துணை முதல்வராகிறார் உதயநிதி என கடந்த சில மாதங்களாக பரவி வரும் செய்திகளுக்கு ஒரு தெளிவான பதிலை தந்திருக் கிறார் அமைச்சர் உதயநிதி. அதுமட்டுமல்லாமல் இளைஞ ரணியினரின் எதிர்பார்ப்பு களுக்கு ஒரு குட்டும் உதயநிதி வைத்துள்ளார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
ஆட்சியின் தலைவர், கட்சியின் தலைவர் எனும் இரண்டு பெரிய சுமைகளைத் தாங்கி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில், ஆட்சியில் அவருக்கான சுமைகளை குறைக்கும் வகையில் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராகவோ அல்லது பொறுப்பு முதல்வராகவோ நியமிக்க வேண்டும்; அதன்மூலம் சுமைகளைப் பகிர்ந்துகொண்டு முதல்வருக்கு துணையாக உதயநிதி இருக்க வேண்டும் என்கிற குரல்கள் சமீப காலமாக தி.மு.க.விலும் முதல்வரின் குடும்பத்திலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான், தி.மு.க. இளைஞரணியின் 45ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் 20-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவிற்கு தலைமையேற்றிருந்த உதயநிதி, தி.மு.க. இளைஞரணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தள பக்கங்களையும், அதனை பயன் படுத்துவதற்குரிய நிர்வாகிகளுக்கான பயிற்சி களையும் தொடங்கிவைத்தார்.
உதயநிதிக்கு முன்பாக கூட்டத்தில் பேசிய இளைஞரணி நிர்வாகிகள் பலரும், இளைஞரணி யின் மாநில செயலாளராக பொறுப்பேற்றதற்குப் பிறகு இளைஞரணியின் வளர்ச்சிக்காக உதயநிதியின் உழைப்பு, அர்ப்பணிப்பு, அதன் மூலம் தி.மு.க. பெற்ற வெற்றிகள் என பட்டியலிட்டு புகழ்ந்தனர். இதனால், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண
துணை முதல்வராகிறார் உதயநிதி என கடந்த சில மாதங்களாக பரவி வரும் செய்திகளுக்கு ஒரு தெளிவான பதிலை தந்திருக் கிறார் அமைச்சர் உதயநிதி. அதுமட்டுமல்லாமல் இளைஞ ரணியினரின் எதிர்பார்ப்பு களுக்கு ஒரு குட்டும் உதயநிதி வைத்துள்ளார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
ஆட்சியின் தலைவர், கட்சியின் தலைவர் எனும் இரண்டு பெரிய சுமைகளைத் தாங்கி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில், ஆட்சியில் அவருக்கான சுமைகளை குறைக்கும் வகையில் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராகவோ அல்லது பொறுப்பு முதல்வராகவோ நியமிக்க வேண்டும்; அதன்மூலம் சுமைகளைப் பகிர்ந்துகொண்டு முதல்வருக்கு துணையாக உதயநிதி இருக்க வேண்டும் என்கிற குரல்கள் சமீப காலமாக தி.மு.க.விலும் முதல்வரின் குடும்பத்திலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான், தி.மு.க. இளைஞரணியின் 45ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் 20-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவிற்கு தலைமையேற்றிருந்த உதயநிதி, தி.மு.க. இளைஞரணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தள பக்கங்களையும், அதனை பயன் படுத்துவதற்குரிய நிர்வாகிகளுக்கான பயிற்சி களையும் தொடங்கிவைத்தார்.
உதயநிதிக்கு முன்பாக கூட்டத்தில் பேசிய இளைஞரணி நிர்வாகிகள் பலரும், இளைஞரணி யின் மாநில செயலாளராக பொறுப்பேற்றதற்குப் பிறகு இளைஞரணியின் வளர்ச்சிக்காக உதயநிதியின் உழைப்பு, அர்ப்பணிப்பு, அதன் மூலம் தி.மு.க. பெற்ற வெற்றிகள் என பட்டியலிட்டு புகழ்ந்தனர். இதனால், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என தங்களின் விருப்பத்தையும் வெளிப்படுத்தினர். அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங் களையும் பொறுமையாக உற்றுக் கவனித்தபடி இருந்தார் உதயநிதி.
இறுதியில் மைக் பிடித்த உதயநிதி, "இளைஞரணிக்கு நான் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் கழகம் (தி.மு.க.) வெற்றிபெற்றிருப்பதாக இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அந்த வெற்றிக்காக எனக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்தியாவிலேயே ஒரு இயக்கத்துக்கு இளைஞரணி இருக்கிறதென்றால் அது நம் தி.மு.க.வுக்குத்தான்.
கழகத்தில் பல அணிகள் இருந்தாலும் அதில் முதலணியாக இருப்பது நம் இளைஞரணிதான். அதனை பலமுறை நிரூபித்தும் காட்டியிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்று நான் மட்டுமல்ல; நம் இளைஞரணியினர் அனைவருமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அதனை சாதித்தும் காட்டியுள்ளீர்கள்.
எப்படியாவது 2, 3 சீட்டுகளைப் பிடித்துவிட வேண்டும் என ஆறேழு முறை தமிழகத்திற்கு வந்தார் மோடி. அப்போது, ஆயிரம் முறை நீங்கள் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். ஏன்னா, எங்கள் தலைவரையும் (ஸ்டாலின்), சமூக நீதியையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என நான் சொன்னேன். அதனை 40-க்கு 40 இடங்களிலும் வெற்றியைத் தந்து நிரூபித்திருக்கிறார்கள்.
தலைவர் (ஸ்டாலின்) மிகப்பெரிய பொறுப்புகளுக்குச் சென்றாலும், நம் இளைஞரணிக்கு அவர்தான் பிராண்ட் அம்பா சிடர். அதனைத்தான் அவரும் விரும்புவார். அந்த அளவுக்கு இளைஞரணிக்காக உழைத்திருக்கிறார்; பணி செய்திருக்கிறார். உங்களில் ஒருவராக இருந்தவர்கள் பலர், மா.செ.க்களாக, எம்.எல்.ஏ.க்களாக, அமைச்சர்களாக, முதலமைச்ச ராக வந்திருக்கிறார்கள் என்றால் இளைஞரணியில் அவர்கள் போட்ட உழைப்புதான் அடித்தளமாக இருந்துள்ளது.
ஏற்கனவே, இளைஞரணிக்காக சமூக வலைத்தள பக்கம் இருந்தாலும் மாவட்டம் வாரியாக இன்றைக்கு தனித்தனியாகத் தொடங்கியிருக்கிறோம். இதனை பயன்படுத்துவது குறித்து உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அரசியலில் சமூக வலைத்தள பக்கம்தான் முக்கியமானதாக இருக்கிறது. பா.ஜ.க. வெறும் பொய்களை மட்டுமே பரப்பி அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அதனை நம் சமூக ஊடக பக்கங்கள் வழியாக முறியடிக்க வேண்டும். இல்லம்தோறும் இளைஞரணி எனும் நம் நோக்கத்தை பல மாவட்டங்களில் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலமைச்சருக்கு துணையாக நான் வரவேண்டும்; இருக்க வேண்டும் என்றெல்லாம் இங்கு பேசியவர்கள் பலரும் சொல்லி யிருக்கிறீர்கள். தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறீர்கள். பத்திரிகைகளில் வருகின்ற கிசுகிசுக்களையெல்லாம் படித்துவிட்டு, இது நடக்கப்போகிறதோ என நினைத்து, இப்போதே நாமும் ஒரு துண்டு போட்டு வெச்சிருவோம் என்ற அடிப்படையில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.
ஆனால், தலைவர் சொன்னது போல, இளைஞரணிச் செயலாளர் பொறுப்புதான் என்றைக்குமே என் நெஞ்சுக்கு நெருக்கமான பொறுப்பு. ஒருமுறை துணைமுதலமைச்சர் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, முதல்வ ருக்கு எல்லா அமைச்சர்களுமே துணை அமைச்சர்கள்தான் எனச் சொன்னேன். அதனால் எந்த பொறுப்புக்கு வந்தாலும் இளைஞரணியை நான் மறந்துவிடமாட்டேன்.
2026 சட்டமன்றத் தேர்தலின்போது என்ன நடந்தாலும் சரி, எத்தனை கூட்டணிகள் வந்தாலும் சரி, மீண்டும் தமிழ்நாட்டை ஆளப்போவது நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். அவர் மீண்டும் முதல்வராக அமரப்போகிறார். இதை விட நமக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடாது''’என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார் உதயநிதி.
உதயநிதியின் இந்த பேச்சை பட்டி தொட்டி எங்கும் பரப்பி வருகிறது தி.மு.க. இளைஞரணி. அவரது பேச்சை வரி, வரியாக சீனியர் அமைச்சர்களும் மாநில நிர்வாகிகளும் கவனித்துள்ளனர்.
அவர்களிடம் நாம் விசாரித்தபோது, "துணை முதல்வராக வேண்டும் என இளைஞரணியினர் பேசியதை கண்டிக்கும் வகையில், எல்லோரும் சொல்வதினால் நாமும் பேசி துண்டுபோட்டு வைப்போம் என உதயநிதி சொல்லியிருப்பது, இளைஞரணி நிர்வாகிகளுக்கு அவர் குட்டு வைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. இளைஞரணிச் செயலாளர் என்பதுதான் என் நெஞ்சுக்கு நெருக்கமானது என்று உதயநிதி சொல்கிறார். அதேசமயம், எந்த பொறுப்புக்கு போனாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன் என அவர் சொல்லியிருப்பது விரைவில் அவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படும் என்பதையே காட்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால், துணை முதல்வர் என்கிற பொறுப்பைக் கொடுத்துதான் அவர் ஸ்டாலினின் சுமையை குறைக்க வேண்டும் என்பதில்லை; இப்போதே முதல்வர் கவனிக்கும் பல பணிகளை அவர்தான் கவனிக் கிறார்.
அதனால், துணை முதல்வர் என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயத்துக்குத்தான். வெளிநாடு செல்லும் முதல்வர் நீண்ட நாட்கள் அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டால் அவரது இலாகாக்களை அமைச்சர் உதயநிதி கூடுதலாகக் கவனிப்பார் என கவர்னருக்கு ஒரு ஃபைல் அனுப்பினாலே போதுமானது. துணைமுதல்வர் என பிரகடனப்படுத்தித்தான் அந்த அந்தஸ்தை தரவேண்டும் என்பதல்ல!
"இப்போதே உதயநிதி துணைமுதல்வர் போலத்தான்'”என்று சுட்டிக்காட்டுகிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
____________
இறுதிச் சுற்று
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடராக 22-ந் தேதி (திங்கள்) தொடங்கியிருக்கிறது. 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடக்கிறது. நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதால், நீட் தேர்வு விலக்கு விவகாரம், புதிய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுடன் புயலைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என சபாநாயகர் கோரிக்கை வைத்திருந்தாலும் பா.ஜ.க. அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும்விதமாக வரிந்துகட்டுகின்றன. மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகளின் இத்தகைய நெருக்கடிகள் ஒருபுறமெனில், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ்குமாரும் தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அழுத்தம் தர முடிவு செய்துள்ளனர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்குமா? என்கிற பதட்டம் நிலவியது.
-இளையர்