வம்பர் 8, 2016. இந்திய மக்களின் நினைவில் இருண்ட நாள். அன்று நள்ளிரவுதான் பிரதமர் மோடி திடீரென பண மதிப்பிழப்பை அறிவிக்க... சாதாரண ஏழை-எளிய நடுத்தர மக்கள் பணத்தை வங்கிகளில் மாற்று வதற்காக நாள்கணக்கில், இரவுபகல் பாராமல் வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். பலர் இறந்தும் போனார்கள்

"இந்த பண மதிப்பிழப்பின் மூலம் கோடீஸ்வரர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணம் வெளியே வரும், தீவிர வாதம் முடங்கும், நாடு பொருளா தார வளர்ச்சி அடையும், இந்தியா வல்லரசாக மாறிவிடும்...' என்றெல்லாம் மோடியும் பா.ஜ.க.வினரும் நிறைய அளந் தார்கள். இது நடந்து 62 மாதங்கள் கடந்தவிட்டன. பிரதமர் மோடி கூறியபடி கருப்புப் பணம் ஒழிந்ததா? நாடு பொருளாதார வளர்ச்சி அடைந் துள்ளதா? தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதா? என்று பார்த்தால், தற்போது கள்ளப்பண பதுக்கல் அதிகரித்துள்ளதாக சாதாரண மனிதர்கள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை மத்திய அரசை குற்றம்சாட்டுகிறார்கள்.

200rupees

Advertisment

மத்திய அரசு அச்சடித்து வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் எங்கே போயின? இதுகுறித்து சமீபத்தில் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, "2018 மார்ச் மாதத்தில் 336.3 கோடி எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அது மொத்த நோட்டுக்களின் எண்ணிக்கையில் 3.27% இருந்தது. கடந்த நவம்பரில் 233 கோடி எண்ணிக்கையில்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இது புழக்கத்திலுள்ள மொத்த நோட்டுகளின் எண்ணிக்கையில் 1.75%. 2018, 19-ஆம் ஆண்டிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக் கள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை. ஏற்கனவே புழக்கத்திலிருந்த அந்த நோட்டுக்கள் குறைந்துள்ளன. அதற்கு காரணம் நோட்டுக்கள் அதிகம் சிதைந்து அழுக்காகிவிடு வது போன்ற காரணங்களால் வங்கிகளுக்கு வரும் பழைய நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு விடப்பட வில்லை''’என்றுள்ளார்.

இதுகுறித்து இயற்கை வேளாண் விவசாயியும் சமூக ஆர்வலருமான திருமானூர் காசிப் பிச்சை, “"2000 ரூபாய் என்ன ஆச்சு... எங்கே போச்சு? மக்களின் மறதியை தங்களுக்கு சாதகமாக ஆட்சியிலிருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் இப்போது பணமுதலைகள் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது.

சமீபத்தில் வருமான வரித்துறையினர், சென்ட் வியா பாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தார்கள். இதேபோல் அதிகாரிகள் வீட்டிலும் அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் வீடு களிலும் 2000 ரூபாய் நோட் டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு பண மதிப்பிழப்பின் பலன்களாகச் சொன்னவை வெறும் அறி விப்புகளாக மட்டுமே உள்ளன. மத்திய அரசுக்கு தொலை நோக்குப் பார்வை இல்லை. பண மதிப்பிழப்புக்குப் பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை நிலை இருண்ட நிலையிலேதான் உள்ளது. பணக்காரர்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது'' என்கிறார்.

பெலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் காமராஜோ, "1946-ல் இதே போன்று பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நடைமுறையிலிருந்த ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் பணத்தாள்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 1954-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை, ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி செல்லாததாக அறிவித்தது.

அவர்களும் கருப்புப் பணத்தை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகவே கூறினார்கள். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2016-ல் மீண்டும் பண மதிப்பிழப்பைக் கொண்டுவந்தது.

ஏற்கனவே இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு உதவியாக இருந்தது. பண மதிப்பிழப்புக்குப் பிறகு அரசு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் கருப்புப்பண முதலாளிகளுக்கு பதுக்குவதற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. அவர்கள் கைகளில் பெருமளவு பணம் சிக்கிக்கொண்டதால்தான் 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் கண்களுக்குத் தென்படவே இல்லை.

2000rupees

Advertisment

மத்திய நிதித்துறை இணையமைச்சர் கூறுவதெல்லாம் வெறும் சாக்குப்போக்கு. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட 100 ரூபாய், 50 ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் தற்போதுவரை மக்களின் புழக்கத்தில் உள்ளன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த நோட்டுக்கள்தான் மனிதர்களின் கைகளில் மாறி, மாறி சிதைந்து நைந்து கிழிந்துபோகும். 2016-ல் அடிக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிதைந்துபோய்விட்டதாக அமைச்சர் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் சாதாரண ஏழை-எளிய மக்களின் கைகளில் மாறி, மாறி செல்லக்கூடியதல்ல. வியாபாரிகள், தொழிலதிபர்கள் போன்ற பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருப்பது. அமைச்சர் கூறுவதை எப்படி ஏற்பது? பெரும் முதலாளிகள், பதுக்கல்காரர்கள் கைகளுக்குச் சென்ற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை''’என்கிறார்.

திரைப்படமொன்றில், "என் கிணத்தைக் காணோம்' என்று போலீசில் புகார் கொடுப்பார் நடிகர் வடிவேலு. அதேபோல் "2000 ரூபாய் நோட்டை காணோம் கண்டுபிடித்து கொடுங்கள்' என்று காவல்துறையில் யாராவது புகார் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!