Advertisment

21 கோடி எங்கே? தாம்பரம் மாநகராட்சி சர்ச்சை!

cc

டந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-முதல் 2021வரை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையான சுமார் 21கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட துறைக்கு செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜன், "கடந்த ஆட்சியில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகள் மற்றும் பீர்க்கன்கரணை

டந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-முதல் 2021வரை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையான சுமார் 21கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட துறைக்கு செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜன், "கடந்த ஆட்சியில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகள் மற்றும் பீர்க்கன்கரணை, பெருங் களத்தூர், பொழிச்சலூர் பேரூராட்சிகளில் வேலை செய்த, 2000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்களுக்குச் செலுத்தவேண்டிய தொழிலாளர் வைப்புநிதி, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை கடந்த பத்து வருடமாக செலுத்தவில்லை. அரசு நிர்ணயம் தினசரி ஊதியம் ரூ 525-ல் பிடித்தம்போக நாளொன்றுக்கு 424 ரூபாய் வழங்கவேண்டும். அதுவும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முறை யாக வழங்கவில்லை.

cc

2017 முதல் 2021வரை உள் ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள் வசம் இருந்த காலகட்டத்தில் பிடித் தம் செய்த தொகையைச் செலுத்தாத காரணத்தால் தற்போது தொழிலாளர் வைப்புநிதி ஆணையம் சார்பில் கடந்த 2019-ல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் அப்போதைய ஒப்பந்ததாரரும் அதிகாரிகளும் அதைக் கண்டுகொள்ளவில்லை,

Advertisment

பின்னர் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் சார்பில் வழக்கு தொடரப் பட்டது. அதில் முதல் வழக்கு எண்- 21/2020 ரூ.18,76,97,825 கட்டச் சொல்லியும், வழக்கு எண் 2ல் 22/2020 ரூ.2,32,10,796 கட்டச்சொல்லியும் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. தற்போது தாம்பரம் மாநகராட்சி பகுதியின்கீழ் இப்பகுதிகள் வருவதால் 2022-ல் தாம்பரம் மாநகராட்சி சார் பில் இந்த வழக்கை அப்பீல் செய்ய, நிலுவைத் தொகையில் 35% ஆன 7 கோடி ரூபாயில் முதல் தவணையாக 3 கோடி ரூபாய் செலுத்தி வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்லி மனு செய்துள்ளார்கள். முறைகேடு செய்த அதி காரிகளையும் அப்போதைய ஒப்பந்ததாரர் களையும் வழக்குப் பதிவு செய்து தண்டிக்கவேண்டும்''’என்றார் ஆதங்கமாக.

தாம்பரம் மாநகராட்சி சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்க தலைவர் ராஜன்மணி "கடந்த ஆட்சிக்காலத்துல வேலை செய்துவந்த தொழிலாளிகளின் பி.எஃப் பணத்தை ஒப்பந்ததாரர் கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கட்டிய பின்னரே அவர்கள் செய்த பணிக் கான தொகை செட்டில்மெண்ட் ஆகும். இதைக் கவனிக்கவேண்டிய துறைசார்ந்த அதிகாரிகளின் அலட்சியமே இந்தப் பிரச் சனைக்குக் காரணம். தாம்பரம் மாநக ராட்சி வங்கிக் கணக்கே முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தற்போது தாம்பரம் மாநகராட்சி சார்பில் 3 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தி வழக்கை மேல்முறையீடு செய்துள்ளனர், வரும் ஜூன் 19-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரு கிறது''”என்றார்.

nkn070623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe