எமனான எச்சில் பிரசாதம்! -குருஜியைக் கொன்ற கொரோனா!

gg

நோய்க்கு மருந்துண்டு. மூடத்தனத்துக்குத்தான் மருந்தில்லை. அதுவும் விரும்பி தன்மேல் தானே சுமத்திக்கொள்ளும் மூடத்தனத்துக்கு மரபு மருத்துவம், நவீன மருத்துவம் எதிலுமே மருந்தில்லை. மத்தியப் பிரதேசத்தின் அஸ்லம்பாபாவுக்கு அடுத்தபடியாக, தனது வழக்கமான ஆசிர்வாத ஸ்டைலால் தானும் கொரோனாவுக்குப் பலியாகி, தன் பக்தர்களையும் கொரோனாவுக்குப் பலியாக்கியிருக்கிறார் குஜராத் சாமியார் புருஷோத்தம பிரியதாஸ்.

gg

குஜராத்தின் மணி நகரில் அமைந்துள்ளது பிரியதாஸின் தலைமை ஆசிரமமும் அதனோடு இணை

நோய்க்கு மருந்துண்டு. மூடத்தனத்துக்குத்தான் மருந்தில்லை. அதுவும் விரும்பி தன்மேல் தானே சுமத்திக்கொள்ளும் மூடத்தனத்துக்கு மரபு மருத்துவம், நவீன மருத்துவம் எதிலுமே மருந்தில்லை. மத்தியப் பிரதேசத்தின் அஸ்லம்பாபாவுக்கு அடுத்தபடியாக, தனது வழக்கமான ஆசிர்வாத ஸ்டைலால் தானும் கொரோனாவுக்குப் பலியாகி, தன் பக்தர்களையும் கொரோனாவுக்குப் பலியாக்கியிருக்கிறார் குஜராத் சாமியார் புருஷோத்தம பிரியதாஸ்.

gg

குஜராத்தின் மணி நகரில் அமைந்துள்ளது பிரியதாஸின் தலைமை ஆசிரமமும் அதனோடு இணைந்த கோவிலும். அதன் பிரதான ஆன்மிக குருதான் புருஷோத்தம பிரியதாஸ்ஜி. இந்த ஆசிரமத்துக்கு குஜராத்திலே இன்னும் சில கிளைகளும் உண்டு. உலகமெங்கும் இவ்வாசிரமத் துக்கு 250 கிளைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜூன் 28-ஆம் தேதி புருஷோத்தமனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு குஜராத்திலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், தற்போது பிரபலமாகப் பேசப்படும் பிளாஸ்மா சிகிச்சையும் இருமுறைgg அளிக்கப்பட்டது. இடையில் அவரது உடல்நிலை வெகுவாக முன்னேறியதாகக் கூறப்பட்டது. எனினும், ஸ்வாமிஜிக்கு அடுத்தபடியாக அந்த இடத்துக்கு ஸ்ரீஜித்தேந்திரஜிபிரியதாஸ் சுவாமிஜி என்பவர் அடுத்த வாரிசாக நியமிக்கப்பட்டது சந்தேகத்தைக் கிளப்பியது. ஜூலை16-ஆம் தேதி ஸ்வாமிஜி கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

ஸ்வாமிஜியின் ஆசிர்வாதம் வழங்கும் முறைதான் அவரது மரணத்துக்குக் காரணமென கூறப்படுகிறது. ஒரு கோப் பையிலிருக்கும் இனிப்பு போன்றவற்றை தனது உதடுகளால் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க, இரு கைகளையும் ஏந்தியபடி வரும் பக்தர்களின் கைகளில் உதடுகளிலிருந்து இனிப்பை நழுவவிட்டு பிரசாதமாக அளிப்பது அவரது வழக்கம். கொரோனா தொற்று உலகளவில் தலைவிரித்தாடும் நிலையில், வழக்கமான நடைமுறைகளை அறிவியல்பூர்வமான கண்ணோட்டத்துடன் விலக்கியிருந்தால் இந்த இக்கட்டு நேர்ந்திருக்காது. குறைந்தபட்சம் அவரது பக்தர்களுக்கும் சீடர்களுக்குமாவது கொரோனா தொற்று வந்திருக்காது என்கிறார்கள்.

அவரது சீடர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பக்தர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புருஷோத்தம பிரியதாஸ்ஜிக்கு அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நமது ஆன்மிக குருக்களின் ஆற்றல் கொரோனாவுக்கு முன்னே கையறு நிலையில் இருப்பதை பார்த்தபிறகாவது, கட்டிப்பிடி வைத்தியம், முத்த வைத்தியம், எச்சில் பிரசாத வைத்தியம் போன்றவற்றிலிருந்து பகுத்தறிவுள்ள மனிதர்கள் விலகியிருக்கவேண்டும்.

-க.சுப்பிரமணியன்

nkn080820
இதையும் படியுங்கள்
Subscribe