"சார்... என் பைக் அந்த ஸ்டேண்டுல இல்லையே சார்.''
"அந்த ஸ்டேண்டுலதான் வண்டியப் போட்டீங்களா?''
"யோவ்... நீ எப்ப டிரிங்க் அன்ட் ட்ரைவ்ல மாட்னே.? இப்ப வந்து உடனே வண்டி வேணும்னு கேட்கறே? உன் பைக்க உள்ளுக்குள்ள எங்காவது நிறுத்தி வச்சிருப்பாங்க... போய்ப் பாரு'' என்றார் அந்த கோவை போத்தனூர் டிராஃபிக் போலீஸ்காரர்.
"சார், சல்லடை போடாத குறையா ஸ்டேண்ட சலிச்சாச்சு... என் பைக்கை அங்கே காணோம்...''
"யோவ் என்னய்யா சொல்றே? நட பாக்கலாம்'' என அந்த போலீஸ்காரர் சுந்தராபுரத்தில் உள்ள "5 கே கார் கேர்' ஸ்டேண்டிற்குள் நுழைந்தார்.
போத்தனூர் ஸ்டேஷன் டிராபிக் போலீஸ் உயர்அதிகாரி தன் செல்போனில், "பிரபாகரன் சார், நீங்க பெரிய ஆளுதான்... ஒத்துக்கறேன். இந்த தொகுதியிலதான் நீங்க இப்ப கடைசியா தி.மு.க. வேட்பாளரா நின்னீங்க. அதுக்கு உங்களுக்கு எல்லாமுமா இருந்தது, இருக்கறது டூவீலர் ஸ்டேண்டு மனோகரன்தான். புரியுது, ஆனா இந்த 5 கேர் ஸ்டேண்டு விஷயமா நீங்க தலையிடறது அவ்வளவு நல்லா இல்லைங்க சார், சொல்லிட்டேன். மனோகரனை பார்த்து உடனடியா நாங்க சொன்ன பணத்தை கட்டச்சொல்லுங்க சார். என்னங்க சார்... 33 லட்சம் எங்கே இருக்கு? 5 லட்சம் எங்கே இருக்கு? நீங்க 5 லட்சம் கட்றதா சொல்றீங்க? வேணாம் சார், என் வேலைக்கு ஆப்பு வந்துரும்'' என லைனை கட் செய்தவர்...
"அடச்சீ திருட்டுக்கெல்லாமா ரெக்கமெண்டுக்கு வருவாங்க...?' என அலுத்துக் கொண்டார் அந்த காவல் அதிகாரி.
"என்ன பிரச்சினை?'' என போலீசாரிடம் கேட்டோம்.
"சார், போதையில் வண்டி ஓட்டிட்டு வர்றவங்கள நாங்க புடிச்சு அபராதத் தொகை கட்டச் சொல்லுவோம். அவுங்க கட்டுற வரைக்கும் பக்கத்துல இருக்கற ஸ்டேண்டுகள்ல டூவீலரை பார்க்கிங் பண்ணுவோம். வாகன உரிமையாளர்கள் அபராதம் கட்டினதுக்கப்புறம், பார்க்கிங் கட்டணத்தை கொடுக்கச் சொல்லிட்டு, வண்டியைக் கொடுத்துருவோம். ஆனா சிலபேரு அபராதத் தொகையை கட்டுறதுக்குப் பணம் இல்லாம அப்டியே கொஞ்சநாளு வண்டிய எடுக்கறதை தள்ளிப் போட்டுருவாங்க. அங்கேயே வண்டி கெடக்கும். எங்களுக்கு டைம் கெடைக்கும்போது, வண்டி நிக்கறதை பரிசோதிப்போம். அப்படி யொரு ஸ்டேண்டுதான் 5 கே கார் கேர். அதோட ஓனரு பேருதான் மனோகரன். இந்த மனோகரு தி.மு.க. மாணவரணியின் முன்னாள் துணை அமைப்பாளரு. கிணத்துக்கடவு தொகுதியின் தி.மு.க. வேட்பாளரா நின்ன குறிச்சி பிராபகரனுக்கு ரொம்ப வேண்டியவரு இந்த மனோகரு.
அவரோட டூவீலர் ஸ்டேண் டில், எங்களால் பிடிக்கப்பட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பைன் கட்டிய டூவீலர் ஓனர் ஒருவர், ஸ்டேண்டில் தன்னுடைய பைக் இல்லை என்றபோது நாங்கள் அதிர்ந்துபோய் அங்கே ஆராய்ந் தோம். அப்போதுதான், நாங்கள் நிறுத்தியிருந்த வாகனங்களில்... பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 பைக்கு கள், 2 ஸ்கூட்டர்கள், 4 மொபட்டு கள் காணாமல் போயிருந்தன. பல வாகனங்களின் முக்கிய உதிரிப்பாகங் கள் கழற்றப்பட்டிருந்தன.
ஸ்டேண்டு ஓனர் மனோகர னிடம் கேட்டபோது... "அதெப்படிங்க சார் இல்லாமப் போகும்? அப்படி என்னைய மீறி போயிருக்குன்னா எங்கியோ இடிக்குதே சார்'' என பதிலளித்தார். நாங்கள் அக்கம் பக்கத்தில் விசாரித் ததில், மனோகரனின் கண்காணிப்பை மீறி எதுவும் நடந்திருக்க முடியாது என்பது தெரிய வந்தது.
பின்னர் மனோகரனை விசாரித்தோம். "விற்கப் பட்ட வண்டிகள் எல்லா வற்றிற்கும் கணக்கிட்டு 33 லட்சம் ரூபாயை கட்ட வேண்டும். இல்லையென் றால் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைப்போம்'' என சொல்லிவிட்டு வந்தோம்.
உடனே மனோகரன், குறிச்சி பிராபகரனிடம் சொல்ல, தன் ஆளைக் காப்பாற்ற, பிரபாகரன் தலையிடுகிறார். மனோகரனோ "என்னை நம்புங்கள். நான் எந்த தப்பும் செய்யவில்லை. இருந்தாலும் பிரபாகரனே, எனக்காக 5 லட்ச ரூபாய் கட்டுகிறேன் என்கிறார். இப்போதைக்கு இவ்வளவுதான் சார் கொடுக்க முடியும். இது போதாதா? என எங்களிடம் மனோ கரன் கேட்கிறார்'' என்கிறார்கள் போலீசார் கோபமாக.
நாம், இது குறித்து மனோகரனை தொடர்புகொண்டு கேட்டோம். "சார் என்னப் பத்தி வெளியாகற புகார்கள்ல ஒரு துளிகூட உண்மையில்லை. எல்லாம் பொய். நானே தப்பு பண்ணலைன்னு சொல்றேன்... அப்புறம் எப்படி பிரபாகரன் எனக்காக பேசினாருன்னு கேட்கறீங்க? எல்லாமே பொய்ங்க'' என்கிறார் பதட்டமாய்.