும் தொகுதிப் பக்கம் வந்தால், வழிமறித்து ஆர்ப் பாட்டம் செய்வோம்'' என்றனர்.

Advertisment

salempople

அ.தி.மு.க.வைப் போலவே, பா.ம.க. சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அருள் என்பவருக்கு வாக்களித் தால், 3,000 ரூபாய்க்கு மளிகை பொருள்களை தருவதாக வாக் குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். இதன்மூலம் வெற்றிபெற்ற பா.ம.க. வேட்பாளரும் மக்களைக் கண்டு கொள்ளவில்லை. அயோத்தியாப் பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் கூறு கையில், "அயோத்தியாப்பட்ட ணம் ஒன்றியத்தில் 32 பஞ்சாயத் துகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் 20 பஞ்சாயத்துகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 10-ல் தி.மு.க. வென்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் இந்த ஒன்றியத்தில் தி.மு.க.வுக்கு கூடுதல் வாக்குகள் salempeopleகிடைத்தன. அந்தளவுக்கு இங்கு தி.மு.க. வலிமையாக இருந்தும், சட்டமன் றத் தேர்தலில் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வுக்கு குறை வான வாக்குகளே கிடைத்தன. வாக் காளர்களுக்கு பணமோ, பரிசுப் பொருள்களோ கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி களில் உள்ளது. அப்படி இருக்கும் போது, ஏற்காடு மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வும், கூட்டணிக் கட்சியினரும் பரிசு கூப்பன்களை கொடுத்து மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி விட்டனர். பரிசு டோக்கன்களைக் கொடுத்து பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சித்ராவிடம் கேட்ட போது, "தேர்தலில் ஜெயிக்க வச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு கிப்ட் கொடுப்போம்னு சொல்லித் தாங்க டோக்கன் கொடுத்தோம். ஆனா என்ன கிப்ட்னு இது வரைக்கும் எடப்பாடி அண்ணாரு சொல்லலீங்க. சேலம் மாவட்டத்துல 10 எம்.எல்.ஏ.க்கள ஜெயிக்க வெச்சிருக்காங்க. அதனால கண்டிப்பா கிப்ட் கொடுத்துடுவோம்ங்க. கொரோனா ஊரடங்கு முடிஞ்ச பிறகு, டோக்கன் கொடுத்த மக்களுக்கெல்லாம் கிப்ட் கொடுத்துடுவோம்ங்க'' என்றார். அதிகாரத்தில் இருந்தபோதே பல வாக்குறுதிகளை நிறை வேற்றாத அ.தி.மு.க., போலி டோக்கன்களை மட்டும் கண்டுகொள்ளுமா என்ன?

Advertisment