"ஹலோ தலைவரே, தமிழுக்கு மகுடம் சூட்டும் வகையிலான ஒரு அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.''”
"நீ எதைச் சொல்றேன்னு புரியுதுப்பா. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உத்தரவு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது.''”
"ஆமாங்க தலைவரே, கடந்த 16ஆம் தேதி, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் களுக்கும் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி இனி அரசாணைகள், அறிவிப்புகள், ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு அனுப்பப்படும் கருத்துரு என எல்லாமே இனி தமிழில் தான் இருக்கவேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் அனைவரும் இனிமேல் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும், பொதுமக்களிடமிருந்து வரும் கடிதங்களுக்கும் இனிமேல் தமிழில்தான் பதில் தரப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு கோட்டையில் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் படைப்பாளர்களும் இதை வெகுவாக வரவேற்றுள்ளனர். இந்த அரசாணையால் இனி ’எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்கிற நிலை உருவாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தமிழன்பர்கள்.''”
"டெல்லியை அதிரவைக்கும் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறாரே ஸ்டாலின்?''”
"உண்மைதாங்க தலைவரே, அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 69-ல் முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞர், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு குறித்து ஆராய, ராஜமன்னார் குழுவை நியமித்தார். அது கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் 74-ல் மகத்தான மாநில சுயாட்சித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறை வேற்றி, அப்போதைய டெல்லி அரசைத் திகைக்க வைத்தார். அதேபோல், இப்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் அதிகார வேட்கைக்கு அடிகொடுக்க நினைத்த ஸ்டாலின், 51 ஆண்டுகளுக்குப் பிறகு அதே வழியில் மீண்டும் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்ற வசதியாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து, மோடி அரசுக்கு பலமான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.''”
"ஆமாம்பா, கலைஞரின் நெஞ்சுரம் அப்படியே வேலை செய்யுது.''”
"மாநிலங்களின் அடிப்படை உரிமைகளைக் கூட ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய நிலை இருப்பதால்தான

"மாநிலங்களின் அடிப்படை உரிமைகளைக் கூட ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய நிலை இருப்பதால்தான் இந்த முன்னெடுப்பு என்று தெரிவித்திருக்கும் ஸ்டாலின், இந்த குரியன் குழுவில் பேராசிரியர் நாகநாதனையும், அசோக்வர்தன் ஷெட்டி ஐ.ஏ.எஸ்.ஸையும் நியமித்திருக்கிறார். இவர்கள் இருவருமே கலைஞரின் இதயத்தில் இடம்பிடித்தவர்கள். இப்போது இவர்கள் இருவரும் மீண்டும் முதல்வரின் பார்வைக்கு வந்திருப்பதால், அதிகார மையங்களில் ஒன்றாகத் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸின் ஆதிக்கம், இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்கிற எதிர்பார்ப்பு, கோட்டை வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இவர்கள், முதல்வரின் சாட்டையாக மாறுவார்கள் என்றும் ஒரு தரப்பு சொல்லிவருகிறது.''”
"இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்காகவும் ஒரு மகத்தான சட்ட முன்வடிவை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறதே?''”
"தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டத்திற்கான முன்வடிவு மசோதாவையும் சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின். இது, மாற்றுத் திறனாளிகளிடம் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுவருகிறது. மேலும், இது புரட்சிகரமான சட்டம் என்றும் பலராலும் பெருமைப்படுத்தப்படுகிறது. இந்த மசோதா மூலம், உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பிரதிநிதித்துவம் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். தேர்தல் இல்லாமல், நியமன முறையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்களாம். இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன் என்று பூரிப்போடு அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.''”
"தமிழக அரசியல் கட்சிகள் சிலவற்றில் நில நடுக் கம் ஏற்பட்டிருக்குதேப்பா? முதல்ல, தைலாபுர மோதல் விவகாரம் இப்ப எந்த நிலையில் இருக்குன்னு சொல்லு?''”
"சொல்றேங்க தலைவரே, பா.ம.க.வின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய டாக்டர் ராமதாஸ், இனி கட்சியின் தலைவராகவும் நானே இருப்பேன்’ என்றும் அதிரடிப் பிரகடனத்தைச் செய்தார். அன்புமணியை அவர் நீக்கியது பா.ம.க.வில் பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தியது. உடனே அன்புமணி, கட்சியின் பொதுக்குழு தான் என்னை தலைவராக்கியது. அதனால் தலைவர் பதவியில் இப்போதும் நான்தான் தொடர்கிறேன்’ என்று தன் தந்தைக்கே பகிரங்கமாக பதிலடி கொடுத்தார். இது, ராமதாஸை ஆத்திரப்பட வைத்தது. இதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட வாரியாக தைலாபுரத்துக்கு அழைத்து, கட்சியின் நிறுவனர் டாக்டர் அய்யா எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று கையெழுத்து வாங்கும் நட வடிக்கைகளை அவர் முடுக்கினார். விரைவில் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை அகற்றியே தீருவது என்கிற முடிவிற்கு அவர் வந்து விட்டாராம். அவரது இந்த வேகம், கட்சியின் சீனியர் களிடமும் குடும்பத்தினரிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை சமாதானப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இப்போதுவரை அவர் சமாதானம் அடையவில்லை என்கிறார்கள்.''”
"இந்த நிலையில் பா.ம.க.வின் சித்திரைத் திருவிழா மாநாட்டுக்கான பூமி பூஜையை அன்புமணி நடத்தியிருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, ராமதாஸை கட்சியின் சீனியர்களும், தன் குடும்பத்தினரும் எப்படியும் சமாதானப்படுத்திவிடுவார்கள் என்று நம்புகிற அன்புமணி, கட்சியினர் மத்தியில் தனக்கே அதிக செல்வாக்கு இருக்கிறது என்று காட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதில் ஒன்றுதான் அந்த பூமி பூஜை நிகழ்ச்சி என்கிறார் கள். மே 11ஆம் தேதி, மாமல்லபுரத்தில் பா.ம.க. வின் சித்திரைத் திருவிழா மாநாட்டை நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநாட்டுக்கான பூமி பூஜை போட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியைதான் கடந்த 16ஆம் தேதி தடபுடலாக நடத்தினார் அன்புமணி. இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் அன்புமணியின் மகள் சங்கமித்ராவும் பங்கேற்றதை பா.ம.க. தரப்பு உற்று கவனிக்கிறது. ஏற்கனவே அன்புமணியின் மனைவி சௌமியா, தேர்தலில் நிறுத்தப்பட்டதையே ராமதாஸ் விரும்பாத நிலையில்... அவரது மகள் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அவர் ரசிப்பாரா? என்கிற விவாதமும் பா.ம.க.வில் எழுந்திருக்கிறது.''”
"ம.தி.மு.க.விலும் குழப்பநிலை ஏற்பட்டி ருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரான வைகோ மகன் துரை வைகோவுக்கும், அக்கட்சி யின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையில் கொஞ்சகாலமாகவே பனிப்போர் நடந்துவருகிறது. இந்த நிலையில் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்கவேண்டும் என்று கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கும் துரை.வைகோ, கட்சியில் பல மாவட்டங்களிலும் உள்ள தன் ஆதரவாளர்களைக் கொண்டு, இதற்கான நீக்கல் தீர்மானங்களை நிறைவேற்றச் செய்கிறாராம். இது ம.தி.மு.க.வில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியைவிட்டுச் சென்ற, சோதனையான காலங்களிலும் வைகோவை விட்டு நீங்காமல் இருந்துவருபவர் சத்யா. மேலும் ஒருமுறை கடல் அலையில் சிக்கிய வைகோவின் உயிரையும் காப்பாற்றி, அவரது நெஞ்சத்தில் உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். எனவே சத்யாவுக்கு எதிராக இப்படிப்பட்ட செய்கைகளை உடனே நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேபோல் சத்யாவும், நான் எப்போதும் வைகோவுக்கு நிழலாக இருப்பேன் என்று உறுதியாகக் கூறிவருகிறாராம். இந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் வைகோ.''”
"பகுஜன் சமாஜ் கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதே?''”
"தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலையில் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக ஆனந்தன் என்பவரும், மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அமர்ந்தனர். இந்த நிலையில் பொற்கொடிக்கும் ஆனந்தனுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட, பொற்கொடியைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதாக ஆனந்தன் தரப்பு அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், என்னை நீக்கும் அதிகாரம் ஆனந்தன் தரப்பிற்கு இல்லை என்று பொற்கொடி அறிவித்திருக்கிறார். தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புரசை ரெங்கநாத னின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் கௌரிசங்கர் என்பவர்தான் பொற்கொடியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்துவருகிறாராம். இந்த நிலையில், ஆம்ஸ் ட்ராங் கொலையில் அமைச்சர் சேகர்பாபுவும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆனந்தன் தரப்பு குற்றச்சாட்டை எழுப்பத் தொடங்க... "இது பொய்யான தகவல், இதில் கொஞ்சமும் உண்மை யில்லை, வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறார்கள்' என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியே அழுத்தமாக மறுத்தாராம். இதுதான் அவர்களின் மோதலுக்கான காரணம் என்கிறார்கள்.'' ”
"நாம் தமிழர் கட்சிக்குள்ளும் பரபரப்பு தெரியுதே?''”
"ஆமாங்க தலைவரே, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் யு-டியூபருமான சாட்டை துரைமுருகன் மீது அண்மைக்காலமாக கடும் அதிருப்தியில் இருக்கிறார் சீமான். இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான வைகுண்ட ராஜன் பற்றி, அவர் வெளியிட்டிருக்கும் வீடியோக் கள், சீமானைக் கொதிநிலைக்குக் கொண்டுபோக, இதைத் தொடர்ந்துதான் சாட்டையின் நடவடிக் கைகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்று அவர் அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். அந்த வீடியோக்களின் பின்னணியில், வைகுண்டராஜனிடம் பேரம் நடத்தப்பட்டதாக அக்கட்சியினர் மத்தியிலேயே பேச்சு அடிபடுகிறது. சாட்டை தரப்போ இதை மறுத்துவரும் நிலையில்... அவர் பா.ஜ.க.வுக்கு போகப்போவதாக மற்றொரு செய்தியும் ஜோடி போட்டுக்கொண்டு உலவுகிறது.''”
"சரிப்பா, தங்கள் கூட்டணிக்கு வரும்படி நாம் தமிழர் சீமானுக்கு, பா.ஜ.க. நயினார் அழைப்பு விடுத்திருக் கிறாரே?''”
"தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க. கூட் டணிக்கு நீங்கள் வர வேண்டும் என்று, சீமானுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பா.ஜ.க.வின் புதிய தலைவரான நயினார் நாகேந்திரன். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்ததில் லையா? அதனால், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்கிற கொள்கைக்காக எங்களுடன் சீமான் கைகோக்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக் கிறார். ஏற்கனவே, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று சீமானிடம் எடப்பாடியும் பேசியிருக்கும் நிலையில், பா.ஜ.க. தரப்பில் இருந்து சீமானுக்கு அதிக அழுத்தம் தரப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், பகிரங்கமாக பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவை இழக்கவேண்டி வருமோ என்று சீமான் தயக்கம் காட்டுகிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஆர்.எஸ்.எஸ்.ஸின் பரிந்துரையில் தமிழக பா.ஜ.க.வில் அமைப்புச் செயலாளராக இருப்பவர் கேசவவிநாயகம். இவர் ஏற்கனவே இருந்த மாநிலத் தலைவரோடு சேர்ந்துகொண்டு, ஏகத்துக்கும் ஆட்டம் போட்டார் என்று கமலாலயத் தரப்பிலேயே குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த மாநில நிர்வாகி பதவியை இழந்தபின், தனிக்காட்டு ராஜாவாக தன் ராஜாங்கத்தை கேசவ் நடத்த ஆரம்பித்திருக்கிறாராம். முதற்கட்டமாக தனக்கு வேண்டப்பட்ட பெண்கள் சிலரை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக்கி மகிழ்ந்திருக்கிறாராம். இந்த நியமனங்களில் சர்ச்சையில் சிக்கிய பெண்களும் இருப்பதாக பா.ஜ.க. தரப்பிலேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.''’