ந்தியாவின் ஸ்காட் லாந்து யார்டு போலீசார் என்று புகழப்படும் தமிழகப் போலீசாருக்கு தொலைந்து போன ஒருவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்துக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை.

dஇத்தனைக்கும் அந்த நபர் தொலைந்து மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன. "போஸ்டர் ஒட்டினோம், தொலைந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித் தோம்' என்கிறார்கள் போலீசார். "இதையெல்லாம் தொலைந் தவருக்கு வேண்டியவர்களே செய்துவிடுவார்களே… போலீஸ் எதற்கு?' என்கிறார்கள் தொலைந்த முகிலனுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் பத்திரிகை யாளர் சந்திப்பு நடத்தினார் முகிலன். தூத்துக்குடி ஸ்டெர் லைட் போராட்டத்தில் அப் பாவி மக்கள் 13 பேரை போலீஸ் திட்டமிட்டே துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தது என்று அவர் சேகரித்த ஆதாரங்களை ஆவணப்படமாக வெளியிட்டு விட்டு, ""இனி என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. என்னை இந்த அரசாங்கமும், போலீசும், ஆலை அதிபர்களும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்'' என பேசினார்.

அன்று இரவு 10:45 மதுரை செல் லும் ரயிலுக்கு எக் மோர் ஸ்டேசன் சென்றவர்தான் அதன்பிறகு எந்தத் தகவலும் இல்லை. நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு செய் யப்பட்டது. விசாரணை அமைப் பான சி.பி.சி.ஐ.டி. "இதுவரை 400 பேரை விசாரித்துவிட் டோம் ஆதாரங்களைத் திரட் டிக் கொண்டிருக்கிறோம்' என நீதிமன்றத்தில் ஒவ்வொரு வாய்தாவுக்கும் சாக்குப்போக்குச் சொல்லி காலநீட்டிப்பு கேட்டு வந்தது. இறுதியாக "முகிலன் விஷயத்தில் பெண் விவகாரமும் உள்ளது' என அறிக்கை கொடுத்தது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த இசை ராஜேஸ்வரி என்ற பெண், ""ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, நெடுவாசல், காவிரி ஆறு மீட்பு என பல போராட்ட இயக்கங் களில் நான் முகிலனோடு கலந்துகொண்டேன்.

d

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முகிலன் என்னை பாலியல் பலாத்காரம் செய் தார். திருமணம் செய் வதாகக் கூறி நம்ப வைத்து என்னிடம் தொடர்ந்து உறவு வைத்துக்கொண்டார். இப் போது ஏமாற்றி விட்டார்'' இப்படி விரிவாக சி.பி.சி.ஐ.டி. யிடம் புகார் கொடுக்க, கற்பழிப்பு, கொலை மிரட்டல், ஏமாற்றுதல் என முகிலன் மீது நான்கு பிரிவின்கீழ் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

Advertisment

"என்ன தான் ஆனார் முகிலன்?' முகிலன் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளரான தோழர் கன. குறிஞ்சியிடம் கேட்டபோது, ""ஆட்கொணர்வு மனுவுக்கு நீதிமன்றத்தில் இவ்வளவு தவணை வாங்க வேண்டிய அவசியம் ஏது மில்லை. சி.பி.சி.ஐ.டி. விசா ரணை கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. காவல் துறையில் அனைத்து சாதனங் களும் இருக்கின்றன. பழகிய நண்பர்களை விசாரித்தோம் என்கிறார்கள்;

ஆனால் நாங்கள் சந்தேகம் கிளப்பிய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகளையோ, தாது மணல் கொள்ளையர்களையோ, காவிரிஆற்று மணல் திருடர் களையோ அந்த கொள்ளை யர்களுக்கு துணைநிற்கும் அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ அல்லது இந்த கும்பல்களின் கூலிப்படை களையோ ஏன் போலீஸ் விசாரிக்கவில்லை?'' என கேள்வி யெழுப்புகிறார்.

""தொடர்ந்து என்னைத் தான் போலீஸ் விசாரிக்கிறார் கள். அவரை கண்டுபிடிக்க தீவிரமான எந்த முயற்சியையும் போலீஸ் எடுக்கவில்லை.

என்னிடம் வந்து "உங்கள் கணவர் காணாமல்போய் இவ்வளவு நாட்களாகிறது. ஆனால் வேதனைப் படாமல் இயல்பாக இருக்கிறீர்களே' என்று போலீஸார் உளவியல் ரீதியாக கேள்விகள் கேட்டு டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

கூடங்குளம் போராட் டத்தின்போதும் வருடக் கணக்கில் அவர் வீட்டுக்கு வந்ததில்லை. அப்படித்தான் இப்போதும் நான் இருக் கிறேன். எண்பது நாட்கள் கடந்து விட்டன. நாட்கள் நகர நகர அவர் இருப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து வருகிறேன்'' என வேதனையுடன் பேசினார் முகிலன் மனைவி பூங்கொடி.

d

""நாங்களும் முகி லனைத் தேடுவதில் பெரு முனைப்புடன்தான் உள்ளோம். காணவில்லை என்ற அறிவிப்பு போஸ்டர், அவர் மனைவி, நண்பர்கள், தோழர்கள், அவரோடு பழகிய பெண் தோழர்கள், அவர் தங்கிய இடங்கள் என எல்லாவற்றையும் விசாரித்து விட்டோம், அனாதைப் பிணங்கள் பலவற்றையும் பார்த்து உடலின் அங்க அடையாளங்களைச் சரிபார்த்தோம்.

அப்படி எந்த உடலும் இல்லை. இப்போது ஆந்திரா, கேரளா வரை எங்கள் விசாரணை நடந்துவருகிறது. ஏதாவது ஒரு முக்கிய தடயம் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. அதி காரிகள்.

இந்த நிலையில் முகிலன் மற்றும் அவரது சக தோழர்கள் ஏற்கனவே நெடுவாசல் போராட்டத்தின்போது பங்கேற்றிருந்ததால் கலந்துகொண்டிருந்தனர்.

அதனால் ஏப்ரல் 27-ஆம் தேதி நெடுவாசல் சென்ற சி.பி. சி.ஐ.டி. போலீசாரில் ஒரு குழுவினர் முகிலன் மற்றும் அவருடன் யார் எல்லாம் நெடுவாசல் போராட் டங்களில் பங் கேற்றார்கள்? எத்தனை நாட் கள் பங்கேற் றார்கள்,

பங்கேற்ற நாட் களில் அவர்கள் எங்கே தங்கி இருந்தனர் என் றெல்லாம் விசாரித் துள்ளனர். காணாமல் போனபிறகு முகிலன் நெடுவாசல் வந்தாரா என்றும் விசாரித்துள் ளனர்.

முகிலன் ஆட் கொணர்வு மனு வாய்தா உயர்நீதிமன்றத்தில் அடுத்த ஜூன் 6-ஆம் தேதி வரவிருக்கிறது.

இதில் சி.பி.சி.ஐ.டி. வாய்தா வாங்குவது அவ்வளவு சுலபமில்லை.

-ஜீவாதங்கவேல், இரா.பகத்சிங்