Advertisment

1 கோடி ஓட்டு என்னாச்சு?  S.I.R. பட்டியல் பகீர்!

voters(SIR)

மிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்களை நீக்கி, அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது தேர்தல் ஆணையம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது இதைவிட கூடுதல் அதிர்ச்சி காத்திருக்கிறது என்கிறார்கள் தேர்தல் ஆணையத்தினர். 

Advertisment

பீகாரை அடுத்து தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிகளை (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது தேர்தல் ஆணையம். இரண்டு முறை கால நீட்டிப்பு கொடுக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14-ஆம் தேதி இந்த பணிகள் நிறைவுபெற்றன. இதனைத் தொடர்ந்து, 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை ரிலீஸ் செய்தார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். 

Advertisment

இதில் 97,37,832 வாக்காளர்கள் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி நீக்கப்பட்டிருக்கி றார்கள். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக, சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து அதிகபட்ச மாக செங்கல்பட்டு மாவட் டத்தில் 7 லட்சம், கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம், திருவள்ளூரில் 6 லட்சத்து 19 ஆயிரம், திருப்பூரில்  5 லட்சத்து 63 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ராமநாதபுரம், சேலம், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் முறையே 3 லட்சத்து 80 ஆயிரம், 3 லட்சத்து 62 ஆயிரம், 3 லட்சத்து 31 ஆயிரம், 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் என நீக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி அனைத்து மாவட்டங்களிலும் நீக்கம் நடந்துள்ளது. அந்த வகையில், சுமார் 1 கோடி வாக்காளர்களை நீக்கி, அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி யிருக்கிறது தேர்தல் ஆணையம். 

இதுகுறித்து பேசிய அர்ச்சனா பட்நாயக், "வாக்காளர் கணக்கெடுப்பு திரு

இதுகுறித்து பேசிய அர்ச்சனா பட்நாயக், "வாக்காளர் கணக்கெடுப்பு திருத்தப் பணியின் போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை வீடுதோறும்(?) சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள் ளன. இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881  ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97,37,831 பேர், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டி ருக்கிறார்கள்''’என்கிறார். இந்த நீக்கம் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில்,   இது குறித்து ஆராய தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த முதல் வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர் களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இடம்பெயர்ந்தவர் கள் என்று கூறி மட்டுமே சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர். பணிகள் துவங்கிய போதே தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பிருப்பதையும், பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் முன்கூட்டியே தெரிவித்து எச்சரிக்கை செய்தேன். அதேபோல, சுமார் 1 கோடி பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். 

voters(SIR)a

168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடி யில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்
டுள்ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள் ளார்கள். நாம் எவ்வளவு கவனமாக இருந்தும், ஒரே வாக்குச்சாவடியில், ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்த 4 பேர் விடுபட்டி ருக்கிறார்கள் எனில், நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்! 

நானே இவ்வளவு மைக்ரோ அளவில் பார்க்கிறேன் எனில், நீங்கள் எல்லாரும் இதனை எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொளுங்கள். கவனமாகப் பார்த்து சரிசெய்ய வேண்டியது, ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர்களின் பொறுப்பு. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலும், அதில் யாரெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் என்ற விவரங்களும் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விவரங்களை முழுமையாக சரிபார்த்து, விடுபடல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

நம்மை நேர்மையாக வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும், எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது. களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி.  டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது என்பதை செயலில் காட்டுங்கள்''’என்று அழுத்தமாக அறிவுறுத்தினார் ஸ்டாலின். 

1 கோடி வாக்காளர்கள் நீக்கத்திலுள்ள சதி களை பல அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின் றன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மோடி அரசின் கைப்பாவையாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதே வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான். வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை, எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்பட்ட 12 மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிகம். இதி லிருந்தே சனாதனவாதிகள் தமிழ்நாட்டைக் குறி வைத்து களம் இறங்கி யிருப்பதை புரிந்துகொள்ள லாம்'' என்கிறார் ஆவேச மாக. 

voters(SIR)b

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "தமிழக வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் எதிரிகளை மட்டுமல்ல; தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை தி.மு.க. தலைமை யிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது''’என்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் எம்.பி., ‘’முகவரி இல்லாதவர் கள் என 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் முகவரி இல்லாமல் தமிழகத்தில் இருக்கிறார்களா? அதாவது, சென்னையில் மூன்றில் ஒரு பகுதி வாக்காளர்கள், முகவரியே இல்லாதவர்களா? அதுதான் வியப்பளிக்கிறது. சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார். 

தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் 2002-க்கு பிறகு மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதனை சரியாகக் கையாண்டிருந்தால் 1 கோடி பேர் நீக்கம் என்ற அதிர்ச்சி நடந்திருக்காது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சீரியஸாக நடந்திருப்பதும் அதில் 1 கோடி பேர் நீக்கப்பட்டதும் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதியுள்ள வர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், தகுந்த ஆதாரங்களை சமர்பித்து மீண்டும் அவர்களின் பெயர்களை இணைத்துக்கொள்ள முடியும். 

ஆனால், அந்த ஆதார ஆவணங்களை முறையாக பட்டியலில் இணைப்பார்களா? என்பதில் சந்தேகம் உண்டு. ஏனெனில், தற்போது முகவரி இல்லாத வெளி மாநிலத்தவர்கள், சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமாரி, நெல்லை, திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வாக் காளர்களாக அறியப்பட்டவர்களின் குடும்பத்தின ரின் முகவரியை பயன்படுத்தி தனிநபராக பட்டியலில் இணைந்துள்ளனர். பூத் வாரியாக இதனை ஆராய்ந்தால் கண்ணுக்குத் தெரியாமல் நடந்திருக்கும் சதியைக் கண்டறிய முடியும். தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த வாக்காளர் மோசடி இணைப்பு நடந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது, தி.மு.க. ஆதரவு வாக்காளர்களின் நீக்கமும், பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்கள் சேர்ப்பும் அதிகமாக இருக்கும். அது இப்போதையவிட கூடுதல் அதிர்ச்சியை கொடுக்கப் போகிறது''’ என்கிறார்கள் தேர்தல் ஆணைய அலுவலக வட்டாரத்தினர். 

___________
தமிழக அரசு Vs ஒன்றிய அரசு! 

voters(SIR)box

மிழக அரசில் 1995-ஆம் வருட பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேருக்கு தலைமைச் செயலாளராக பதவி உயர்வளிக்க ஒப்புதல் வழங்கக் கோரி தி.மு.க. அரசு எடுத்த முயற்சியை ஏற்க மறுத்து விட்டது ஒன்றிய அரசு. 

இந்தச் சூழலில், 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசு அப்ரூவல் வழங்காத நிலையில், பதவி உயர்வு குறித்து விவாதிப்பதற்கான      ஸ்க்ரீனிங் கமிட்டி வருகிற 29-ந் தேதி தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. 

இந்த கமிட்டியில், மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனின் சேர்மனான கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸும் ஒரு உறுப்பினர். 29-ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கோபாலகிருஷ்ணனுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காத ஒரு விவகாரத்தில், ஒன்றிய அரசின் முடிவை புறக்கணிக்கும் வகையில், தமிழக அரசு கூட்டும் இந்த ஸ்க்ரீனிங் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முடிவில் கோபாலகிருஷ்ணன் இருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. 

இப்படிப்பட்ட சூழலில், ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் அமைச்சர் தலைமையில், துறையின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, ஒன்றிய அரசின் உத்தரவை மதிக்காமல், தமிழ்நாடு அரசு எப்படி கோபாலகிருஷ்ணனை அழைக்க கடிதம் அனுப்பியது? அதனால், கோபாலகிருஷ்ணனை கண்காணியுங்கள். ஸ்க்ரீனிங் கமிட்டியில் கலந்துகொள்ள அவர் சென்னை செல்லும் பட்சத்தில், அவருக்கு எதிராக, பிரதமர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பவேண்டும் என்று விவாதிக்கப்பட்டதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் கலந்து கொள்ளும் பட்சத்தில் மோடி அரசுக்கும், ஸ்டாலின் அரசுக்கும் பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என்கிறது கோட்டை வட்டாரம். 

என்ன நடக்கப்போகிறது? என்பதை உற்றுக் கவனித்து வருகிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.    

-இளையர்

nkn241225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe