Advertisment

எங்க வயித்துல அடிச்சுதான் ரோடு போடணுமா? -கொந்தளிக்கும் விவசாயிகள்!

ff

ரடங்கில் தளர்வுகள் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நில ஆர்ஜிதம் செய்யும் விசாரணையைத் தொடங்கி விட்டார்கள் அதிகாரிகள்.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் பல சாலைகளை நான்குவழி சாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன், தமிழக வருவாய்த்துறை ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே கடந்த 2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ff

கொரோனா நோய்த்தொற்று அச்சத்தால் பொது போக்குவரத்து முழுவதுமாக முடங்கியிருக்கும் நிலையில், விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய மாவட்ட வருவாய் தனி அலுவலர் நில உடைமை யாளர்களான விவசாயிகளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார். ‘இது தங்களுக்கெதிராக நெடுஞ்சாலைத் துறை அரங்கேற்ற இருக்கும் சதித்திட்டமே. இதனால், தங்களுக்கு நஷ்டமே மிஞ்சும். இது எங்கள் வயிற்றில் அடிக்கும் செயல்’ என புலம்புகிறார்கள்,

ரடங்கில் தளர்வுகள் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நில ஆர்ஜிதம் செய்யும் விசாரணையைத் தொடங்கி விட்டார்கள் அதிகாரிகள்.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் பல சாலைகளை நான்குவழி சாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன், தமிழக வருவாய்த்துறை ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே கடந்த 2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ff

கொரோனா நோய்த்தொற்று அச்சத்தால் பொது போக்குவரத்து முழுவதுமாக முடங்கியிருக்கும் நிலையில், விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய மாவட்ட வருவாய் தனி அலுவலர் நில உடைமை யாளர்களான விவசாயிகளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார். ‘இது தங்களுக்கெதிராக நெடுஞ்சாலைத் துறை அரங்கேற்ற இருக்கும் சதித்திட்டமே. இதனால், தங்களுக்கு நஷ்டமே மிஞ்சும். இது எங்கள் வயிற்றில் அடிக்கும் செயல்’ என புலம்புகிறார்கள், நில உடைமையாளர்களான விவ சாயிகள்.

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச்செயலாளர் பெ.ரவீந்திரன் நம்மிடம், ""நில ஆர்ஜிதம் செய்யும்போது சந்தை விலைக்கு இழப்பீடுகளை வழங்குவதில்லை. ஊரடங்கு இல்லாத நேரத்திலேயே முறையான தகவல் சொல்லாமல் விசாரணை நடத்தி, அதில் ஆஜராகாத விவசாயிகளுக்கு சேரவேண்டிய தொகையை, கலெக்டர் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருப்பு வைப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் நில எடுப்பு அதிகாரிகள். இழப்பீடு சொற்பமாக இருப்பதாக அதிகாரிகளிடம் முறையிட்டால், "நில ஆர்ஜித சட்டப்படியே இழப்பீடு வழங்கினோம். கூடுதலாக வேண்டுமென்றால் கலெக்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று அலட்சியம் காட்டுவார்கள். மனுக் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் மனஉளைச்சலுக்கு ஆளானதுதான் மிச்சம். இதுநாள் வரை மத்தியஸ்தம் மட்டுமே தொடர்கிறது; தீர்வுக்கு வழியில்லை.

இந்நிலையில், விழுப்புரம் - நாகப்பட்டிணம் 45ஆ நான்குவழிச் சாலை அமைக்கும் பணி, மத்திய அரசின் சாகர்மாலா பாரத் யோஜனா திட்டத்தின் மூலம் 180 கிமீ தொலைவுக்கும், 135 கிமீ தொலைவுக்கு சிதம்பரம் - திருச்சி சஐ227 தேசிய நெடுஞ்சாலை பணியும் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள் ளது. இதற்காக சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 350 நில உடைமையாளர்களில், சொற்பமானவர்களே விசாரணையில் கலந்துகொண்டனர். இதுதான் குறிஞ்சிப்பாடி, புவனகிரி போன்ற மற்ற வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களிலும் நடந்தது.

ffஒருபக்கம் கொரோனா மிரட்டுகிறது. இன்னொருபுறம் பொதுப் போக்குவரத்துக்கு வழியில்லை. இப்படிப்பட்ட சூழலில் விவசாயிகளை விசாரணைக்கு அழைப்பது நியாயமற்ற நடவடிக்கை. இந்த நெருக்கடிகளால் விசாரணையில் ஆஜராகாத விவசாயிகளுக்கு குறைந்த இழப்பீட்டை ஏதாவதொரு வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு, அவர்களை அலைக்கழிக்க தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி அலுவலர் எண்ணியிருப்பதாக தெரிகிறது.

மேலும், நிலத்திற்கு மதிப்பீடு செய்வது தொடர்பாக 8 ஆயிரம் மனுக்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்றிருக்கிறது. சந்தை மதிப்பைவிட மூன்று மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க விதி இருந்தாலும், நில உரிமையாளர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கருதி கலெக்டர் விருப்பத்தின் பேரில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டில் 30 சதவீதம் உயர்த்தி வழங்கவும் விதி இருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் அதிகாரிகள் தடையாக இருக்கிறார்கள். அதேபோல், சாலை யோரங்களில் நிலமாக இருப்பினும், வீட்டுமனைக் காக கூடுதல் தொகைக்கு வாங்கியவர்களுக்கு, வீடு கட்டாத காரணத்தால் நிலமாகவே மதிப்பிட்டு குறைவான இழப்பீட்டை வழங்குகிறார்கள். நஷ்ட மென்று முறையிட்டால் நீதிமன்றத்திற்கு போகச் சொல்வார்கள். சாமான்யர்கள் எல்லோராலும் நீதிமன்றத்தை நாடுவது சாத்தியப்படாது.

எனவே, சேலம் எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்தில் ஏக்கருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தருவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்ததைப் போலவே, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு, நியாயமான இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகள் விசாரணையில் ஆஜராகி, இழப்பீட் டுத் தொகைக்கு சம்மதம் தெரிவித்த பிறகே இழப் பீட்டினை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஊர் முடங்கியிருக்கும் ஊரடங்கு நேரத்தில் நில ஆர்ஜித விசாரணையை உடனடியாக கைவிட வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பரமணியனிடம் கேட்டதற்கு, "2019 டிசம்பர் மாதத்திலேயே நில மதிப்பீடு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், சிலர் நீதி மன்றம் சென்று தடை வாங்கியதால் நடத்தப்படவில்லை. 08.01.2020வரை தடை இருந்தது. பின்னர் தடை நீங்கியதால், சாலைப்பணிகள் நடைபெற வேண்டும் என்பதற்காக தற்போது நடத்தப்படுகிறது'' என்றவர், "நிலத்திற்கான மதிப்பீட்டை பொறுத்தவரை அரசின் வழிகாட்டுதல்படி, விதிமுறைகளின் படியே நடக்கிறது'' என்றார்.

காலங்காலமாக வாழ்ந்த, வாழ்வித்த நிலத்தை இழப்பதோடு, நியாயமான இழப்பீடும் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள் விவசாயிகள். ‘மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்றால் விவசாயிகளுக்கு நாலா பக்கமும் இடி’என்ற கூற்று உண்மைதான்.

- சுந்தரபாண்டியன்

nkn260820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe