செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரவிருக்கும் நிலையில், அவசரம் அவசரமாக அவர் மருத்துவமனையில் அட்மிட்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாக புழல் சிறையில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுவரை அவரது நீதிமன்ற காவல் 10 முறை நீட்டிக்கப் பட்டிருக்கிறது.
ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் அணுகிய போது அங்கும் அவரது ஜாமீன் மனு நிராகரிக் கப்பட்டது. அதாவது, அமலாக்கத் துறையின் கடுமையான எதிர் வாதங் களால் செந்தில்பாலாஜியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில், ஜாமீன் மனு நிரா கரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில்பாலாஜி. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கடந்த 31-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வந்தபோது
செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரவிருக்கும் நிலையில், அவசரம் அவசரமாக அவர் மருத்துவமனையில் அட்மிட்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாக புழல் சிறையில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுவரை அவரது நீதிமன்ற காவல் 10 முறை நீட்டிக்கப் பட்டிருக்கிறது.
ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் அணுகிய போது அங்கும் அவரது ஜாமீன் மனு நிராகரிக் கப்பட்டது. அதாவது, அமலாக்கத் துறையின் கடுமையான எதிர் வாதங் களால் செந்தில்பாலாஜியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில், ஜாமீன் மனு நிரா கரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில்பாலாஜி. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கடந்த 31-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, "இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர்கள் வேறு ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதால், இந்த நீதிமன்றத்திலுள்ள மற்ற வழக்குகளின் விசாரணையின் இறுதியில் எங்கள் வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்'” என்று செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல, "எங்கள் தரப்பில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வேறு ஒரு வழக்கிற்காக வேறு ஒரு நீதிமன்றத்தில் இருப்பதால் கால அவகாசம் வேண்டும்' என்று அமலாக்கத்துறையினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றத்தின் அன்றைய நாளின் கடைசி வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என செந்தில்பாலாஜி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கின் விசாரணையை நவம்பர் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள் (அனிருத்தாபோஸ், பீலா எம்.திரிவேதி).
இதனால், ஜாமீனில் விடுதலையாகி தீபாவளியை மகிழ்ச்சியாக செந்தில் பாலாஜி கொண்டாடுவார் என எதிர்பார்த்த அவரது குடும்பத்தினர் ஏமாற்றமடைந்தனர். சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியும் மனம் கலங்கினார். தீபாவளி அன்று அவரை சந்திக்கச் சென்ற சிறை அலுவலர்களைக்கூட அவர் பார்க்க விரும்ப வில்லை. மன உளைச்சலில் அவதிப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழல்களில்தான் 15-ந் தேதி மதியம் அவர் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. இடைவிடாத வாந்தி எடுக்க, அதையொட்டி அவருக்கு மயக்க மும் ஏற்பட்டிருக்கிறது. சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்ட நிலையில், மயக்கம் தெளிந்த செந்தில்பாலாஜி, கடுமையாக நெஞ்சு வலிப்பதாகவும் கூறியிருக்கிறார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு அரசின் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சிலிருந்து ஒருவரின் உதவியுடன் கைத்தாங்கலாக இறங்கிய செந்தில்பாலாஜி, மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். அவரை வீல் சேரில் அமரவைத்து மருத்துவமனைக்குள் அழைத்து சென்றனர். அவரிடம் டாக்டர்கள், என்னாச்சு எனக் கேட்க, தனக்கு நெஞ்சு வலியும் கழுத்து வலியும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, அவருக்கு இதயம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
அதன் ரிசல்ட்டை அறிந்து, ”இவருக்கு மேல்சிகிச்சை தேவைப்படுகிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்று ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் பரிந் துரைத்ததினால், ஓமந்தூரர் அரசு மருத்துவ மனைக்கு 15-ந் தேதி இரவே மாற்றப்பட்டார் செந்தில்பாலாஜி. இந்த மருத்துவமனையின் 6-வது மாடியில் அட்மிட் செய்யப்பட்ட பாலாஜிக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவின் அனைத்து பரிசோதனைகளையும் செய்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.
தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அதன் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு 16-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் செல்லவிருப்பதாக உளவுத் துறை தரப்பில் ஒரு செய்தி பரவியிருந்தது.
இது தொடர்பாக விசாரித்தபோது, "ஜாமீன் கிடைக்காததில் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார் செந்தில்பாலாஜி. உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்காது என்றே புலம்பிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. வழக்கறிஞர்கள் மீது அவர் நம்பிக்கை இழந்திருப்பதாகவே அவரது பேச்சில் தெரிகிறது. இந்த கவலையால் சரியாக சாப்பிடுவதில்லை. செந்தில்பாலாஜியின் இந்த நிலை குறித்த தகவல்களை முதல்வர் ஸ்டாலினும் அறிந்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், 15-ந் தேதி மதியம் அவர் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட்டானார். தனது அமைச்சரவை சகாவான செந்தில்பாலாஜியின் உடல் நலத்தை விசாரிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. அந்த வகையில் அவரை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், "நானும் கட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்; கவலைப்படாதீர்கள்; எல்லாம் சரியாகும். நீங்கள் மன உறுதி படைத்தவர், உங்களுக்கு எதுவும் ஆகாது. விரைவில் உங்களுக்கு ஜாமீன் கிடைக்கும்' என்கிற ரீதியில் நம்பிக்கையை கொடுக்க முதல்வர் ஸ்டாலின் விரும்பினார்''” என்கிறார்கள் உளவுத்துறையினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இம்முறை ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.