மாநகராட்சி பணி செய்யும் ஒப்பந்ததாரர்களை தன்னுடைய அறைக்கு வரவழைத்து, "எங்களுக்கு கமிஷன் தந்தால் மட்டுமே நீங்கள் பணியாற்ற முடியும்' என மேயரும், துணைமேயரும் ஒப்பந்ததாரர்களை மிரட்டியது குறித்து, கடந்த ஜனவரி 13-16 இதழில் "கமிஷன் தந்தால் பில் பாஸ்! மிரட்டிய மேயர், துணை மேயர் - கோவை களேபரம்!' என் கின்ற தலைப்பில் செய்தி வெளியிட் டிருந்தோம். ஆனால், நாங்க எத்தனுக்கு எத்தன் என்பது போல் மாநகராட்சி ஆணையர் அனுமதியில்லாமலேயே CCMC எனும் பெயரில் வாட்ஸ்- ஆப் குழு ஆரம்பித்து, அதில் மாநகராட்சி வேலைகளை பதிவிட்டு, ஏலம் கேட்க வைத்து கமிஷனை பெறும் முறையை கையாண்டு வரு கின்றனர்.
கடந்த 14-01-2024 அன்று CCMC (Coimbatore City Municipal Contractors) எனும் பெயரில் வாட்ஸ்-ஆப் குழு ஆரம்பிக்கப்பட்டு மாநகராட்சி பணியினை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் 190 நபர்களை இணைத் துள்ளனர். இதற்கு அட்மினாக 81441 44443 மற்றும் 63814 73291 ஆகிய இரு எண்கள் இயங்கியது. துவக்கத்தில் மேயர் கல்பனா வின் கணவர் ஆனந்தகுமார் அட்மினாக இருந்த நிலையில், அவரே விலகிக்கொண்ட பின், இரண்டாவது எண்ணான 63814 73291 எண் அட்மினாக இணைந்தது. குழுவிலோ, "மாநகராட்சி யில் இன்னென்ன வேலைகள் என வேலைகள் குறித்து பதி விட்ட சில நிமிடங்களிலேயே ET 85 அயிட்டம் எண் 06 மற்றும் ET 85 24 ஆகிய பணிகளை பாக்யம் எனும் ஒப்பந்ததாரர் கேட்க அது அவருக்கும், ET 85 அயிட்டம் எண் 1 மற்றும் 18 பணிகளை மணி என்டர்பிரைசஸ் எனும் ஒப்பந்ததாரர் வசமும் ஏலத்தில் கொடுத்துள்ளது அந்த அட்மின் டீம். ஒப்பந்த தாரர் ஒருவரோ, "எங்களுக்கு இரண்டு சதவிகித கமிஷன் வேண்டு மென மேயர், துணைமேயர் கேட்டிருந்தனர். அதனின் தொடர்ச்சியாக இப்பொழுது வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து E Tenderக்கு செல்லுவதற்கு முன்பே, இதில் பதிவிட்டு, இன் னாருக்கு இன்னென்ன வேலைகள் என முன்னரே குறிப்பிடு கின்றனர். ஒதுக்கிய வேலைகளின்படியே E Tender போடமுடி யும். அதை மீறி போடக்கூடாது. மீறினால் பிளாக் லிஸ்ட்டில் வைத்துவிடுவோம் என்கின்ற மிரட்டல் வேறு. இந்த வாட்ஸ்- ஆப் குழுவின் முக்கிய நோக்கமே கமிஷன் மட்டுமே. முன்னர் வேலை முடிந்து பில்லுக்கு போகும் போது கமிஷன் கொடுக்க வேண்டும். இப்பொழுதோ, முன்னரே 2 சதவிகித கமிஷன் கொடுத் தால் மட்டுமே வேலையினை அனுமதிப்பார்களாம்'' என்கிறார் அவர்.
இது குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனோ, "ஒப்பந்ததாரர்களுக்குள் வாட்ஸ்-ஆப் குழு ஆரம்பித்து பணிகளுக்கான அறிவிப்பை பகிர்ந்து கொள்ளுதல் தவறில்லை. ஆனால் இன்னாருக்கு இந்தந்த வேலைகள் என ஏலம் கேட்பதும், ஒதுக்குவதும் தவறு. சட்டவிரோதமானது. விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார். "இது அரசிற்கு அவப்பெயர் அன்றி வேறெதுவும் இல்லை' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.