பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டினால், அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். சுப்பிரமணிய சுவாமியோ, "தி.மு.க. ஆட்சியை கலைப்பேன்' என கொக்கரித்துள்ளார். ஆனால் காம வாத்தியார் ராஜகோபாலன் மீது தொடர்ச்சியான புகார்களும், வாட்ஸ்-ஆப் சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் வந்தபடி உள்ளன. இதில் ஆசிரியைகளின் வேதனையும் அடங்கும்.
அதே பள்ளியில் மியூசிக் வாத்தியாராக பணிபுரியும் வசந்த் பீட்டர், நுங்கம்பாக்கம் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் தேவகுமார் வாத்தியார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோரும் மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமையை திணித்தது புலனாகியுள்ளது. அத்தனைக்கும் வாட்ஸ்-ஆப் சாட்டிங்கின் ஸ்க்ரீன் ஷாட்கள் உள்ளன.
காம வாத்தியார் ராஜகோபால், கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி:
சாட்டிங் 1 & 2
"ஹே...!! ஐ...ஆம்--------..! நீங்கள் என்னுடைய இதே பள்ளியில் இதே வணிகவியலில் படித்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களை சுத்தி சுத்தி வருவதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்தப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருக்கின்றேன். என்னுடைய சக மாணவிகள் மட்டுமில்லாது, எங்களுக்கு பின்னால் படிக்கும் மாணவிகளையும் ராஜகோபால் தொல்லை/கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். என்னுடைய தோழியை சினிமாவிற்கு அழைத்தது, ஆன்லைன் வகுப்பறை குழுவிலேயே PORN SITE LINK அனுப்பியது என சமீபத்தில் அவரின் செயல் கைமீறிப் போனது. எங்களுடைய தாளாளருக்கு புகார் அளித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆதலால் எனது சக நண்பர்களுடன் குழுவாக இணைந்து அவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவுசெய்தோம்.
நான் உங்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால் இதுபோல் நீங்கள் படிக்கும் நாட்களில் இருந்ததா..? அல்லது இப்பொழுதுதான் நடக்கின்றதா..? ஏனென்றால் முந்தைய பேட்ச் மாணவிகளுக்கு இதுபோல் நடந்திருக்கு என்கிறார்கள். மறுபடியும் மன்னியுங்கள். உங்கள் பின்னால் சுத்தி வருவதற்கு. உங்களுக்கு இதைப்பற்றி பேச சௌகரியமாக இருந்தால் சொல்லுங்கள். இல்லையென்றாலும் நன்றி.
"ஹேய்... நான் மிகவும் வருத்தப்படுகின்றேன். இந்த செயலை கேட்பதற்கு. இது எனக்கு மின்சாரம் தாக்கியதுபோல் உள்ளது. நான் படிக்கும்போது இதுபோல் செயலை கேள்விப்படலை. இருந்தாலும் என்னுடைய சக மாணவிகளிடமும், சீனியர்களிடம் இதுபோல் நடந்துள்ளதா? என கேட்டு சொல்கின்றேன்''.
"மிகவும் நன்றி! நீங்கள் சொல்லப்போவது பெரும் உதவியாக இருக்கும். ஏனென்றால் அவன் என்னுடைய சைஸை சக மாணாக்கர்களுக்கு முன்னால் கிண்டல் செய்தான். தொடவும் முயற்சி செய்தான். நான் இந்த செயலை புகார் செய்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை''.
"யேய்... ஆமாம்! அவன் அதைத்தான் பேசுவான். மாணவிகளை கொடுமைப்படுத்துவான். ஆனால், இந்த அளவு போனதில்லை.''
"ஆமாம்... இப்பவும், அதைத்தான் செய்கின்றான். இதையெல் லாம் சொல்வதற்கு மன உளைச்சலாக இருக்கின்றது. இந்தப் பள்ளியில் படிப்பதற்கே அருவெறுப்பாக உள்ளது. இந்த விஷயத்தில் உங்களுடைய பங்களிப்பு எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.''
"ஆம்! நானும் என்னால் முடிந்தளவிற்கு செய்திகளை திரட்டி உங்களிடம் கொடுத்து உதவுகின்றேன். அந்த பள்ளிக்கூடம் மீதும், அந்த வாத்தியார் மீதும் நடவடிக்கை எடுக்க சரியான நேரம் இதுதான்.''
சாட்டிங் 3 & 4
" ஆமாம். ராஜ்கோ... அப்படித்தான் அவனை அழைப்பார்கள். அவன் பயங்கரமான ஆளு. +2ல்--------க்கு பாடம் சொல்லிக் கொடுத்தான். அவளும் தன்னுடைய நண்பர்களுடன் பாதுகாப்பான குழு அமைத்தாள். ஆனால், பள்ளி நிர்வாகம் அதனை புறக்கணித்தது. இது நடந்து சில நாட்களுக்கு பிறகு என்னை அழைத்த அந்த வாத்தியார், "உங்கள் பிள்ளைக்கு 0/20 என்று தான் இண்டர்னல் மார்க் போடுவேன்'' என்றான்.
அந்த கழுதை 11, 12-ம் வகுப்புக்குரியவன் என்பதால் எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏனென்றால் அதுக்கான நேரமும் இப்ப இல்லை. இருந்தாலும் 11, 12 படிக்க இந்த பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் "இந்தப் பள்ளியில் படிக்கவேண்டாம்' என அறிவுறுத்தி வருகின்றேன். பள்ளிக்கூடம் அத்தனை புகார்களையும் புறந்தள்ளிவிட்டது. அவன் நரகத்தில் வாழ்வதற்கு தகுதியானவன். நான் நம்புகின்றேன். இது சாத்தியப்படும். மற்றும் பள்ளியும் தண்டிக்கப்படும். இங்குள்ள அனைவரின் கையிலும் ரத்தக்கறை படிந்துள்ளது.
இந்த முழு வெளிப்பாடு நன்கு திட்டமிடப்பட்டது. ------க்கு இது அத்தனையும் முன்கூட்டியே தெரியும். அவளும் பழைய மாணாக்கர்களும் சேர்ந்து பள்ளி தலைமைக்கு கடிதம் எழுதினார்கள்.
அருமை.
அத்தனை கடிதங்களும் ராஜ்கோ-விற்கே திருப்பி அனுப்பப்பட்டதுதான் கொடுமை.
சாட்டிங் 5
"உங்களுக்கு தெரிந்து வேறு யாராவது இதுபோல் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா..? தயவு கூர்ந்து என்னிடம் பேச சொல்லுங்கள். அது பெரும் உதவியாக இருக்கும்.''
"ஆம். கொத்துக் கொத்தாக ஜூனியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவனைப் பற்றி புகாரளிக்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் தங்களின் சுயவிபர புகைப்படங்களை அனுப்பும்படி கூறியிருக்கின்றான். இரவினில் வீடியோகால் செய்யச் சொல்-யிருக்கின்றான். அருவெறுப்பாக இருக்கின்றது.
"தயைகூர்ந்து கேளுங்கள். அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் பயப்படத் தேவையில்லை என்று. நாம் அனைவரும் ஒன்று கூடினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. என்னை நம்புங்கள். மௌனம் தீர்வு தராது.''
சாட்டிங் 6
"ஹேய் ------- எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகின்றது. அவன் வகுப்பறையில் அருவெறுக்கத்தக்க ஜோக் சொன்னது.
"ஏன்..? பெண்கள் சட்டையில் முன்பக்க பாக்கெட் வைப்பதில்லை..?'
"ஏனென்றால் மலைப்பகுதி யில் சிக்னல் கிடைக்காதே' என்று.
சாட்டிங் 7
"அவன் வழக்கமாக சில மாணவிகளை டார்கெட் செய்து, எப்பொழுதும் தரம் தாழ்ந்த வக்கிர நகைச்சுவையைக் கூறி எங்களை வகுப்பறையில் நிலைகுலைய வைப்பான்.
சில நேரங்களில் நாங்கள் பள்ளி நேரத்திற்கு பிறகு படிப்பின் நிமித்தமாக இருக்கும்போது அவன் தப்பான பார்வை பார்ப் பான். எதேச்சையாக படுவதுபோல் தொடுவான். அதன் பிறகு எங்களிடம், "ஏன்.? என்னுடைய உணர்ச்சியை தூண்டுகிறீர்கள்..?'' என கேட்பான்.
அவன் மாணவிகளை நடத்தும் விதம் அதிர்ச்சி அளிக் கும். நாங்கள் பேட்ச் பேட்ச்சாக கொடுத்த புகார்கள் குறித்து பள்ளி நிர்வாகம் ஜீரோ அளவு கூட நடவடிக்கை எடுக்கலை.
சில மாணவிகள் எங்கே தமது எதிர்காலம் பாதிக்கப்படுமோ..? என வாய் மூடி மௌனித்தார்கள்.
பாலியல் வன்கொடுமை கமிட்டிக்கு தலைவராக அவனை வைத்திருப்பார்கள் போல.''
"நன்றி! ------ உங்கள் வலைத் தளத்தினை உபயோகப்படுத்திய தற்கு. நீங்கள் சரியான விஷயத்தை செய்துள்ளீர்கள்.''
மியூசிக் வாத்தியார்
வசந்த் பீட்டர் :
(தற்பொழுது அமெரிக்கன் இண்டர்னேஷனல் ஸ்கூல்)
"ஹேய் ----- நான் உங்கள் முகநூல் பார்த்தேன். இது என்னு டைய 10 வயதில் பட TP Road பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் போது நடந்தது. என்னுடைய மேற்கத்திய இசை பயிற்றுவிக்கும் மியூசிக் வாத்தியாரால் நான் பலமுறை பாலியல் தொந்தரவிற்கு ஆளானேன். ஆனால் நானாக நினைக்கும்போது இது என்னுடைய தப்பாக இருக்குமோ என நினைத்துக்கொண்டேன். விடாமல் பலமுறை என்னிடம் பாலியல் தொந்தரவு செய்தார்.
அவர் பெயர் வசந்த் பீட்டர்.
அப்பொழுது எனக்கு 10 வயதுதான்.
நான் விளையாடிவிட்டு வந்தேன்.
அவருடைய அறைக்கு என்னை அழைத்தார்.
அவர் அறையின் கதவை சாத்திவிட்டு என் உடல் முழுவதும் அத்தனை பாகங்களையும் தொட்டார்.''
தேவகுமார் வாத்தியார்.
நுங்கம்பாக்கம் பத்ம சேஷாத்ரி பள்ளி:
"தேவகுமார் வாத்தியார் பற்றிக் கூறாவிட்டால் நுங்கம் பாக்கம் அதிர்ச்சி நிறைவடையாது. அவன் வணிகவியல்துறைத் தலைவர். அவனுடைய வேலையே மாணவிகளுக்கு தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுப்பதுதான். ஒருநாள் பள்ளி வகுப்பறைக்கு வெளியே சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தோம். பள்ளிக்கு இடைவெளி மணி அடிக்கும் நேரம் அது. அப்போது அந்த பக்கம் வந்தவன் எல்லோரையும் பார்த்து, "என்ன வரிசையாக நிற்கிறீர்கள்..? சிவப்பு விளக்கு ஏரியாவா இது..? பார்த்து செலக்ட் செய்வதற்கு..?' என கூறினான்.
மாணவிகளின் வசீகரத்தைப் பார்த்துதான் மார்க்கே போடுவான். அதையும் சப்தமாக சொல்லுவான். இது அங்கே சாதாரணம். இது நிர்வாகத்திற்கும் சக வாத்தியார் களுக்கும் தெரியும். அத்தனைபேரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.''
உடற்கல்வி ஆசிரியர்
நுங்கம்பாக்கம் பத்ம சேஷாத்ரி பள்ளி:
"எஸ்... அவன் என்னைப்பற்றி தவறாக பலமுறை பேசியிருக்கின்றான். பல மாணவிகளை தொட்டிருக்கின்றான். ஆபாச ஜோக்குகளை பேசியிருக்கின்றான். போதாததற்கு மற்ற மாணவிகளை மிகவும் கொச்சையாக பேசியிருக்கின்றான். மாணவி கள் இதைப்பற்றி பேசுவதற்கு மிகவும் பயந்தார்கள். ஏனெனில் விளையாட்டிற்கான வாய்ப்பை உருவாக்கித் தருபவன். அதுபோக தொடக்கம் முதலே அவன்தான் இதற்கு பொறுப்பாளியும் கூட.
மற்றைய ஆசிரியர்கள் முன் இச்செயலை செய்தால் கூட அவர்கள் கண்ணைக் கட்டியதுபோல் இருப்பார்கள். அல்லது திரும்பிக் கொள்வார்கள் மற்றும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள்.
பத்ம சேஷாத்ரி பள்ளி எனக்கு நல்ல வாய்ப்பையும், நல்ல நண்பர்களையும் கொடுத்திருந்தாலும் இந்தப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, தரமில்லாத நிர்வாகம், உதாசீன பள்ளி போன்றவை.........
மற்ற ஆசிரியர்கள் கூட என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கின்றார்கள். என்னை சக மாணவர்களுடன் பேசியதற்கு அவமானப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த பள்ளி மன அழுத்தத்தைக் கொடுக்கும் பள்ளி. நான் நுங்கம்பாக்கம் பள்ளியில் படித்தவள்.''