தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்குபெற்ற இந்த மாநாட்டில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞரும், சட்டமன்ற உறுப்பினருமான சோம்நாத் பாரதி தன் வீச்சுமிகு உரைமூலம் கூட்டத்தினரைக் கவர்ந்தார்.

Advertisment

"தி.மு.க. மாணவரணியினர், வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல்வாதிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவதில் வெற்றி பெற்றிருக்கி றார்கள்.

uu

ஒரு தவளையை கொதிக்கும் நீரில் போட்டால், அது உடனே தாவிக்குதித்து வெளியேறிவிடும். மாறாக, தவளையை நீரில் போட்டு மெதுமெதுவாகச் சூடேற்றினால் அது துள்ளிக்குதிக்காது. சூடு மெது வாக ஏறுவதால், நீரிலிருந்து உயிரை இழந்து விடும். அதுதான் இந்த தேசத்துக்கு நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

இன்று வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப் பட்ட டெல்லி அரசாங்கத்திடமிருந்து யாரைப் பதவியில் நியமிப்பது, யாரை நீக்குவது, யாரை இடமாற்றம் செய்வது போன்ற அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆள்பவர்கள் மெதுவாக வெப்பத்தை அதிகரித்துக்கொண்டிருக் கிறார்கள். எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் எவ்வளவு வெப்பத்தைத் தாங்குகிறார்கள் என சோதிக்கிறார்கள்.

டெல்லி மாநகராட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க ஆயத்தமாக இருந்தது. அப்போது பிரதமர் அலுவலகத் திலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் தேர்தலைத் தள்ளிப் போடச்சொல்லி தகவல் வருகிறது. நடைமுறையில் தேர்தல் ஆணையத் துக்கு யாரும், எந்த உத்தரவும் போடக் கூடாது. அப்படித்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வெளிப்படையாக, மத்திய அரசு தேர்தல் நடைமுறையில் தலையிடுகிறது, தள்ளி வைக்கிறது.

பின் அவர்கள் அடுத்ததைச் சோதிக் கிறார்கள். தமிழகத்தின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்கிறார். தமிழக மக்கள் ஒன்றுதிரளவில்லை. அடுத்ததாக மேற்கு வங்கத்தின் உரிமைகளில் தலையிடுகிறார்கள். பல்வேறு மாநில அரசுகள், டெல்லியின் கெஜ்ரிவால் அரசிலிலிருந்து பாண்டிச்சேரி யூனியன்பிரதேசம் வரை சிக்கலில் இருக்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும் போது, நாமெல்லாம் ஒன்றுகூடவேண்டும். அப்படி ஒன்று சேரவில்லையெனில் தவளையைப் போல அழிந்துபோவோம்.

Advertisment

ff

இன்று அறம் அரசியலிலிருந்து அகற்றப் படுகிறது. உங்களது உரிமைகள் பறிக்கப்படுகின் றன. அரசியலமைப்புச் சட்டம் பாதிக்கப்படுகிறது. அதெல்லாம் பிரதமரது பிரச்சினையில்லை. அவரது பிரச்சினை தேர்தல் மட்டும்தான். விவசாயிகள் போராட்டம் நமக்கு, ஒரு பாடம் கற்பித்தது. மதம், சாதி, அரசியல் இதையெல்லாம் கடந்து மக்கள் ஒன்றுதிரண்டால்… பா.ஜ.க.வினர் வெற்றிபெறுவது சாத்தியமல்ல என்பதைக் கற்றுத்தந்தது.

பா.ஜ.க., மோடி, மோடிக் கட்சித் தலைவர் களால் மக்களைப் பிரிக்க மதம் பயன்படுத்தப் படுகிறது. மதம் மக்களைப் பிரிக்காது. இந்து மதம் வசுவதைவ குடும்பகம் என்கிறது. அதன் பொருள், உலகமே ஒரு குடும்பம். அதில் டெல்லி, பஞ்சாப், இந்து, முஸ்லிம் எல்லோரும் அடக்கம். குர்ரான், கடவுள் ரபுல் ஆலமின் என்கிறது. அதன் பொருள் முஸ்லிமிற்கான கடவுள் என்பதில்லை. பிரபஞ்சத் திற்கான கடவுள் எனப் பொருள்.

கிறித்துவம் கடவுளின் அரசாங்கம் உனக்குள் இருக்கிறது என்கிறது. அப்படியே சீக்கியமும்- இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களிடையே ஒடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வும் இல்லாத அனைத்து மக்களின் உரிமைகளுக்குமான ‘பேகம்புரா‘ பற்றிச் சொல்கிறது.மதங்களே மக்க ளைப் பிரித்துப் பார்க்காதபோது, மதத்தின் பெயரால் நம்மைப் பிரித்தாள்வதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எண்ணற்ற மாணவர்கள் பா.ஜ.க.வால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

அவர்கள் கல்வியின்மை, வேலையின்மையை ஏன் கொண்டுவருகின்றனர்? அது ஒரு ஆயுதம். அதை நாம் கவனிக்கவேண்டும்.

டெல்லி அரை மாநிலம். யூனியன்பிரதேசம். பஞ்சாப் ஒரு முழு மாநிலம். மோடி பஞ்சாபில் தலையிடமாட்டார் என நினைத்தோம். அவர் அனைத்திலும் தலையிடுகிறார். இந்த அத்துமீறல் களை யாராவது சுட்டிக்காட்டாவிட்டால் உகாண்டாவில் நடந்ததுதான் இந்தியாவில் நடக்கும். 1970-ல் 18,000 இந்தியர் பிரிட்டிஷாரால் வங்கி சம்பந்தப்பட்ட வேலைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போதைய அதிபர் இடிஅமீன், உகாண்டா மக்களின் வேலைகளை, ஆதாரத்தை அந்நியர் எடுத்துக்கொள்வதாக பிரச்சாரம்செய்ய, அவர்கள் துன்புறுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டனர். அதன்பின்பும் உகாண்டாவினரின் நிலை மாறவில்லை. பார்த்தார் இடி அமீன், தான்சானியா மீது போரை அறிவித்தார். மோடியும்கூட விரைவில் பாகிஸ் தானுடன் ஒரு போரை அறிவிக்கலாம்.

மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அரசாங்கம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் முதலீடு செய்யும். மாணவர்கள் 12 வருடங்கள் கடினமாக உழைத்தால், அடுத்த கடைசி 18 வரு டங்கள் சிரமப்பட வேண்டியிருக்காது. தேசத்துக் கும் இதைச் சொல்லலாம். ஆட்சியின் முதல் கட்டத்தில் கல்வி, சுகாதாரத்தில் முதலீடு செய்யும் நாடு, அதன் கடைசிக் கட்டத்தில் சிரமப்பட நேராது.

நாம் தேசத்தைப் பற்றி கவலைப்பட, சிந்திக்க போதுமான அளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் சொன்ன தவளை கதை ஞாபகமிருக்கும். நாட்டைப் பாதுகாப்போம், மக்களைப் பாதுகாப்போம், அரசியலமைப்பைக் காக்கும் ஒரே கொள்கையே இப்போது நமக்குத் தேவை.''

தொகுப்பு: க.சுப்பிரமணியன்