Advertisment

மணிப்பூரில் நடப்பது கலவரமல்ல… இன அழிப்பு! -கிளம்பும் புகார்க் குரல்கள்!

mm

ணிப்பூர் கலவரம் முன்கூட்டியே திட்டமிடப் பட்டதா என சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டு, வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 101.75 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபக்கமோ, மணிப்பூர் கலவரம் அம்மாநில இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிடப்பட்டு அரசு ஒத்துழைப்புடன் அரங் கேற்றப்பட்ட இன அழிப்பு என்ற புகார்கள் எழுந்துள்ளன.

Advertisment

ஓப்பன் ஸ்டோர்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுரெட்டி, “"சமீபகாலமாக மெய்ட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்து தேசியவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடிப்படைவாதத்தை நோக்கித் தூண்டி வருகிறார்கள். அதன் பின்விளைவுதான் இது'' என்கிறார்.

manipur

அடையாள அரசியலே மணிப்பூரின் சூழலை விஷமாக்கியது எனக் கூறும் மனித உரிமை வழக்கறிஞரான நந்திதா ஹக்சர், “மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ., பழங்குடியின மக்களுக்கு எதிராக மெய்தி இனத்தவரை இந்துக்கள் என்று கூறி வகுப்புவாத அரச

ணிப்பூர் கலவரம் முன்கூட்டியே திட்டமிடப் பட்டதா என சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டு, வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 101.75 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபக்கமோ, மணிப்பூர் கலவரம் அம்மாநில இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிடப்பட்டு அரசு ஒத்துழைப்புடன் அரங் கேற்றப்பட்ட இன அழிப்பு என்ற புகார்கள் எழுந்துள்ளன.

Advertisment

ஓப்பன் ஸ்டோர்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுரெட்டி, “"சமீபகாலமாக மெய்ட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்து தேசியவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடிப்படைவாதத்தை நோக்கித் தூண்டி வருகிறார்கள். அதன் பின்விளைவுதான் இது'' என்கிறார்.

manipur

அடையாள அரசியலே மணிப்பூரின் சூழலை விஷமாக்கியது எனக் கூறும் மனித உரிமை வழக்கறிஞரான நந்திதா ஹக்சர், “மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ., பழங்குடியின மக்களுக்கு எதிராக மெய்தி இனத்தவரை இந்துக்கள் என்று கூறி வகுப்புவாத அரசியல் விளையாட்டை மணிப்பூரிலும் தொடங்கியிருப் பதாக” விமர்சித்துள்ளார்.

Advertisment

மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கிய மணிப் பூர் கலவரம் குறித்து புதிய செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கலவரத்தில் குக்கி சமூக கிறித்தவர்கள் தாக்கப்பட்டு, அவர்களது தேவாலயங் களும் இடிக்கப்பட்டன. தற்போது மெய்த்தி இன கிறிஸ்தவர்களின் தேவா லயங்களும் இடிக்கப் பட்டதாக புதிய செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. தேவாலய அழிப்பில், ஒடிசாவின் காந்தமாலில் பின்பற்றப்பட்ட யுக்தியே பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்த்தி மக்கள் 53 சத விகிதமாவர். இவர்களில் கிறிஸ்தவர்கள் மட்டும் 2 லட்சம் பேர் உள்ளனர். மணிப்பூரில் பா.ஜ.க. உதவியுடன் இந்துத்துவ அமைப்புகள் பிரச்சார நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்திவந்தன.

இந்நிலையில் மே 3-அன்று கலவரம் வெடித்த 36 மணி நேரத்துக்குள் 247 தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்டுள்ள தேவாலயங்களின் நிர்வாகி களிடமிருந்து, இனி திரும்பிவரப்போவதில்லை என்று கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு இந்துத்துவக் கும்பல்கள் அவர்களை விரட்டி யடித்துள்ளனர். காவல்துறையில் தரப்பட்ட புகார்கள் ஏற்கப்படவில்லை.

mm

சமீபத்தில் மணிப்பூர் சென்றிருந்த தேசாபிமானி பத்திரிகையாளர் ஆண்டோ அக்காராவும் இதனை உறுதிசெய்துள்ளார். இம்பால் ஆயுதக் கிடங்குகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கொள்ளை யடிக்கப்பட்டன… அவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவை திரும்பக் கிடைத்த போதும் அவற்றை யார் கொள்ளையடித்தது என்ற கேள்விக்கு இதுவரை முறையான பதில் கிடைக்க வில்லை.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உறுதுணை வகித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காங்கிரஸ் நிர்வாகியுமான சசிகாந்த் செந்தில், மணிப்பூரில் நடப்பது கலவரமல்ல… இன அழிப்பு என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 6-ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர், “"இன்று மணிப்பூரில் நடப்பது, நாளை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம். மணிப்பூரில் ஒரு இன அழிப்பு நடந்துகொண்டி ருக்கிறது. அங்கே பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து காடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.

பழங்குடியினர்களுக்கு இடையிலான பிரச்சினையாக இதை திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. 2017 முதலே மணிப்பூரில் மதவாத அரசியலை பா.ஜ.க முன்னெடுக்க ஆரம்பித்தது. இப்போது ஒட்டுமொத்த பழங்குடியினர் பிரிவினரையும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லி குறிவைத்து, அரசாங்கத் துணையுடன் இன அழிப்பு என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

எந்த ஒரு இன அழிப்பும் அரசாங்கத்தின் உதவியில்லாமல் செய்யமுடியாது. நான் ஒரு கலெக்டராக இருந்துள்ளேன். இது அரசாங்க உதவியோடுதான் நடக்கிறது. மணிப்பூர் மக்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய உண்மையான விஷயங்களை, மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டுமென்ற எண்ணமே மத்திய அரசுக்குக் கிடையாது. மூடி மறைக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. நம் கவனத்தை வேறு விஷயங்களில் திருப்பிவிட்டு, முக்கியமான விஷயத்தை பேசவிடாமல் வைப்பது வழக்கமாக்கப்பட்டு இருக்கிறது. இம்பாலில் நடப்பதை இந்திய மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்''’என்று தெரிவித்துள்ளார்.

மெய்த்தி, குக்கி என இரு தரப்பும் வன்முறைக்கு ஆளாகி இடம் பெயர்ந்திருந்தாலும், பழங்குடியினர் அத்தோடு கிறிஸ்தவர்கள் என்பதால் குக்கி மக்களே பெருமளவு வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுவரை 70-க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் தேவாலயங்கள் தவிர்த்த கிறிஸ்தவர்களின் வீடுகள், கிறிஸ்தவ அமைப்புகளின் கட்டடங்கள் என 1,000 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிறிஸ்தவ அமைப்புகளிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

nkn140623
இதையும் படியுங்கள்
Subscribe