"டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம், மனநல மருத்துவர்கள் பணி நியமனத்திற்காக 2023-ஆம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு, இறுதி முடிவுகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் யாரையும் பணி நியமனம் செய்யவில்லை' என கொந்தளிக்கிறார்கள் மருத்துவ உளவியலாளர்கள்.

இவர்களின் பணி நியமனம் தடைபட்டு நிற்பது, மருத்துவ உளவியலாளர்களுக்கு மட்டும் பிரச்சனையாக இருக்கவில்லை, மனநல சேவைகளைப் பெறவேண்டிய மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய மனநல சிகிச்சைகளை பொதுமக்கள் பெறுவதற்கு தனியார் மருத்துவர்களை நாடினால் பல ஆயிரங்களில் செலவு செய்யவேண்டியிருக்கும்.

இவர்களை உடனடியாக பணியில் நியமித்தால் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் பயன்பெறுவார்கள். தமிழக மக்கள் தொகைக்கு, குறைந்த பட்சம் 910 மருத்துவ உளவியலாளர்கள் இருக்கவேண்டும். ஆனால் தற்போதோ அரசு மருத்துவமனைகளில் 8 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். மீதமுள்ள 902 இடங்கள் காலியாகவுள்ளன.

Advertisment

aa

இந்த மருத்துவ உளவிய லாளர்கள் என்பவர்கள், ஆர்.சி.ஐ.(Rehabilitation Counsil of India) என்ற மத்திய அரசின் துறையில் அங்கீகாரம் பெற்ற மனநல மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரிகளில் எம்.பில். மருத்துவ உளவி யல் 2 ஆண்டு சிறப்பு படிப்பை முடித்து பட்டம் பெற்று அதனை ஆர்.சி.ஐ.யில் பதிவு செய்தால், அவர் மக்களுக்கு உளவியல் சார்ந்த மருத்துவ சேவைகள் வழங்க தகுதியுடையவர் ஆவார்.

இவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுநடத்தப்பட்டு தேர்வுசெய்யப்படு கின்றனர். அதன்படி இந்த மருத்துவ உளவியல் துறைக்கு முதல் தேர்வானது 1960-ஆம் ஆண்டு நடத்தப்பட்டு மொத்தம் 3 மருத்துவ உளவியலாளர் கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் தேர்வு நடை பெற்று ஆண்டுக்கு ஒரு மருத்துவ உளவியலாளர் என இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisment

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்தம் 18 நபர்கள் விண்ணப்பிக்க, 8 பேர் மட்டும் தேர்வுசெய்யப்பட்டு பணியமர்த்தப் பட்டனர். 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி. 2022-ல் அறிவிப்பினை வெளியிட்டது. பின்னர் 2023, ஏப்ரல் மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் மொத்தம் 68 பேர் எழுதியதில் 53 பேர் தேர்ச்சிபெற்றனர்.

அப்படி தேர்ச்சிபெற்ற 53 பேரும் செப்டம்பர் 2023-ல் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் 21 பேர் இறுதியாகத் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுநாள்வரை யிலும் பணி நியமனம் செய்யப்படாமலே கிடப்பில் போட்டுவிட்டனர். தேர்ச்சிபெற்றதால் வாழ்க்கை மாறப்போகிறது என நம்பியிருந்தவர் களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகி யுள்ளது.

இந்த தேர்வெழுதி வெற்றிபெற்ற உளவியல் நிபுணர்களில் பலர், தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டனர். மேலும் சிலர் உயர் கல்வியை விட்டுவிட்டு நிரந்தர பணியாணையை எதிர்நோக்கி ஒரு வருடத்துக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர். அந்த விதத்திலும் தேர்வான வர்களுக்கு இது பின்னடைவாக மாறியிருக்கிறது.

Advertisment

தற்போது, பணியில் 8 மருத்துவ உளவிய லாளர்கள் மட்டுமே இருப்பதால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பெரும் இடையூறுகளைச் சந்திக்கின்றனர். பல மாவட்டங்களில் இந்த உளவியல் சேவை கிடைக்காததன் காரணமாக, நோயாளிகள் தங்கள் மாவட்டம் தவிர, நீண்ட பயணங்கள் மேற்கொண்டு அண்டை மாவட்டங் களில் சிகிச்சை பெறவேண்டிய சூழலும் உருவாகி யுள்ளது. இந்நிலை மாற்றம் அடையவேண்டு மானால், அரசுத் துறை அதிகாரிகள், அரசு மனநல மையங்களை நேரடி ஆய்வுசெய்து, மக்களின் உண்மையான நிலையைப் புரிந்து கொண்டு, உடனடியாக தேவையான பணியிடங் களை நிரப்பவேண்டும். மேலும், தகுதிவாய்ந்த மருத்துவ மனநல ஆலோசகர்களை பணியில் அமர்த்த, சீரான இடைவெளியில் தகுதித் தேர்வுகள் நடத்தவேண்டும். கல்வியில், சுகாதாரத்தில் தமிழகம் முன்னணி வகிக்கும் நிலையை உறுதிப்படுத்த இத்தகைய நடவடிக்கை கள் அத்தியாவசியம்.

தேர்ச்சி பெற்றவர்களிடம் கேட்டபோது, "இதை நம்பி நாங்கள் எங்களின் வாழ்க்கையில் பாதியைத் தொலைத்துவிட்டோம். இந்த தேர்ச்சியின் மூலமாக மீதி வாழ்க்கையையாவது நிம்மதியாக வாழலாம் என நினைத்தால் அரசு இரண்டு ஆண்டுகளாக பணிநியமனம் செய்யாமல் எங்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவருகிறது. உடனடியாக தமிழக அரசு எங்களின் குடும்பங்களையும், எங்களை நம்பியுள்ள மக்களையும் கருத்தில்கொண்டு உடனடியாக பணி நியமனம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்''’என்றனர்.

இதுகுறித்து சுகாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "பணி நியமனம் சில சிக்கல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பணியிடங் களை உடனடியாக நிரப்புவதன் அத்தியாவசியம் குறித்து டி.எம்.இ. மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் பதில்கொடுத்துள்ளன. இன்னும் சிலர் அனுப்பவில்லை. அவர்கள் அனைவரும் அனுப்பிய பிறகே இதற்கான முழு பதிலும் கிடைக்கும்''’ என்றார்.

-அ.அருண்