"12-ஆம் தேதி விசாரணைக்குப் பிறகு, இரண்டாம்கட்ட விசாரணைக்காக 19-ஆம் தேதி ஆஜாராகிய விஜய், சி.பி.ஐ.யின் முன் எவ்வித அச்சமுமின்றி "காஷுவலாக' பதில் கூறினார்'' என விஜய்யை பயமில்லாதவராகச் சித்தரித்து வலைத்தளங்களில் சுற்றவிடுகின்றது த.வெ.க.வின் ஐ.டி. விங். ஆனால், "ஜனநாயகனுக்கும் பிரச்சனை, தனக்கும் பிரச்சனை என்பதனை உணர்ந்து அச்சத்தோடுதான் சி.பி.ஐ.யிடம் பதிலளித்தார். ஏறக்குறைய பா.ஜ.க.வின் மிரட்டலுக்குப் பயந்துவிட்டார் என்றே கூறலாம். இது அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்' என கருத்து தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Advertisment

செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த 41 உயிர்கள் படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. தொடர் விசாரணை நடத்திவருகின்றது. கடந்த டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் த.வெ.க. தரப்பிலிருந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், மதியழகன், விஜய்யின் வாகன ஓட்டுநர் அஜித் குமார் உள்ளிட்டோரையும், காவல்துறை தரப்பில் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரையும் வரவழைத்து தொடர் விசாரணை செய்தது சி.பி.ஐ. விசாரணை யின் இறுதியில் தாங்கள் பெற்ற தகவல் களை வைத்து நடிகர் விஜய் டெல்லி யில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென "விட்னஸ்' சம்மனை அனுப்பியது. 12-ஆம் தேதி விசாரணைக்கு விஜய் ஆஜராகி பதிலளித்துவிட்டுச் சென்ற நிலையில், இரண்டாம்கட்ட விசாரணைக்
காக 19-ஆம் தேதி ஆஜராகக் கூறி மீண்டும் சம்மனை அனுப்பியது சி.பி.ஐ. 

Advertisment

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 'விட்னஸ்' சம்மன் கொடுத்து டெல்லி விசாரணைக்கு அழைத்தது சி.பி.ஐ. "துயரமான அந்த சம்பவம் நடைபெறும்போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுக்கு எப்படி தகவல் தெரிந்தது? யார் மூலம் அந்த தகவல் வந்தது? போலீஸார் சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல்கள் கூறினார்களா? யார் அந்த போலீஸார்? எதில் வந்தீர்கள்? ஆம்புலன்ஸ்களை அழைத்து உதவி கேட்டீர்களா? மருத்துவமனைக்குச் சென்ற நேரம் என்ன?'' என்பது உள்ளிட்ட 30 கேள்விகளை தொடர்ந்து அடுக்கிக்கொண்டே போக, சளைக்காமல் பதில்கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இரண்டாம் கட்ட விசாரணைக்காக, தனி விமானம்மூலம் முதல் நாளே டெல்லி சென்று தாஜ் ஹோட்டலில் தங்கிய விஜய், மறுநாள் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். 200-க்கும் அதிகமானோர்களிடம் பெறப்பட்ட தகவல்கள், காவல்துறையின் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு விசாரணையை காலை 10.30 மணிக்கு துவக்கியது சி.பி.ஐ. எடுத்த எடுப்பிலேயே,

Advertisment

* நாமக்கல்லிலிருந்து கரூர் நோக்கி வரும்பொழுது உங்களது பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து, பிரச்சார வாகனத்தின் இருபுறமும் இரு சக்கர வாகனத்தில் ஆட்கள் வந்தது தெரியுமா..?

* உங்களது பிரச்சார வாகனத்தில் சில டூவீலர்கள் மோதி விபத்துக்குள்ளானது தெரியுமா..?

* விபத்துக்குள்ளானவர்கள் விவரம் தெரியுமா.?

* விபத்துக்குள்ளானவர்களுக்கு உங்களது கட்சி சார்பாக ஏதேனும் முதலுதவி அளித்தீர்களா.?

* மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்களா.?

* விபத்து ஏற்பட்டதும் பின்தொடர்ந்த கூட்டத்தை கலைந்துபோகக் கூறாதது ஏன்.?

* நீங்களே அதனை விரும்பினீர்களா..?

* கரூர் கூட்டத்திற்கு 7 மணிநேரம் தாமதம் ஏன்?

 * உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப் பட்ட நேரம் என்ன? 

* கரூருக்கு வரும்பொழுது உங்களது பிரச் சார வாகனத்தின் இருபக்கமும், முன் பக்கமும் கூட்டம் இருந்ததைப் பார்க்கவில்லையா..?

* பிரச்சார வாகனத்தில்மேல் நின்று பேசும்போது கூட்ட நெரிசலை கவனிக்க வில்லையா.?

* நெரிசலை தடுக்க வாகனத்தை நிறுத்தியிருக்கலாமே..?

* கூட்ட நெரிசலின்போது வாகனத்தை முன்நோக்கி செலுத்த உத்தரவிட்டது யார்.?

* ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டும், முண்டிக்கொண்டும் இருந்த பொழுது அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன.?

* ஏதேனும் அறிவுரை கூறினீர்களா..?

* கூட்ட நெரிசலைப் பார்த்துவிட்டு தானே பேசினீர்கள்..?

* கூட்ட நெரிசலின்போது குழந்தை ஒன்று காணாமல்போனது குறித்து தெரியுமா..?

* நீங்கள் பேசும்பொழுது கூட்ட நெரிசலில் மயங்கிச் சரிந்ததை கவனிக்க வில்லையா..?

* குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும் போது மயங்கிவிழுவதைக் கவனிக்கவில்லையா.?

* கரூருக்கு வருவதற்கு வளைவான சாலைகள் அதிகமிருந்தன என்கிறீர்கள். அது உண்மையா.?

* பிரபல நடிகராக இருக்கிறீர்கள்.. இவ்வளவு கூட்டம் கூடுமென உங்களுக்குத் தெரியாதா..?

* உங்கள் கண்முன்னே யாரும் மயங்கிச் சரிந்தார்களா.?

* உங்கள் கண்முன்னே மயங்கிச் சரியும்பொழுது ஏன் பரப்புரையை தொடர்ந் தீர்கள்..?

*  மயங்கி சரிந்து விழும்போது அவர் களைக் காப்பாற்றாமல் செல்வது மனிதாபி மானச் செயலா..?

* கூட்ட நெரிசல் களேபரத்தில் அங்கி ருந்து உங்களை புறப்பட சொன்னவர் யார்..?

* காவல் அதிகாரிகள் அவ்வாறு கூறினார்களா.? பெயர்களை குறிப்பிடவும்.

* யாரிடம் யார் மூலம் தகவல் வந்தது? 

என்பன உள்ளிட்ட 105 கேள்விகளை விடாமல் கேட்டு விஜய்யைத் துளைத்தது சி.பி.ஐ. கேள்வி கேட்டபொழுது அமைதியாக உள் வாங்கி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என ஒற்றைப் பதிலை மட்டும் கூறிய விஜய், தகவல் கூறியது ஆதவ் அர்ஜுனா என்றி ருக்கின்றார். கேள்விகளால் ஒருவித இறுக்கத் துடன் அமைதிகாத்த விஜய், "சில கேள்வி களுக்கு அவகாசம் கோரியுள்ளார்' என்கின்றது சி.பி.ஐ. முன்னதாக மதிய உணவு இடைவெளி யில் ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டை ருசித்தது குறிப்பிடத்தக்கது. 

"விஜய் பதில்கள் அவரையே சிக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மை. விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனங்கள் விபத்து, கரூர் பரப்புரையின்போது மயங்கி சரிந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தது உள் ளிட்டவைகளில் அவரது பதில்கள் உண்மைக்கு மாறாக உள்ளது. இதனால் விட்னஸ் சம்மனுக்கு வரவழைக்கப்பட்ட விஜய் இனிமேல் அக்யூஸ்ட் சம்மனில்தான் ஆஜராகவேண்டியிருக்கும். அதுபோல் விஜய்யின் பதில்களால் மீண்டும் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச்செயலர் மதியழகன் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பிருக்கின்றது'' என்கிறார் விசாரணை அதிகாரி ஒருவர்.

எனினும், வரும் மாதங்களில் நடை பெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை யொட்டியே விஜய் சி.பி.ஐ.யில் சிக்குவாரா? என்பது தெரியவரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, "ஜனநாயகன் தணிக்கை விவகாரம் விஜய்யை மிகுந்த அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.  படம் ரிலீஸாகாமல் தாமதமாவதால், த.வெ.க. தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் மிகவும் அப்செட் ஆகியுள்ளனர். இதுதான் இப்போது விஜய்யின் பெரிய கவலையாக உள்ளது. அதே வேளையில் சி.பி.ஐ.யின் கிடுக்கிப்பிடி கேள்விகள் தன்னை குற்றவாளி ரேஞ்சிலேயே வைத்துள்ளது என்பதும் விஜய்க்கு நன்றாகத் தெரியும். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைப் பொறுத்த வரை தங்களுடைய கூட்டணியில் விஜய் இடம் பெறவேண்டும், அதேவேளையில் காங்கிரஸுடன் சேரக்கூடாது அல்லது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனியாகவே த.வெ.க. போட்டியிட வேண்டு மென்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு. அதனால் விஜய்யை தன்னுடைய கைப்பாவையாக்கி தனித்துப் போட்டியிட வைக்கும். அதற் காகத்தான் இந்த மிரட்டல்கள்'' என்கின்றனர்.


______________________
காவல்துறைக்கு எதிராக எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

mani

கரூர் படுகொலைகள் தொடர் பாக காவல்துறை சார்பில் அதிகாரி கள் தங்களிடமிருந்த சான்றாவணங் களை சி.பி.ஐ.யிடம் சமர்ப்பித்துவிட்டு வந்த நிலையில், "கரூர் டவுன் இன்ஸ் பெக்டர் மணிவண்ணன் அன்றைய தினத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் களுக்கு GPay செய்துள்ளார். இதற் கான டிஜிட்டல் ஆவணத்தை சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது. முன்னமே இப்படி நடக்கும் என்று இன்ஸ் பெக்டர் மணிவண்ணனுக்கு எப்படித் தெரியும்? சி.பி.ஐ.யிடம் சிக்கவுள்ளார் அவர்'' என கரூர் டவுன் இன்ஸ்பெக்டருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போராளிகள் பொங்கினர். 

இதுதொடர்பாக, "இந்த வலைத்தள போலிகள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பேசுகின்றனர். சீட்டிங் வழக்கு ஒன்றிற் காக கேரளாவரை சென்று கைதுசெய்து அழைத்துவந்தவர் இதே இன்ஸ்பெக்டர் மணிவண்ணன். அதனை மனதில் கொண்டு இப்படி வலைத்தள போலிகளை இயக்கியுள்ளார் அவர் என இதுகுறித்து சி.பி.ஐ.யின் ஏ.டி.எஸ்.பி. அந்தஸ்தி லுள்ள முகேஷ்குமார் என்ற அதிகாரியிடம் புகார் தெரிவித்திருக்கின்றார் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்'' என்கிறார்கள்.