"அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என் மண்டையை வெட்டி எதையோ கண்டுபிடிக்க முயன்றனர். எதுவும் கிடைக்கவில்லை. அனைத்தும் காலி. அதனால் கைவிட்டு மண்டையில் ஒட்டுப் போட்டனர். இதோ நான் தில்லியில், மண்டையில் ஒட்டுப் போட்டதுடன் இருக்கிறேன். ஆனால் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என அறுவைச் சிகிச்சைக்குப் பின் எடுத்த வீடியோவில் பேசியிருக்கின்றார் ஜக்கி வாசுதேவ். அவர் கூறியதுபோல் மண்டையில் ஓட்டை போடவேண்டிய அவசியமென்ன..?

பிரிக்கமுடியாதது எது என்றால் சர்ச்சையையும், ஜக்கி வாசுதேவையும் கூறலாம். யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்ததும், காடுகளை அழித்து பழங்குடிகளின் வாழ்க்கையைப் பறித்ததும் என, துவக்ககால சர்ச்சைகளோடு கட்டப்பட்டது ஈஷா மையம். பின்னாளில் ஆண், பெண் துறவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மொட்டையடித்து மூளைச் சலவை செய்து ஊதியமே இல்லாமல் பணியில் சேர்த்திருப்பதாகவும், ஈஷாவில் அதிகளவில் போதை மருந்துகள் உபயோகிக்கப்படுவதாகவும், இதனால் சில கொலைகள் நடந்திருப்பதாகவும் அவ்வப்போது பல சர்ச்சைகள் ஈஷாவின்மீதும், ஜக்கிமீதும் வலம் வந்த வண்ணமிருந்தன. அதுபோல் சிவராத்திரியன்று ஒலி, ஒளி மாசுக்களால் மக்களும், விலங்குகளும் பாதிப்படைகின்றனர் என கூறினாலும் நடிகர், நடிகைகளை வைத்து கும்மாளமிடுவதிலேயே கவனம் செலுத்தியது ஈஷா. அத்தனை சர்ச்சைகள் குறித்தும், ஈஷா லி ஜக்கியின் கொடுஞ்செயல்கள் குறித்தும் நக்கீரன் மக்களிடம் கொண்டுசேர்த்தது.

jagi

பிரபல பத்திரிகையாளரான ஆனந்த் நரசிம்மன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், " ஈஷா வின் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான தலைவலியில் இருந்தார். தலைவலி காரணமாக டெல்லியைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் வினித் சூரியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் ஆலோசனையின்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் ஜக்கி வாசுதேவ். மகா சிவராத்திரி நாளில் அது அதிகமானது. பின் னாளில் கடந்த 14-ஆம் தேதி டெல்லி இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் ஆஜரான நிலையில், அதேநாளில் மாலை 4:30 மணிக்கு ஜக்கிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் மூளையில் பெரிய ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும், முந்தைய 3-4 வாரங்களில் நீடித்த இரத்தக்கசிவு இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இது ஆபத் தான கட்டம் என்றாலும் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டுவரு கின்றார்'' என பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அது உண்மைதான்.. எனினும் அவர் முன்னேறிக் கொண்டு வருகின்றார் என ஈஷாவும் அறிக்கை வெளியிட்டது.

Advertisment

"சிவராத்திரி எனும் பெயரில் நடிகை களைக் கொண்டு கல்லா கட்டினாரே அந்த ஒலி, ஒளி வெள்ளமும், அளவுகடந்த போதைமருந்து உபயோகமும் ஜக்கியைப் பழிவாங்கிவிட்டது. எங்களது குழந்தைகளைப் பிரித்து மொட்டையடித்து, சம்பளமே இல்லாமல் ஆசிரமப்பணி செய்யவிட்டார் ஜக்கி. அந்த சாபமும் ஜக்கியை இந்தளவிற்கு ஆளாக்கியிருக்கும். ஒரு மனிதன் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், மரணத்தறுவாயில் இருந்தால் மனிதாபிமான அடிப்படையில் வருத்தம் வரும். ஆனால் ஜக்கியின் இந்த நிலை குறித்து எவருக்கும் வருத்தம் வரவில்லை. ஓவர் டோஸ்தான் காரணம் என்பதுபோல் பேசுகிறார்கள். அந்தளவிற்கு மக்கள் அவர் மீது வெறுப்பாய் இருக்கின்றார்கள்'' என ஜக்கியின் நிலைகுறித்துப் பேசினார் மகள்களை ஆசிரமத் தில் பறிகொடுத்த பேராசிரியர் காமராஜ்.

இது இப்படியிருக்க, "அவரு இறைவன் தானே..? ஆஸ்பத்திரிக்கு எதுக்கு வரணும்'', "மூன்றாவது கண்ணைத் திறந்து காப்பாத்தி யிருக்கலாமே.?, அறிவியலை எதுக்கு நம்ப ணும்..?'', "ஆதியோகியோட அருள் இவனுக்கே கிடைக்கலை.. இவன் ஏமாத்துக்காரன்'' என்பது போன்று வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

dd

Advertisment

ஈஷாவின் வாலண்டியர் ஒருவரோ, "அப்பல்லோவில் ஜெ. இட்லி சாப்பிட்ட கதைதான் இதுவும். ஜக்கி அனுப்பிய வீடியோ ஆபரேஷனுக்கு முன்னா? பின்னா? என யாருக்கும் தெரியாது. 14-ஆம் தேதி ஆபரேஷன் செய்ததை இப்பொழுது வெளியிடுவதன் நோக்கம் என்ன..? ஜக்கியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் எதிர்ப்பு அதிகமாகவே கர்நாடகாவில் ஈஷா கட்டினார். அங்கும் எதிர்ப்பு அதிகமானது. இந்தியாவே வேண்டாமென்று அமெரிக்காவில் தன்னுடைய மகளுடன் இறுதிக்காலத்தை கழிக்க விரும்பினார் சத்குரு. ஆனால், அவரை அங்கு செல்லவிடவில்லை சிலர். சொத்துக்காக ஆசைப்பட்டு இங்கேயே சிறைவைக்க முயன்றனர். அன்றைய தினத்தில் மயங்கி பேச்சுமூச்சற்று விழுந்த நிலையிலேயே ஜக்கியை மீட்டு டெல்லிக்குக் கொண்டு சென்றனர். அவரை மிரட்டி சொத்துக்களை தன் வசப்படுத்த நினைக்கின்றனர் சிலர். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னராக ஈஷா வைச் சேர்ந்த ஒருவர் ஜக்கிக்குத் தெரியாமல் டெல்லியில் சொத்து வாங்கியுள்ளார். அது ஜக்கிக்கு தெரிந்த நிலையில், அவரை மிரட்டி ஜக்கி ஆசிரமத்திற்கு அந்த சொத்தை மாற்றினார். அதனுடைய வெளிப்பாடாகக்கூட இது இருக்கலாம். மொத்தத்தில் ஒரு நாடகம் நடக்கின்றது'' என்கிறார் அவர்.

சர்ச்சைகளுக்கு ஜக்கி தெம்பாக விளக்கமளிப்பாரா?