"ஹலோ தலைவரே, தலை சுற்றல் காரணமாக அப்போலோவில் அட்மிட் ஆன முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடியே நிர்வாகப் பணிகளைச் செய்துவருகிறார்.''”
"ஆமாம்பா, முதல்வரின் இந்த மனஉறுதி தமிழக மக்களை நெகிழ வச்சிருக்கு.''”
"உண்மைதாங்க தலைவரே, மருத்துவ மனையிலாவது முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுப் பார்னு பார்த்தால், அங்கும் கூட அவர் பிஸியாகவே இருக்கிறார். தனது திருமதி துர்கா ஸ்டாலின் எழுதிய ’"அவரும் நானும்' நூல் வெளியீட்டு விழாவை, மருத்துவ மனையில் இருந்தே லைவ்வில் கண்டுகளித்தவர், மாவட்ட ஆட்சியர் களுடன் காணொலியில் கலந்துரை யாடினார். அதோடு, கோட்டையில் உள்ள உயரதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். அதேபோல் ’"உங்களுடன் ஸ்டாலின்'’ என்கிற திட்டத்தின் பயனாளி கள் சிலருடனும் அவர் காணொலியில் உரையாடினார். இதில் சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறின. அவர் உரையாடியபோது, கோவை 7ஆவது வார்டைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்மணி, முதல்வரின் உடல்நலத்தை நெகிழ்ச்சியோடு விசாரித்துவிட்டு, ‘ "நான் அரசு முகாமில் விண்ணப்பித்த உடனேயே எனக்கான வீட்டு வரி பெயர் மாற்ற ஆணையும், புதிய குடிநீர் இணைப்புக்கான ஆணையும் வழங்கப்பட்டு விட்டது' என்று தனது ஆச்சரியத்தை மனம் குளிர்ந்துபோய் பகிர்ந்துகொண்டு, நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், "இம்மாதிரியான முகாம்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.”
"சரிப்பா, "கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல' என்று சொன்ன எடப்பாடி மீது அமித்ஷா கோபமாக இருக் கிறார்னு சொல்லப்படுதே?''”
"அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி அமைந்திருந்தாலும், கூட்டணி ஆட்சி என்கிற கோட்பாட்டில் பா.ஜ.க.வுடன் முரண்பட்டு வருகிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி. குறிப்பாக, 2026-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தொடர்ச்சியாக பா.ஜ.க. தலைவர்கள் பேசிவருவதால், கடுப்பான எடப்பாடி, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தார். அவரது இந்த ஸ்டேட்மெண்ட் அமித்ஷாவை கோபப்படுத்தியதாம். அதேசமயம், கூட்டணி ஆட்சி என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைமை வரும் என்று, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மூலம் அமித்ஷாவுக்கு தகவல் சொல்லியிருந்தார் எடப்பாடி. அதற்கு அமித்ஷா, ’"எங்கள் கூட்டணியை உதறினால், உங்களுடன் விஜய் கூட்டணி அமைப்பார்னு எடப்பாடி மனப்பால் குடிக்கிறார். விஜய் உங்கள் பக்கம் வரமாட்டார். தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அ.தி.மு.க.வுக்குப் போகக்கூடாது என்றும், அதை விஜய்யும் சீமானும் வாங்க வேண்டும் என்றும் தி.மு.க. நினைக்கிறது. இதை விஜய்யும் புரிந்துவைத்திருக்கிறார். எனவே, எடப்பாடியிடம் எதார்த்தைப் புரிந்துகொள்ளச் சொல்லுங்கள்'’என்றிருக்கிறார். இதையறிந்த எடப்பாடி, "நம்மை குழப்பப் பார்க்கிறார் அமித்ஷா' என்று கமெண்ட் செய்தாராம். இது பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.''”
"இந்த நிலையில் ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் விவகாரத்தில் எடப்பாடி கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் என்கிறார்களே?''”
"முதலில் ஓ.பி.எஸ். மற்றும் அ.ம.மு.க. தினகரன் ஆகியோர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக இருக்கிறார்களாம். அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருக்கும் எடப்பாடியிடம், "தினகரனின் கட்சி உங்கள் கூட்டணியில் சேருமா?' என்று கேட்கப்பட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், "காலம் பதில் சொல்லும்' என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதேசமயம் ஓ.பி.எஸ். பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "அதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை' என்று அவர் சொன்னார். எனினும் "டெல்லியின் விருப்பத்திற்காக, இரு வரையும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த் துக்கொள்வதற்கான மூவ்கள் நடந்து கொண்டிருக்கின்றன' என்கிறார்கள். கார ணம், அ.தி.மு.க. மாஜி மந்திரி அன்வர்ராஜா தி.மு.க.வுக்கு சென்றதுபோல், அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பலரும் தி.மு.க.வுக்குச் செல்ல இருப்பதாக, வந்த செய்தியால் எடப்பாடி அரண்டுபோய்விட்டாராம். அதனால்தான் ஓ.பி.எஸ். விசயத்தில் அவர் சற்று இறங்கிச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஓ.பி.எஸ். தங்கள் பக்கம் வருவதால் இரட்டை இலை பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறாராம் எடப்பாடி.''”
"நூற்றுக்கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக, கர்நாடக மாநில தர்மசாலா கோயிலில் இருந்து எழுந்திருக்கும் பகீர் புகார் விவகாரத்தில், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்கிறார்களே?''”
"கர்நாடக மாநில தர்மசாலா மஞ்சுநாதர் கோவிலில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் விசுவரூபம் எடுத்துவருகிறது. இந்த கோயில் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இருவரின் பெயர் அடிபட்டுவருகிறது. அதாவது, இந்த கோயில் அமைந்திருக்கும் தட்சன கன்னடா மாவட்ட எஸ்.பி.யாக முன்பு இருந்தவர், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர். அவர் இருந்த வரை வில்லங்கக் கோயில் தரப்பிற்கு, அனுசரணை யாகவே இருந்தார் என்கிறார்கள். இதன் பின்னர்தான் அவர், பா.ஜ.க. பிரமுகர்களான சிடி.ரவி, பி.எல்.சந்தோஷால் பா.ஜ.க.வில் ஐக்கியமானாராம். இதேபோல், தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ், அந்த மஞ்சுநாத் கோயிலில் அதிகாரியாக இருந்தாராம். அப்போது, தர்மசாலாவில் நடக்கும் அத்துமீறல்களை அவர் எதிர்த்திருக்கிறார். இதனால் கடும் எதிர்ப்பைச் சந்தித்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமானார் என்கிறார்கள். இதுபோன்ற செய்திகள், அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.''”
"ஆனாலும் இந்த இருவரும் மஞ்சுநாதர் கோயில் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லையே?''
"ஆமாங்க தலைவரே... அதே சமயம், தற்போது தர்மசாலா கோயில் இருக்கும் மாவட்டத்தில், எஸ்.பி.யாக இருப்பவர், நம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவர்தானாம். அவர், அந்தக் கோயிலில் தவறுகள் நடந்திருக்கிறது என்று, தனக்கு வந்த 13 புகார்களைத் தொகுத்து, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு அனுப்பியிருக்கிறாராம். இவர் புரட்சிகர மனோபாவம் கொண்டவராம். எனவே அங்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் அம்பலப் படுத்த வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறாராம். தற்போது இந்த தர்மசாலா விவகாரம் குறித்து அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் அனுசேத் என்ற அதிகாரி துடிப்பு மிக்கவராம். இவர், இதே தர்ம சாலா பகுதியில் நடந்த ஒரு கொலை விவகாரத்தை விசாரித்து, கூட்டுப் பாலியல் கொடுமை நடந் திருக்கிறது என்று அழுத்தமாகத் தெரிவித்தவராம். இவர்கள் அங்கு களமிறங்கியிருப்பதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.''”
"பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் மகாராஷ்டிர கவர்னரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, டீலிங்குகளை நடத்துகிறாராமே?''”
"தமிழக பா.ஜ.க.வின் மாநில செயலாளராக இருப்பவர் வினோஜ் பி.செல்வம். இவருக்கு மிளகாய்ப் பொடி வெங்கடேசன் உள்ளிட்ட கிரிமினல் பேக்ரவுண்ட் உள்ள பலரிடமும் நெருங்கிய நட்பு இருப்பதாக பா.ஜ.க.வில் குற்றச்சாட்டு வலுத்திருக்கிறது. இது குறித்த சர்ச்சைகளும் கடந்த மாதம் பகிரங்கமாக எழுந்தது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ் ணனை அண்மைக்காலமாக சந்தித்து வருகிறார் செல்வம். இந்த சந்திப்பை வைத்து, கவர்னர் மாளிகையில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். இவற்றின் அடிப்படையில் தொழிலதிபர்கள் பலரிடமும், மகாராஷ்டிர கவர்மெண்டில் உங்களுக்குத் தேவையானதை சாதித்துத் தருகிறேன் என்று பிசினஸ் பேசி வருகிறாராம் செல்வம். இந்த விவகாரம் இப்போது கமலாலயத்திலும் பலமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.''”
"டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரி ஒருவர் ரகசியங்களைக் காற்றில் பறக்கவிடுவதாகப் புகார்கள் வருகிறதே?''”
"டெல்லியில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லம் என்பது மினி செக்ரட்டரியேட்போல் செயல்படக்கூடியது. இங்கு ரெசிடெண்ட் கமிஷனராக ஆஷிஸ்குமார் ஐ.ஏ.எஸ். இருக்கிறார். தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து பிரதமர் அலுவலகம் உட்பட மத்திய அரசு துறை களுக்கு முக்கிய தகவல்கள் சொல்லப் படுவதாக இருந்தால், இவர் வழியாகத் தான் செல்லும். அந்த அளவுக்கு முக்கிய கேந்திரமாக இருக்கிறது தமிழ்நாடு இல்லம். சமீபகாலமாக தமிழ்நாடு இல் லத்தில் அரசு ரகசியங்கள் பாதுகாக்கப் படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் மத்திய உள்துறையிடம் எதிரொலிக் கிறது. குறிப்பாக, சீக்ரெட் விவகாரங்களைப் பாதுகாக்க வேண்டிய ரெசிடெண்ட் கமிஷனர் ஆஷிஸ்குமார், அதுபற்றிக் கவலையில்லாமல், அனைத்துத் தகவல்களையும் அங்குள்ள அலுவலர்களிடம் நேரடியாகவும், வாட்ஸ்ஆப் மூலமும் பகிர்ந்து கொள்கிறாராம். சிலர் இதையெல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தங்கள் நட்பு வளையத்திலுள்ள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறார்களாம். இது தொடர்பான புகார்கள் இப்போது டெல்லியில் சிறகடிக்கின்றன.''”
"முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் மறைவு கேரள மக்களைக் கலங்க வைத் திருக்கிறதே?''”
"கேரளா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான வி.எஸ். என அழைக்கப்படும் அச்சுதானந்தன், தனது 102 ஆவது வயதில், காலமானார். 2019-ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த மாதம் 23ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், 28 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில்தான் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. இவரது மரணம், கேரள கம்யூனிஸ்டுகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. 7முறை எம்.எல்.ஏ., 3 முறை எதிர்க்கட்சித் தலைவர், ஒரு முறை முதல்வர், 12 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயலாளர் என பதவி வகித்தபோதும் தனது 82ஆவது வயதில் முதல்வர் ஆனபோது பிளாச்சிமடத்தில் கோகோ கோலா நிறுவனத்துக்கு எதிராக போராடி அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுத்தார். இப்படி மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். கட்சி தவறும் செய்தாலும் அதைத் தட்டிக் கேட்பதோடு, கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் கேள்வி கேட்கும் துணிவாளராகவும் இருந்தார். இதனால் 2007-ல் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இருந்து அவர் நீக்க பட்டார். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட போராளி யின் இறுதிச் சடங்குகள், அவ ருடைய சொந்த ஊரான ஆலப் புழையில் அரசு மரியாதையுடன் நடந்தது. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.''’
"ஒரு காவல்துறை அதிகாரி தனக்கான லஞ்சத்தைத் தங்கமாக வாங்குகிறார் என்கிறார்களே?''’
"தங்கம், கஞ்சா, மெத்தபட்டமைன் உள் ளிட்டவைகளை அந்நிய நாடுகளுக்குக் கடத்தும் கடலோர மாவட்டத்தில், "மகிழ்ச்சி'யான பெயர் கொண்டவர் எஸ்.பி.யாக இருக்கிறார். அவர், ஏ.எஸ்.பி.யாக இருந்த காலம்முதல் இன்றுவரை, கடலோர மாவட்டங்களிலேயே பணிபுரிவதால், கடலோர சமாச்சாரங்கள் இவருக்கு அத்துப்படி. அதனால் அனைத்து சமாச்சாரங்களிலும் புகுந்து விளையாடுகிறார். "எனக்குக் கொடுக்கும் லஞ்சத்தை பணமாகக் கொடுக்காதே... தங்கமாகக் கொடு'’என்று உரியவர்களிடம் கறப்பதில் அவர் கில்லாடியாம். இந்த நிலையில், தன் வாகனத்தை காவல்துறை முடக்கி வைத்திருக்கிறது’ என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் அணுகியிருக்கின்றார். இதைத் தொடர்ந்து அந்த வாகனத்தை விடுவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தும், அந்த ஒப்பந்ததாரரிடமும் தங்கத்தைக் கறந்துகொண்டுதான் வாகனத்தை ஒப்படைத்தாரம் அந்த எஸ்.பி.''”’
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். நடிகர் விஜய், வருகிற தேர்தலில் பெரும் வெற்றிபெறுவோம் என்று நம்பி இருந்தார். இப்போது அவருக்குக் கிடைத்த சில ரகசிய சர்வேக்களால், அந்த நம்பிக்கையை இழந்துவிட்டாராம். அவை செய்த மேஜிக்கு களால், அவர் இப்போது அடுத்த படத்துக்கு தயாராகிறார் என் கிறார்கள். அவர் இப்போது இயக்குநர் நெல்சனிடம் கதை கேட்டு வருகிறாராம்.''