சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா என திருவாரூர் கமலாலயக் குளத் தின் படிக்கட்டில் அமர்ந்து தேநீர் குடித்து மகிழ்ந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தவர், அங்கிருந்து தஞ்சாவூருக்கு காரில் பய ணித்து, மரணமடைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயத் துல்லா வீட்டிற்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பிறகு அங்கி ருந்து புறப்பட்டு சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்துக்கொண்டு சாலைமார்க்க மாக திருவாரூர் வந்தடைந்தார்.

cc

Advertisment

திருவாரூர் வரும்வழியில் கோவில்வெண்ணியில் தி.மு.க.வின ரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். அங்கிருந்து காரில் வந்துகொண்டிருந்தபோது நீடாமங்கலம் அருகே சாலை யோரம் பள்ளி மாணவ- மாணவி கள் நிற்பதைப் பார்த்த முதல்வர், உடனடியாக தனது காரை நிறுத் தச்சொல்லி அவர்களிடம் பேசி னார். அதேபோல அம்மையப் பன் அருகே வந்தபோது தனியார் பாலிடெக்னிக் மற்றும் பி.எட். கல்லூரி மாணவிகள் சாலையோ ரம் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் அங்கேயும் காரை நிறுத்தச்சொல்லி, காரிலிருந்த படியே மாணவிகளிடம், "புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை மாதம்தோறும் கிடைக் கிறதா?''” என கேட்டார். "ம்...… கிடைக்கிறது''’என்ற அந்த மாணவிகள் முதல்வரிடம் பேசிய தில் மகிழ்ச்சியில் மிதந்தனர்.

திருவாரூர் சன்னதித் தெருவி லுள்ள அவரது வீட்டிற்கு வந்தவ ருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர். அதனை ஏற்றுக்கொண்டு, தடுப்புகளுக்கு அருகே நின்றுகொண்டிருந்த மக்களை நோக்கி வந்த முதலமைச்சரைப் பார்த்தவுடன் உற்சாகமடைந்த பொதுமக்கள், தாங்கள் கையில் வைத்திருந்த கோரிக்கை மனுக்களையும், புத்தகங்களையும் கொடுத்தனர். விவசாயிகளும் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். அந்த மனுக்களை கனிவுடன் பெற்று தனது உதவியாளரிடம் கொடுத்த முதல்வரை, அங்குநின்ற மக்களில் சிலர் உற்சாக மிகுதியில் கை குலுக்குவதற்காக முண்டியடித்து முதலமைச்சரை நோக்கி கை களை நீட்டினர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றனர். “இது என் னோட ஊருய்யா, இது எம்மக் கள்” என்பதுபோல போலீசாரை ஒதுங்கச் சொல்லிவிட்டு பொதுமக்களின் அருகில் சென்று அவர்களிடம் கைகுலுக்கினார்.

சிறிது நேரம் ஓய்வெடுத் தவர், பிறகு காட்டூருக்குச் சென்றார். அங்கு மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரின் தாயாரும், ஸ்டாலினின் பாட்டியாருமான அஞ்சுகம் அம்மையாரின் நினை விடத்திற்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு, அங்கு கலைஞ ரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த அருங்காட்சியகத் திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், வரலாறு தொடர்பான அனைத்தையும் பார்வையிட் டார். அருங்காட்சியகத்தின் மேற்பகுதியினை ஆழித்தேரைப் போல் வடிவமைத்திருந்தனர்.

cc

Advertisment

வெளியேவந்து அங்கே கூடியிருந்த மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டி ருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மூன்று சிறுவர் களை அழைத்து "என்ன படிக்கிறீங்க, எந்த பள்ளியில் படிக்கிறீங்க?''’என ஆர்வமாகக் கேட்டார். திருவாரூரில் திறக்கப் பட்டுள்ள நெல் குடோனில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளைப் பார்வையிட்டு, நெல்லின் தரத்தினை ஆய்வு செய்தவர், கட்டுமானப் பணிகளை விரைந்துமுடிக்க ஆட்சியரிடம் கூறினார்.

அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் கமலாலயக் குளத்திற்கு வந்தவர் குளத்தின் அருகே தயாராக வைத்திருந்த, சிறிய படகில் ஏரி குளத்திற்கு நடுவே யுள்ள நாகநாதர் கோயிலுக்குச் சென்றார். கோயிலைச் சுற்றிப்பார்த்தவர் குளக்கரையில் அமர்ந்தபடி குளத்துத் தண்ணீ ரில் பிரதிபலிக்கும் மின்னொளி யின் அழகை ரசித்தபடி தேநீரருந்தினார்.

அந்த இருபது நிமிட உணர்வை தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி பதிவிட்டிருக் கிறார், "கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம் கடல்போல தோற்றமளிக்கும், ஆனால் அது குளம்தான். அதன் நடுவிலுள்ள கோயில் படிக்கட்டு களை அடைவதற்கான எதிர் நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் கலைஞர். இன்றைக்கு அந்த படிக்கட்டு களில் அமர்ந்து மகிழ்ந்தபோது குளத்தின் அலைகளில் என் சிறுவயது நினைவுகள். நெஞ்சத் தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்''.

முதல்வர் வருகை குறித்து திருவாரூர் நகரத்தைச் சேர்ந்த வர்த்தக சங்க பிரமுகர் ஒருவர் கூறுகையில், "திருவாரூர் தொகுதி எப்பவுமே தி.மு.க.வின் கோட்டை என்பதைத் தொடர்ந்து நாங்கள் நிரூபித்துக் காட்டிவருகிறோம். பா.ஜ.க. உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் எப்படி யாவது இந்த கோட்டையை உடைக்கவேண்டும் என பல்வேறு முயற்சிகளைச் செய்துவரு கிறது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் எந்தவித முன் னேற்றமும் இல்லாமல் முற்றிலு மாக முடங்கியது. கலைஞர் தொகுதி என்பதாலேயே முடக்கி விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னும் நகராட்சி ஒன்றரை ஆண்டுகளாக முடங்கிக்கிடக் கிறது. ரிங் ரோடு விவகாரம் கிடப்பில் கிடக்கிறது. விவசாயம் மட்டுமே இந்த மாவட்டத்தில் பிரதானம். வேறு எந்த தொழிற்சாலைகளும் கிடையாது. சமீபகாலமாக விவசாயம் பாழாகி வருகிறது. இந்த வருகையில் திருவாரூருக்கு ஏதாவது புதிய திட்டத்தை துவக்கிவைப்பார் என நினைத்தோம். கோட்டை வலுவிழக்கக்கூடாதென நினைத் தால் முதல்வரும் தி.மு.க.வின ரும் திருவாரூர்மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்'' என்கிறார்.